ஞாயிறு, 19 மார்ச், 2017

7016 கோடி கடன் தள்ளுபடி பணமுதலை 500 1000 பணத்தாள் இதற்குத்தான் ரத்தா? பொருளாதாரம் மோடி வங்கி முதலாளித்துவம்

aathi tamil aathi1956@gmail.com

17/11/16
பெறுநர்: எனக்கு
[16/11 15:54] ‪+91 97686 00851‬: பாருங்கள்.. மக்கள் பணத்தை எல்லாம்
வங்கியில் செலுத்த தொடங்கினால் பொருளாதாரம் உயரும், விலைவாசிகள்
குறையும், கருப்புப்பணம் ஒழியும், அது கிழியும் என்றார்கள்..
ஆனால் மக்கள் பணம் வந்ததும் அவர்கள் செய்த முதல் நடவடிக்கை தனியார்
முதலாளிகளின் கட்டாத 7016 கோடி கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்தது தான்..
# இதை விட ஒரு பச்சை துரோகம் இருக்க முடியுமா??

- Packiarajan Sethuramalingam
[16/11 19:49] ஆதி பேரொளி: இன்று ஸ்டேட் பேங்க் செய்த கடன் தள்ளுபடியில்
மல்லையாவை விட மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர் மத்திய பிரதேசத்தைச்
சார்ந்த "ரமேஷ் சந்த் கார்க்" என்பவர் தான்..

K.S Oils Ltd என்ற எண்ணை நிறுவனத்தின் சேர்மன் இந்த ரமேஷ் சந்த் கார்க்.
1985யில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 2008-2009 வருடத்தில் 3௦௦௦ கோடி
அளவிற்கு வருமானத்தை ஈட்டி மிகப்பிரமாண்டமாக வளர்ந்தது. இந்தோனேசியாவில்
50000 ஏக்கரில் பனை விவசாயம் செய்து பாமாயில் தயாரித்து உலகமெங்கும்
ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக இருந்தது.. 2010 ஆண்டு நடந்த வருமானவரி
சோதனை பொழுது வரி ஏய்ப்பு செய்தது கையும் களவுமாகப் பிடிக்கபட்டு 156
கோடி அபராதம் கட்டினார் ரமேஷ் சந்த் கார்க். 2011க்குப் பின் தொழிலில்
அவருக்கு முழுவதும் இறங்கு முகம் தான். ஸ்டேட் பேங்கில் வாங்கிய கடனுக்கு
அனைத்து எண்ணெய் ஆலைகளும் ஏலத்திற்கு வந்து நிற்கிறது.

இன்று அந்த ரமேஷ் சந்த் கார்க்கின் K.S Oils Ltd ஸ்டேட் பேங்கில் வாங்கிய
596 கோடி கடனையும் சேர்த்து தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.. இதில் என்ன
கவனிக்கப்பட வேண்டியது என்கிறீர்களா?

ரமேஷ் சந்த் கார்க் மத்திய பிரதேச பிஜேபியின் வர்த்தகப் பிரிவு தலைவர்.
வருமானவரி ஏய்ப்பு செய்த அடுத்த வருடத்தில் தான் அவரை அம்மாநில வர்த்தகப்
பிரிவு தலைவராக்கியது பாரதிய ஜனதா கட்சி.

# யாருக்கு இந்த அரசு வேலை செய்கிறது என்று இப்பொழுதாவது தெரிகிறதா?
இன்னமும் மோடியை நம்புகிறீர்களா?

நன்றி
பாக்கியரசன் சேதுராமலிங்கம்
நாம் தமிழர் கட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக