செவ்வாய், 21 மார்ச், 2017

பார்ப்பனன் பார்த்தனன்பாவாணர் பார்ப்பனர் சொல்வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

11/6/16
பெறுநர்: எனக்கு
ஆரியப்படை கடந்த நெடெுஞ்செழியன் நெடுஞ்செழியன்
பார்ப்பனர் பிராமணரா ?
புலவர் ,ஆசிரியர் , பூசாரியர் ,
ஓதுவார் , கணக்கர் எனப் பல்வேறு பெயர் பெற்றுக் கல்வித் தொழில் புரியும்
இல்லற வகுப்பார் பார்பார் ஆவர்.
நூல்களைப் பார்ப்பவர்
பார்ப்பார் , அல்லது பார்பனர் ,
பார்ப்பனன் என்னும் சொல் பிராமணன் என்பதன் திரிபன்று.
பார்த்தனன் ,
பார்க்கின்றனன் , பார்ப்பனன் என்னும் ' அனன் ' ஈற்றுச் சொற்கள் ;
பார்த்தான் , பார்க்கின்றான் , பார்ப்பான்
என்னும் ' ஆன் ' ஈற்றுச் சொற்களின் மறு வடிவங்களாகவேயிருத்தல் காண்க. (பக்கம் 174)
குறித்த இடத்தில் போர் தொடங்குமுன் , அக்கம் பக்கத்துள்ள தனிப்பட்ட
ஆக்களையும் ஆவைப்போல்
அமைந்த இயல்புள்ள அறிஞரையும் ,பெண்டிரையும்
நோயாளிகளையும் பிள்ளை
பெறாத மகளிரையும் , அவ்விடத்தை விட்டகன்று
பாதுகாப்பான இடத்திற்
சேர்ந்து கொள்ளுமாறு முன்னறிவிப்பது மரபு.
" ஆவும் ஆனியற் பார்ப்பன
மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும்
பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கடன்
இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
என்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை
மறத்தின் "
என்று புறநானூற்றுச் செய்யுள் (9) கூறுதல் காண்க.
பார்ப்பார் என்பது , ஆரியர்
வருமுன் தமிழ்ப் பார்ப்பனரையும் , அவர் வந்தபின் பிராமணரையும்
குறித்தது.(பக்கம் 184)
சான்று : பக்கம் 174 & 184.
" பண்டைத் தமிழ் நாகரீகமும்
பண்பாடும் ."
ஞா.தேவநேயப்பாவாணர்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம் ,
தியாகராய நகர்,
சென்னை 600017. தொலைபேசி :044 24331510

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக