செவ்வாய், 21 மார்ச், 2017

சிங்கப்பூர் தமிழ் தொண்டு

aathi tamil aathi1956@gmail.com

18/7/16
பெறுநர்: எனக்கு
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்னும் கூற்றிக்கு இணங்க சிங்கப்பூர்
நாடு அளவில் சிறியதாக இருந்தாலும் தமிழ் மொழியை உலக அரங்கில்
முன்னெடுத்து செல்வதில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.

தமிழில் முதன்முதலாக (Singapore’s Pioneering Efforts In Tamil Language)

-தமிழ் நாட்டு அரசாங்கம் அறிவித்த 13 தமிழ்ச் சீர்திருத்த எழுத்துகளை
அமலாக்கம் செய்த நாடு சிங்கப்பூர்.(1983)

-தமிழ்மொழியில் தொடக்கப் பள்ளிகளுக்காக மின்னியல் பாடங்களை(SMART)
முதன்முதலில் உருவாக்கிய நாடு சிங்கப்பூர்.(1991)

-உலகத் தமிழாசிரியர் மாநாட்டை முதன்முதலில் தோற்றுவித்த நாடு சிங்கப்பூர்.(1992)

-அனைத்துலகத் தமிழ் இணைய மாநாட்டை முதன்முதலில் தொடக்கி வைத்த நாடு
சிங்கப்பூர். (1997)

-உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முதன்முதலில் கூடிய நாடு சிங்கப்பூர்.(2011)

-உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாட்டை முதன்முதலில் தொடக்கி வைத்த
நாடு சிங்கப்பூர்.(2012)

-சிங்கப்பூரில் முதன்முதலாக ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் பற்றி
ஆய்வரங்கு நடைபெற்றது.(1971)

-ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களால் முதன் முதலில் சிங்கப்பூர்ப்
பள்ளிகளுக்காக தமிழ்ப்பாடநூல்களும், பயிற்சிநூல்களும்
உருவாக்கப்பட்டன.(1973)

-சிங்கப்பூரில் பல்கலைக்கழக அளவில் முதன்முதலாகத் தமிழ்க் கருத்தரங்கம்
சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையால் நடத்தப்பட்டது.(1977)

-கல்வி அமைச்சு, பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் என்ற பிரிவு ஒன்றைத்
தோற்றுவித்தது. அதில் முதன்முதலாகத் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்
பள்ளிகளுக்கான தமிழ்ப்பாடநூல், பயிற்சிநூல், பயிற்று கருவிகள் உள்ளூர்
ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.(1983)

-தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்க் கருத்தரங்கு யீசூன் தொடக்கக்
கல்லூரியில் முதன்முதலாக நடத்தப்பட்டது.(1986)

இடம்: சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி மரபுடைமையகம், உமறுப்புலவர் தமிழ்மொழி
நிலையம் (சிங்கப்பூர்)

 நித்திஷ் செந்தூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக