சனி, 24 பிப்ரவரி, 2018

தமிழர்நாடு உளவுத்துறை சிந்தனை விவாதம் ஆமை சின்னம் பற்றி

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

Aathimoola Perumal Prakash
தமிழர்நாட்டு உளவுத்துறை
ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் ராணுவம் மற்றும் உளவுத்துறை ஆகியன.
இஸ்ரேல் என்ற குட்டிநாடு சுற்றிலும் பெரிய பெரிய அரேபிய நாடுகளை தூக்கிப்போட்டு பந்தாடி கம்பீரமாக நடுவில் வீற்றிருக்க அதன் உளவுத்துறையான மொஸாட் முதல் காரணம்.
தமிழர்நாடு அமையும்போது அதன் அதிபராகவோ முப்படைகளின் தலைவர்களாகவோ தமிழினத்தவர் யார்வேண்டுமானாலும் வரலாம்.
மற்ற அரசியல் பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கு தமிழர்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழர்நாட்டு குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால் உளவுத்துறை அவ்வாறு இருக்கக்கூடாது.
அதன் தலைமை தமிழினத்தார் கையில் இருப்பதுடன் தமிழர்களிலேயே மிகவும் நம்பகமானோர் மட்டுமே தலைமைப் பதவிகளில் இடம்பெற வேண்டும்.
அதாவது உளவுத்துறையின் தலைவர் மற்றும் அதற்கடுத்த மூன்று அடுக்குகளில் இருப்போர் (தமிழினத்தவர்) கீழ்க்கண்டோராக இருக்கக் கூடாது
* பார்ப்பனர்
* இசுலாமியர்
* கிறித்தவர்
* பிற வெளிநாட்டு மதங்களை தழுவியோர்
* வெளிநாட்டில் பிறந்தோர்
* வேற்றினத்தார் மத்தியில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தோர்
* தமிழரல்லாதோரை திருமணம் செய்தோர்
* தமிழர்நாட்டுக்கு வெளியே தனது குடும்பத்தை வைத்திருப்போர்
(பெற்றோர், மனைவி, பிள்ளைகள்)
* 30 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்யாதோர் மற்றும் 35 வயதாகியும் குழந்தை பெறாதோர்
* தமிழரல்லாத குழந்தையை தத்தெடுத்தோர்
மேற்கண்டவை தமிழர்நாடு அமையும்போது அதாவது தமிழர் தாய்நிலம் தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு யாரெல்லாம் தமிழர் என்று சான்றிதழ் வழங்கியபிறகு அதிகாரப்பூர்வமாக நிறுவப்படும் உளவுத்துறைக்கான விதிகள்.
தமிழர்நாடு அமையும் முன்பு ஒரு உளவுத்துறை நிறுவப்பட்டால் அதன் தலைமை அடுக்கானது
தமிழகம் மற்றும் ஈழத்தில் (எல்லை மாவட்டங்கள் அல்லாத மாவட்டங்களில்) தமிழ்ச்சாதியில் பிறந்து தமிழர்கள் மத்தியில் வளர்ந்த இசுலாமிய கிறித்துவர் அல்லாதோரிடம் இருக்கலாம்.
சுருக்கமாகக் கூறவேண்டுமானால்,
உளவுத்துறையில் முதல் நான்கு அடுக்குகள் முடிந்த அளவு வேற்றினத் தொடர்பு அல்லாமலும் முடிந்த அளவு தமிழ்த் தாய்நிலத்துடன் பிணைப்பு கொண்டும் இருக்கவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு திருமணம் செய்வதை தமிழர்நாட்டில் கட்டாயமாக்கவேண்டும்.
திருமணம் ஆகாத ஒருவருக்கு சமூகத்தைப் பற்றிய புரிதலும் கவலையும் இருக்காது மற்றும்
துணை இல்லாமல் உடலியல் மனவியல் தேவைகள் பூர்த்தியடையாது ஆதலால் அவரால் சரியான நோக்கில் சிந்தித்து செயல்படவும் முடியாது.
(இப்பதிவு ஒரு சிந்தனை மட்டுமே!
எனது மற்ற சிந்தனைகள் காலப்போக்கில் மாற்றமடைந்தாலும் உளவுத்துறை பற்றிய எனது சிந்தனை பின்பற்றப்பட நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.
பதவின் படி ஒன்பது ஆண்டுகள் வேற்றினத்தாருடன் வாழ்ந்த நான்கூட உளவுத் தலைமைக்கு தகுதியில்லாதவனே!
நான் பார்ப்பனர் தமிழர் என்று கூறுபவனும் கூட!
உளவுத்துறையானது அரசியல், பொருளாதாரம், உணர்ச்சி அலைகள் என காலமாற்றத்துக்கு ஏற்ப மாறக்கூடாது.
ஒரு நாட்டை எந்த எல்லைக்கும் சென்று பாதுகாக்க வேண்டும்.
மறைமுகமாக மக்களை வழிநடத்தும் பொறுப்பும் உளவுத்துறைக்கு உண்டு.
எனவே சந்தேகம் ஏற்படும் பின்னணி கொண்ட எவரையும் உளவுத்துறையின் தலைமைக்கு வரவிடக் கூடாது.
இந்த இடத்தில் பாரபட்சம் தேவை என்பது எனது கருத்து.)
12 நவம்பர், 03:44 PM ·
தனியுரிமை: பொது

Umarkayan SJ
என்ன ஒரு சிறப்பான சிந்தனை... எதிர்கால தமிழர் நாட்டின் அதிபராக இருக்கவும். ஒளவு துறையின் தலைவராக இருக்கவும் தகுதிவாய்ந்தவர் ஐயா நீங்கள்....
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 12 நவம்பர்
Aathimoola Perumal Prakash
இல்லை. நான் பல ஆண்டுகளாக வடயிந்தியாவில் வசித்துவருகிறேன
். இவர்களின் மொழி மற்றும் கலாச்சார சிந்தனைகளின் தாக்கம் என்னிடம் இருக்க வாய்ப்புண்டு.

Senthil Pandian Nadar
கிறிஸ்தவர்கள் தமிழர்கள் இல்லையா
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 12 நவம்பர்
Aathimoola Perumal Prakash
மதம் என்பதை குறைத்து மதிப்பிடக்கூடாது.
தமிழர்களில் கிறித்தவர் ஏன் விளக்கப்படுகின்றனர் என்றால் அவர்களது மத உணர்வு அதே மதத்தை பின்பற்றும் வேற்றுநாடுகள் அவரை பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கும் என்பதால்தான்.
ஒரு கிறித்துவத் தமிழர் அதிபராகவோ முப்படைத் தலைவராகவோ தாராளமாக வரலாம்.
ஆனால் உளவுத்துறையின் ஐந்தாவது மட்டம் வரை மட்டும்தான் இடம்பெறலாம்.
தொடர்ந்து நீடிக்க தகுதிகளும் அவசியம்.

E Samuthirapandian
தமிழ்நாட்டில் உளவுத்தறையில் 10க்கு 9போ் வடுகா்களே இ௫க்கிறாா்கள்,உ
௫ப்படும் இந்தநாடு,
6 · விரும்பு · நீக்கு · புகாரளி ·
12 நவம்பர்
இராமநாதன் இராமநாதன்
வெள்ளக்காரன் காலத்தில் இருந்து அப்படியே இருக்கிறது.

Suthan Dharsan
தெலுங்கன் கன்னடன் மலையாளியும் கூடாது இவர்களின் தமிழ்கலப்பு தமிழரையும் சேர்க்கக்கூடாது.
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 12 நவம்பர்
Aathimoola Perumal Prakash
பதிவில் தெளிவாகக் கூறியுள்ளேனே! தமிழர்தான் வரவேண்டும். அதிலும் இந்த தகுதிகள் உள்ளவர்தான் வரவேண்டும் என்று.

இரா நிர்மல் தமிழன்
திருமணம் ஆகாத ஒருவருக்கு சமூகத்தைப் பற்றிய புரிதலும் கவலையும் இருக்காது மற்றும்
துணை இல்லாமல் உடலியல் மனவியல் தேவைகள் பூர்த்தியடையாது ஆதலால் அவரால் சரியான நோக்கில் சிந்தித்து செயல்படவும் முடியாது...
இது ஏற்புடையதாக இல்லை
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 13 நவம்பர்
Aathimoola Perumal Prakash
ஒருவருடைய குடும்பமும் சுற்றமும் எந்த நாட்டில் இருக்கிறதோ அவருக்கு அந்த நாட்டை பாதுகாக்கும் உணர்வு அதிகமாக இருக்கும்.
திருமணம் செய்யாத ஒருவருக்கு தன்னுடைய நலன் பெரிதாக இருக்கும்.
திருமணம் செய்யாதோர் உளவாளிகளாக பலநாடுகளுக்கு சென்று வேலைபார்க்க தகுதியுள்ளவர்கள்.
அவர்களுக்கு திருமணம் கட்டாயம் என்று இல்லாமல் விதிவிலக்கு அளிக்கலாம்.
ஆனால் உளவுத்துறையின் தலைமையில் இருப்போரின் ரத்த உறவுகள் தமிழர்நாட்டில்தான் இருக்கவேண்டும்.
அவர் துரோகம் செய்தால் அவரது குடும்பம் வெளியேற்றப்பட்ட
ு அவர்களது வம்சாவழிகள் தலைமுறை தலைமுறைக்கும் தமிழர்நாட்டில் நுழைய முடியாதவாறு கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர்.
http://vaettoli.blogspot.com/2017/08/blog-post_7.html
எம் இனம் எழும்! நன்மையோ தீமையோ பெற்றவை அனைத்தையும் திருப்பி செய்யும்!
vaettoli.blogspot.pe

Yuvaraj Amirthapandian
ஆமை தான் அதன் இலச்சினையா?!
1 · விரும்பு · நீக்கு · புகாரளி ·
12 நவம்பர்
Aathimoola Perumal Prakash
ஆமை அல்லது யாளி
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 12 நவம்பர்
Yuvaraj Amirthapandian
ஏன்?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 13 நவம்பர்
Aathimoola Perumal Prakash
நமது தனி அடையாளங்கள் இவை.
கடலாமை நாம் கடல்வழி உலகம் முழுவதும் சென்று ஆதிக்கம் செலுத்த உதவின.
92 கோயில்களில் ஆமை சிற்பம் உள்ளதாம்.
'ஆமை புகுந்த வீடு விளங்காது' என்பது 'ஆம்பி பூத்த வீடு விளங்காது' என்பதன் மருவல்.
ஆம்பி என்றால் கெட்டுப்போன பொருள் மீது வளரும் காளான்.
யாளி நம்முடன் வாழ்ந்து அழிந்துபோன விலங்கு.
நமது பழமைக்குச் சான்று.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 13 நவம்பர்
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/04/blog-post_5.html?m=1
ஆளி (யாளி) - தமிழர் பழமைக்குச் சான்று
vaettoli.blogspot.pe
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 13 நவம்பர்
Aathimoola Perumal Prakash
ஒரிசா பாலு அவர்களின் பார்க்கவேண்டிய காணொளி
https://m.youtube.com/watch?v=Z_d8BFQ1DIc
தமிழர் வரலாறு / தமிழர் நடுவம் /
youtube.com

Sent from my Samsung Galaxy smartphone.

அச்சுதானந்தன் பினராய் விஜயன் பெரிய வேறுபாடு இல்லை படகு மின்சாரம் இடைஞ்சல் கேரளா மலையாளி இனவெறி

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

கதிர் நிலவன் Mathi Vanan உடன்.
அச்சுதானந்தன் வழியில்
முதல்வர் பினராய் விஜயன்!
முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற தீவிர கருத்துடையவர் முன்னாள் மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர் அச்சுதானந்தன். அவர் முல்லைப் பெரியாறு அணை யை இடிக்க வேண்டும் என்பதிலும், தற்போதுள்ள அணையின் மராமத்துப் பணிகளை தடுக்க வேண்டும் என்பதிலும் பிடிவாதக்காரர்.
அவருக்குப் பின் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வராக பினராய் விஜயன் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
அவர் பதவியேற்ற போது, "அணை பலமாக உள்ளது என்ற நிபுணர் குழுவின் ஆய்வு முடிவுகளை புறந்தள்ளி விட முடியாது என்றும், அச்சத்தின் அடிப்படையில் இந்த பிரச்னையை அணுக முடியாது" என்றும் கூறினார்.
அதன்பிறகு கேரள சட்டமன்றத்தில்,
"கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. மாநில மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்" என்று பல்டி அடித்துப் பேசினார். முன்பிருந்த அச்சுதானந்தன் வழியில் எள்ளவும் மாற மாட்டேன் என்பதுதான் பினராய் விஜயன் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணமாகும்.
இவருக்கும், அவருக்குமுள்ள வேறுபாடு என்னவெனில், அச்சுதானந்தன் தமிழர்களுக்கு எதிராகப் பேசி, வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வார். இவர் அப்படியல்ல: வாய் திறக்க மாட்டார். ஆனால், இவர் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதிலே தந்திர நரிப்புத்தி கொண்டவர்.
இவர் உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு தடைக்கல்லாக இன்று வரை இருந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாது.
2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் மட்டத்தை உயர்த்தும்படி தீர்ப்பு வழங்கியது. அத்தோடு சிற்றணையின் மராமத்துப் பணிகளை முடித்து விட்டு 152 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும்
கூறியிருந்தது. அப்போது மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் என்.ஏ. வி. நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டத
ு.
அக்குழுவானது மூன்றாண்டுகளுக்
கு முன்பு வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் சாலையை சீரமைப்பது, அணைப்பகுதிக்கு தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்வது, பிரதான அணையிலிருந்து பேபி அணைக்கு இடைப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பது என்றும் முடிவு செய்தது.
19.6.2000 இல் அணைப்பகுதியில் மின்வயரில் யானை ஒன்று சிக்கி உயிரிழந்தது. இதனை சாக்காக வைத்து கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் மின்சாரத்தை துண்டித்தது. கடந்த 17 ஆண்டுகளாக குறைவான திறன் கொண்ட மின்னாக்கியை (ஜெனரேட்டர்) வைத்து தமிழகப் பொறியாளர்கள் படாதபாடு பட்டுவந்தனர். இதை உணர்ந்த மூவர் கண்காணிப்புக் குழு தரை வழியாக மின்சாரம் வழங்கும் முடிவை எடுத்தது. இதற்காக தமிழக அரசு ரூ.1.65 கோடி கேரள அரசுக்கு வழங்கியது. அதுபோல், சிற்றணையைப் பலப்படுத்துவற்கும் தமிழக அரசு ரூ. 7.85 கோடி வழங்கியது. இந்தப் பணம் வழங்கி மூன்றாண்டு கடந்து விட்டது. ஆனால் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், தமிழக அரசின் பொதுப்பணித்துறையினர் மூன்றாண்டுகளுக்கு முன்பு தேக்கடியிலிருந்து அணைப்பகுதிக்கு செல்ல ரூ 1 கோடி செலவில் "தமிழன்னை" பெயரில் படகு வாங்கியது. இப்படகை இயக்குவதற்கு கேரள அரசு இன்றுவரை அனுமதி தரவில்லை.
பினராய் விஜயனுக்கு ஆட்சிக்கு வந்து ஒரு வருடமான பிறகும் நெஞ்சில் ஈரம் சுரக்க மறுக்கிறது. மலையாள இனவெறி அவரது கண்ணை மறைத்து வருகிறது.
கேரளாவில் உள்ள இந்து கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்ததை தமிழகம் வரவேற்றது. அவருக்கு தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் கொடுத்து தமிழக மார்க்சிஸ்ட் கட்சி உட்பட பல தலித்திய, திராவிட அமைப்புகள் " சமூகநீதிக் காவலர்" என்றும், " கேரளப் பெரியார்" என்றும் வரவேற்பு கொடுத்தன. இது அளவுக்கு அதிகமான பாராட்டுதான்.
இருப்பினும், வகுப்புவாத வெறியின் மென்மையான முகம் வாஜ்பாய் என்றால், மலையாள இனவெறியின் மென்மையான முகம் பினராயி விஜயன் என்பதை வரவேற்பு கொடுத்த இயக்கங்கள் உணர வேண்டும்.
"சமூக நீதி" என்ற கிலுகிலுப்பையை காட்டி பினராய் விஜயனை தப்பிக்க நாம் விட்டுவிடக் கூடாது. முல்லைப் பெரியாற்று உரிமையைப் பறிக்கும் பினராய் விஜயனுக்கு தமிழக இயக்கங்கள் இப்போதே தமது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
அடுத்த முறை அவர் தமிழகம் வந்தால் தமிழர்களாகிய நாம் அவருக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டுவோம்!
தரவு: தினமணி (14.11.2017, மதுரைப் பதிப்பு)
15 நவம்பர், 08:57 AM
கம்யூனிஸ்ட் பிணராய் பினராயி பிணராயி 

Sent from my Samsung Galaxy smartphone.

கடலோனியா வேர்ச்சொல் கடல் பள்ளர் தமிழ்ப்பெயர் catalonia

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு
மாறவர்ம பாண்டியர் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Mathi Vanan மற்றும் 37 பேர் உடன்.
கடலோனியா என்ற நாடு # தமிழர்கள் கைப்பற்றியது : Catalonia Country
========================>=====
=========================
# பள்ளர் என்ற தமிழ்ச் சொல் பரவலாக, ஐரோப்பிய, மேற்காசியக் குறிப்புகளில் காணப்படுகின்றது.
# உரோம , # கிரேக்க , # அனதோலிய,
# அசீரியக் குறிப்புகளிலும், # பாஸ்க் ,
# கடலோனியாவில் மக்களையும் #பள்ளர் என்ற சொல் குறிப்பிடுகின்ற
து.
தற்போது தமிழ்நாட்டில் அறியப்படும் இச்சொல் குறிப்பிட்ட சாதியைக் குறிக்கின்றது. #பள்ளர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லையென்றும், # மள்ளர் என்பதே பள்ளர் என்றானது என்றும் அரைகுறையான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரண்டுமே ஒரு வேர்ச்சொல்லினின
்று விரிந்தவைகளே. மேலை நாடுகளில் பள்ளர் என்ற சொல், தமிழர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்
டுள்ளது.
கடலோனியாவின் வடமேற்கில் இருந்த இரண்டு பகுதிகளை, கி.பி 10 11 ஆம் ஆண்டில், சுனியர் #பள்ளர் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் இறந்த பின்பு, அவனுடைய மகன்கள், அந்நாட்டைப் பிரித்துக் கொண்டனர். ரேமண்ட் II என்பவன் பள்ளர் ஜீ சா என்ற பகுதியையும், வில்லியம் II என்பவன் பள்ளர் சோபிரா என்ற பகுதியையும் ஆண்டனர். இவ்விரு அரசுகளும் #பள்ளர் அரசுகள் என்றே குறிப்பிட்ட பட்டுள்ளன.
#பள்ளர் என்ற சொல், கடலோனியர்களைக் குறிக்கும் மாற்றுச் சொல் என விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. (Pallars is an alternative Medivial Catalan form) . கடலோன் (Catalon ) என்ற சொல்லுக்கான, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கங்களை இதுவரை ஐரோப்பிய மொழியியலாளர்கள் கொடுக்கவில்லை ....(தொடரும்)
-வரலாற்று அறிஞர் ஐயா மாசோ விக்டர்.

ஆதார் சொத்து உடன் இணைப்பது கட்டாயம் சட்டம்

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

21-நவ்-2017 18:22 இந்தியா , முக்கிய செய்தி No comments
சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட வாய்ப்பு
சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு பழைய ஆயிரம், ஐநூறு ஆகிய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கமளித்தது. அப்போது ரொக்கப் பணத்தை விட, அசையா சொத்துக்கள் வாயிலாகவே கருப்புப்பணம் அதிகம் பதுக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திரமோடி பினாமி சொத்துக்கள் நிச்சயம் ஒழிக்கப்படும் என தொடர்ந்து கூறிவருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடையே பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ((Hardeep Puri)) ஹர்தீப் பூரி, ரியல் எஸ்டேட் துறையில் உள்ள கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையிலும் பினாமி சொத்துக்களை ஒழிக்கும் வகையிலும் விரைவில் ஆதார் எண்ணை சொத்துக்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வங்கிக் கணக்குகள் தொடந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பெரிய அளவிலான பணப்பரிமாற்றம், விமான டிக்கெட்டுகள் உள்ளிட்டவையும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கியே ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி விளக்கம் அளித்தார்.

https://www.polimernews.com/சொத்துக்களுடன்-ஆதார்-எண்/
Search ஆதார் ஜட்டி காட்டிக்காகொடுக்கும் வேட்டொலி


இயற்கை முறை குடிநீர் சுத்திகரிப்பு புதுமுயற்சி நீர்மேலாண்மை மாசு

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு
இரா. மணிகண்டன் இளையா
வெற்றி....! வெற்றி...!...வெற்றி..!
இன்னிக்கு ஹைட்ரோ கார்பன் பேர்ல டெல்டா மாவட்டங்களில் பண்ணின வேலைய
1998 ல எங்க ஊர்ல ONGC மண்ணெண்ணைய் எடுக்குரோம் என்ற பெயரில் பூமிக்குள்ள வெடிக்கவைத்த குண்டால எங்களோட குடிநீர் பாழாகி உப்பு தன்மையுடன் மஞ்சள நிறத்தில் எண்ணைய் மிதப்பது போன்று இருந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை இதைதான் தெளிய வைத்து குடிக்க வேண்டிய நிலை இருந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற பொழுது
நமக்கு எட்டிய அறிவை கொண்டு
750 லிட்டர் கொள்ளளவு கொண்ட பைபர் பேரல் ஒன்று
கரி மூட்டம் போடபட்ட சீமை கருவேல கரி
15 கிலோ
செங்கல் உடைத்து
அரை கிலோ நன்னாரி வேர்
1/4 தேத்தாங்கொட்டை [ முளைக்காத அளவிற்கு பார்த்துக்கனும் ]
கருங்கல் அவல் ஜல்லி
ஆற்று மணல்
இதை இரண்டு அடுக்குகலாக பரப்பிவிட்டு
ஒரு தண்ணிர் திருகி ய பேரலோட அடியில் பொருத்தி மட்டுமே வைத்து என்னால்
தயாரிக்கபட்ட" தண்ணீர் வடிகட்டி" (WATER FILTER ) முதலில் தண்ணீர் தெளிந்து கண்ணாடி மாதிரி வந்தாலும் சுவையற்று சப்பென்று இருந்தது.
தற்பொழுது முறறிலுமாக தண்ணீரின் சுவையுடன் நன்னாரி வேரின் சுவையும் சேர்ந்து மணக்கிறதாம்..
மொத்த செலவே 1100 ஓவா தான்
ஆனா
Water filter வாங்கி வைத்தா குறைந்த விலை கொடுத்தால் ஆறு மாதமோ அதிக விலை கொடுத்தால் ஒரு வருடமோ மட்டுமே தாக்குபிடிக்கும் கார்பிரேட் water filter திரும்பவும் மாற்ற வேண்டியிருக்கும் ஒவ்வோறு முறையும் ஆயிரம் கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும ஆனா இந்த water filter மொத்தமே 1100 தான் முயற்சித்து பாருங்க
இதில் 70 விழுக்காடு தற்சார்பு அடங்கியுள்ளது அடுத்தமுறை 100% மாக உயர்த்துவேன்
அடுத்தமுறை புகைப்படம் பதிவிடுகிறேன்



Sent from my Samsung Galaxy smartphone.

சேரர் நாடு எல்லைகள் கம்பர் சேரன் குமரி மண்மீட்பு

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

சுரேஷ் தேவர் சாேழநாடு , 3 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
# பதிவு_5
சேரநாட்டு எல்லை:
# கன்னியாகுமரி மாவட்டம் பாண்டிய நாட்டு பகுதியே!!!
3ஆம் குலோத்துங்கச் சோழன் ( 1178-1218 ) அவைக்களப் புலவராயிருந்த கம்பர், சேர சோழ பாண்டி தொண்டை நாடுகளின் எல்லைகளை மட்டும் பின்வருமாறு பாடியுள்ளார்:
வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு."
1.வடக்கு எல்லை : பழனி மலை(திண்டுக்கல் மாவட்டம்)
2.கிழக்கு எல்லை : தென்காசி (நெல்லை மாவட்டம்)
3.மேற்கு எல்லை: கோழிக்கோடு
4.தெற்கு எல்லை:கடற்கரை பகுதி.
++
இவன்,
# சோழநாடு_மீட்பு_குழு ..
ந.சுரேசு அகம்படி தேவன்..
பட்டுக்கோட்டை
தஞ்சை சோழ தலைநகர்..
அலைபேசி_9600632100



நதிநீர் இணைப்பு கேடுகள் ஆறு அணை

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு
பாரதிசெல்வன் இலரா
நதி நீர் இணைப்பு தொடர்பாக பூவுலகு அமைப்பை சேர்ந்த ஜீயோ டாமின் எழுதிய கட்டுரை. (சில மாதங்களுக்கு முன் பூவுலகு இதழில் வெளிவந்தது).
நதிகளைப் பாய்ந்தோடவிடுங்கள்!
“காட்டாறுகள் இப்புவியின் ஏமாற்றுப் பேர்வளிகள், அவை புவியீர்ப்பை மீறுபவை, தம் சொந்த இசைக்கு நடனம் ஆடுபவை, மனித அதிகாரத்தை எதிர்ப்பவை, வெட்டிக்கொண்டு செல்பவை, இறுதியில் எப்போதும் வெற்றிபெறுபவை.”
- கிரிஸ்டியன் காலென் (ரிவர் காட்ஸ்)
மழை பொழிந்து நதிகள் பெருக்கெடுத்துவிட்டால் போதும் தம் வீடுகளில் பல மாதங்களாய் சொட்டிக்கொண்டிருக்கும் தண்ணீர் பைப்பைக்கூட சரிசெய்ய முயலாதவர்களெல்லாம் நதி நீர் இணைப்பு பற்றியும் அணைகளில் நதிநீரை சேமிப்பதைப்பற்றியும் பேசத்தொடங்கிவிடுகின்றனர். அணைகளில் தேக்காது தண்ணீர் அனைத்தும் கடலில் கலந்து வீணாகிறதே என பெரும் கவலை கொள்கின்றனர். அணைகளைக் கட்டவும் நதிநீரை மடைமாற்றவும் அரசை நோக்கி அபயக்குரலெழுப்ப
ுகின்றனர்.
பல இலட்சம் கோடிகள் புரளும் இம்மாதிரியான திட்டங்களை அரசியல்கட்சிகள் எப்படி கையாள்வார்கள் என்பதைச்சொல்லவா வேண்டும்? எந்த கருத்துப் பேதமுமின்றி ஒற்றுமையுடன் எல்லா கட்சிகளும் பல்லை இளிக்கத் தொடங்கிவிடுகின்றன. உண்மையில் இத்திட்டம் ஆழமாக புரிந்துகொள்ளப்
பட்டிருக்கிறதா? இதைப்பற்றி பேசுபவர்கள் இத்திட்டங்களில் சொல்லப்படும் சாதகங்களையும் சொல்லப்படாத பாதகங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்களா? நதிநீர் இணைப்பு என்பது அவ்வளவு எளிதாக நாம் கடந்துவிடக்கூடியதா? இந்தியப் புவியியல் வரைபடத்தை மேசையின் மீது விரித்துவைத்துவ
ிட்டு இரண்டு நதிகளை சிவப்பு மார்க்கரால் கோடுபோட்டு இணைப்பதுபோல அத்தனை எளிதா அது? கொஞ்சம் ஆழமாக சிந்திக்கவேண்டிய தருணம் இது.
தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்
2002 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் முன்மொழிய இந்தியாவின் தண்ணீர்த்தேவைக்கான உன்னதத்திட்டமாக முன்மொழியப்பட்ட
ு மறுபிறப்பு பெற்றது இந்திய நதிகள் இணைப்புத்திட்டம். அரசாலும் ஊடகங்களாலும் அணுவிஞ்ஞானியாக தூக்கிநிறுத்தப்பட்ட கலாம் அவர்கள் சான்றளித்த கூடங்குளத்தின் ஒப்பற்ற உன்னத உலகத்தர அணுவுலைகள் ஒரு ஒற்றை குண்டுபல்புக்கான மின்சாரத்தைக்கூட உற்பத்திசெய்ய வக்கற்று மூச்சுத்திணறிக்
கொண்டிருக்க இந்த நதிநீர் இணைப்பை அவர் எவ்விதமான புரிதலுடன் அணுகினார் என்பது விவாதத்திற்குரியதே. நதிநீர் இணைப்பை விரைந்து செய்யல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட தொடர்ந்து மத்திய அரசு இந்த நாசகாரதிட்டத்தை இப்போது விரைந்து செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. “தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்” என்ற இந்த பிரம்மாண்ட திட்டம் தேசத்தின் மொத்த நதிகளையும் இரு பெரும்பிரிவுகளாக அதாவது இமாலயநதிகள் (வட இந்திய) மற்றும் பீடபூமி நதிகள் (தென்னக நதிகள்) என இரண்டு பெரும் பிரிவுகளாகப்பிர
ித்து 30 இணைப்புகளால் 37 நதிகளை இணைத்து தேசமுழுக்க 3000 அணைகள்வரை கட்டப்பட இருப்பதாகச் சொல்கிறது.
நதிநீர் இணைப்புகள் பொருளாதார ரீதியில் லாபகரமானவையோ அல்லது புயியல் ரீதியில் சாத்தியமானவையோ இல்லை என்பது மட்டுமின்றி அவை வறண்ட பிரதேசங்களை பாலைவன சோலைகளாக்கும் மந்திரச்சொலும் இல்லை என்பதை உணர்த்த பல்வேறு ஆய்வறிக்கைகளும் அனுபவங்களும் நம்முன் கொட்டிக்கிடக்கின்றன. நதிநீர் மடைமாற்றத்தால் வற்றிப்போன ஏரல் கடலோ அதை நம்பியிருந்த வறியோரின் வாழ்வாதாரமோ தந்த பாடம் எளிதில் புறந்தள்ளக்கூடியதல்ல. நதிநீர் இணைப்புகளின் சாத்தியக்கூறுகளையும் அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் சுருக்கமாகக் காண்போம்.
சொந்த வாழிடங்களைவிட்ட
ு துரத்தப்படும் மக்கள்
நதி நீர் இணைப்புகளுக்காய் பலி கொடுக்கப்படும் பல்லாயிரம் ஹெக்டேர் விளைநிலங்களிலிர
ுந்தும் காடுகளிலிருந்தும் ஆறுலட்சம் மக்கள் வெளியேற்றப்படுவ
ார்கள் என்கிறது அரசு புள்ளிவிபரம். இந்த ஆறு இலட்சம் மக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள்? ஒரு நாட்டை நந்தவனமாக்க சில லடசம்பேர் வாழ்விழந்தால் பரவாயில்லை என்று வாதத்துக்கு வைத்துக்கொண்டால
ும்கூட அந்த ஒரு சிலர் யார்? நிச்சயம் நானில்லை! அப்படியானால் நீங்கள்?
நதிநீர் இணைப்பால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்பவர்கள் தம் மண்ணைவிட்டுத் துரத்தப்படும் பல இலட்சம் மக்கள் மற்றும் பறிபோகும் அவர்களின் நிலங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பறிபோகும் பல இலட்சம் வேலைகளுக்கு என்ன செய்யப்போகிறார்கள்? இந்தியாவின் பெரிய அணைக்கட்டுகளுக்காய் ஏற்கெனவே தம் வாழ்விடமும் வாழ்வாதாரமுமான காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரம் பூர்வகுடிகள், நாகரீக மனிதர்களின் பாலிதீன் குப்பைகளைப் பொறுக்கி வயிற்றைக்கழுவுவதை நீங்கள் பார்த்ததில்லையா?
சாதாரண உள்ளூர் பாசனக்குளங்களை சில லட்சங்கள் செலவுசெய்து தூர்வாரவோ பராமரிக்கவோ முன்வராத அரசுகள் ஐந்தரை இலட்சம் கோடிகள் (2002 ஆம் ஆண்டு மதிப்பீடு) செலவுசெய்து வெள்ளப்பெருக்கெ
டுக்கும் ஒரு நதியிலிருந்து இன்னொரு வறண்ட நதிக்கு தண்ணீர் கொண்டுவந்து இத்தேசத்தின் வளைந்துபோன விவசாயியின் முதுகை நிமிர்த்ப்போவதாகப் பசப்புவது வேடிக்கையாக இல்லை? உண்மையிலேயே விவசாயத்தை தூக்கி நிறுத்தத்தான் அரசு இத்தனை மெனக்கெடுகிறதா?
தேசத்தை மின்னொளியில் ஒளிரவைக்கும் திட்டமா இது?
1972 ஆம் ஆண்டு அப்போதைய அணுவிஞ்ஞானியும் Atomic Energy Corporation னின் தலைவருமான ஹோமி சேத்னா 2000 ஆம் ஆண்டு இந்தியாவின் அணுமின் சக்தி 43,000 MW ஆக இருக்கும் என்று அறிவித்தார். ஆனால் 28 வருடங்களுக்குப்பிறகு 2000 ஆம் ஆண்டுவரை நிறுவப்பட்ட அணுமின்சக்தியோ (Installed Capacity) அதில் 7 சதவீதத்துக்கும் குறைவு. இப்படியிருக்க 2000 ஆம் ஆண்டின் நவீன அணுவிஞ்ஞானி முன்மொழிந்த நதிநீர் இணைப்பின்மூலம் 34,000 MW மின்சாரம் தயாரிக்கமுடியும் என்கின்றது நதிநீர் இணைப்புத் திட்ட அறிக்கை.
ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் தேரி அணைக்கட்டுக்காக உத்தரகாண்டின் தேரி நகரமும் அதோடு நாற்பது கிராமங்கள் முழுமையாக மூழ்கடிக்கப்பட்
டதாகவும் எழுபத்திரண்டு கிராமங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டதாகவும் “தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்: கனவா? பேரழிவா” என்ற தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார் சுவாதி பென்சால். அத்தோடு வெறும் ஆயிரம் மெகாவாட் திட்டத்துக்கே இப்படி என்றால் முப்பத்திநான்காயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான அணைக்கட்டுகள் எவ்வளவு பெரிய இடரை மக்களுக்கு ஏற்படுத்தும் எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.
பழைய மின்மாற்றிகளை மாற்றுவது, மின் கடத்தலில் இழப்பைக்குறைப்பது, அனைத்து குண்டுபல்புகளையும் CFL களால் மாற்றீடு செய்வது, மின்கருவிகளின் பயனுறுதிறனை (Efficiency) அதிகரிப்பது போன்ற முயற்சிகளாலும் மரபுசாரா மின்சக்தியான சூரிய ஆற்றல், காற்றாலை போன்றவற்றை நிறுவுவதாலும் மிகக்குறைந்த செலவில் சூழலுக்குத் தீங்கின்றி இந்த மின்சாரத்தை மாற்றீடு செய்யமுடியும் என்கிறது “தெற்காசியாவின் அணைகள், நதிகள் மற்றும் மக்களுக்கான கூட்டமைப்பு”. அது மட்டுமின்றி தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின்படி பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்து உயரமான பகுதிகளுக்கு அதுவும் நூற்று இருபது மீட்டர்கள் உயரம்வரைக்கும் நீரை ஏற்ற வேண்டியிருக்கிறது. இதற்கான மின்சார விரையத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.
காடும் காட்டுயிர் அழிப்பும்
சமீபத்தில் மத்திய அரசு அங்கீகரித்திருக்கும் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான “கென்-பெவா” நதிகள் இணைப்புக்காக மத்தியபிரதேசத்தின் 4100 ஹெக்டேர் காடுகள் அதுவும் புலிகள் வாழும் பன்னா உயிரியல் பூங்காவின் சுமார் பத்து சதவீதப் பரப்பு பத்து கிராமங்களோடு மூழ்கடிக்கப்பட இருக்கிறது. இதற்கு மாற்றீடாக 80 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் இன்னொரு இடத்தில் புதிய காட்டை உருவாக்கப்போவதாக மத்திய நீர்வளத்துறை அறிவித்திருக்கிறது.
மனிதர்களால் மரங்களை மட்டுமே வளர்க்க முடியும். காடுகளை அல்ல. எத்தனை ஆயிரம் மரங்கள் சேர்ந்தாலும் காடுகளை உருவாக்கமுடியாது. காடு என்பது ஒரு வாழிடம். மனிதனால் காடுகளை அழிக்க மட்டுமே முடியும். எப்போதும் எப்பாடுபட்டும் அவற்றை உருவாக்க முடியாது! இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், வருடத்தின் மூன்று மாதங்கள் அதாவது மழைக்காலத்தில் மட்டுமே காடுகள் தண்ணீரில் மூழ்கியிருக்குமாம். அதனால் மற்ற நாட்களில் தரை உலர்ந்திருக்கும
்போது தாராளமாக விலங்குகள் பயன்படுத்திக்கொள்ளலாமாம். இந்த தத்துவத்தை உதிர்த்திருப்பவர் ஏதோ மூன்றாம்தர அரசியல்வாதியல்ல. மாறாக Wild life instute of india அமைப்பின் தலைவர்.
“டாமி கமான்” என்றவுடன் வாலை ஆட்டிக்கொண்டு வருவதற்கும் “கெட் அவுட்” என்றவுடன் திரும்பிப் போவதற்கும் வனவிலங்குகள் ஒன்றும் நம் வீட்டு நாய்கள் அல்ல என்ற புரிதலற்ற வனவிலங்குக் காவலர்கள்!
உடன்பட மறுக்கும் நதிகளின் புவியியல்
நதிநீர் இணைப்புத்திட்டத்தின்படி பெரும்பாலும் இரண்டு அடுத்தடுத்த இணையாகச்செல்லும் நதிகளே கால்வாய்களால் இணைக்கப்படுகின்
றன. அப்படியெனில் வெள்ளப்பெருக்கோ அல்லது வறட்சியோ இரண்டு நதிகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதாவது அந்த நதிகளின் நீர்ப்பிடிப்புப
்பகுதியில் மழைப்பொழிவு அதிகரித்தாலோ (தென்னிந்திய நதிகள்) அல்லது பனி உருகினாலோ (வட இந்திய நதிகள்) இரண்டும் வெள்ளப்பெருக்கை சந்திக்கும். இல்லையெனில் இரண்டும் வற்றிப்போகும். இப்படியிருக்க நீர் வளமற்ற வறண்ட இடங்கள் நதிநீர் இணைப்பால் வளம்பெறும் என்பதும் வெள்ளப்பெருக்கு காலத்தில் ஒரு நதியின் அதிகபடியான வெள்ளம் அடுத்த நதிக்கு பகிரப்படும் என்பதும் எவ்வளவு பெரிய புரட்டு?
இந்த திட்டத்தின் 30 இணைப்புகளில் காவேரியின் உபரிநீரை(?) வைகையோடு இணைக்கும் திட்டமும் அடக்கம். கிருஷ்ணா, கோதாவரி, பெண்ணார், பாலாறோடு காவேரியையும் வைகையையும் இணைக்கிறார்கள். காவேரியில் வரவேண்டிய நீரையே பெற வக்கற்ற நிலையில் இது யாரை ஏமாற்றும் வேலை? கால்வாய் வெட்டி உபரிநீரை கொண்டுவந்து அப்புறம் அதில் படகுப்போக்குவரத்தாம். பிறகு அமர்க்களமாக மீன்பிடிப்பு வேறு நடக்குமாம். இதனால் வாகனப்போக்குவரத்துக்கான மரபு எரிபொருள்செலவு மிச்சமாவதுடன் மீன்பிடித்தொழிலும் சிறக்குமாம். பயிர்கள் செழிக்குமாம். உணவு உற்பத்தி பெருகுமாம். உணவுபதப்படுத்தல் மதிப்புக்கூட்டல் போன்ற தொழில்களோடு விவசாயப்பணிகளுக்கான உபகரணங்கள் உறபத்தி தொழிலும் சிறக்குமாம். கேட்க எவ்வளவு அருமையாக இருக்கிறது? மதுரையிலிருந்து கப்பலில் ஏறி நீர்வழிச்சாலைமூலம் திருச்சி செல்வது எவ்வளவு சுகமான அனுபவம்? கால்வாயில் தண்ணீர் நிறையப்போகிறதோ இல்லையோ அரசின் கஜானா வெள்ளமாய் வடிந்து பலரின் கல்லாப்பெட்டிகளில்போய் நிறையப்போகிறது.
யாருடைய நீர் யாருக்கு உபரி?
காவேரியில் “உபரிநீர்” என்று சொல்வதைவிட நம் டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்த ஏதேனும் ஒன்று இருக்க முடியுமா? “உபரி நீர்” என்ற பதமே எத்தனை அபத்தமானதாக இருக்கிறது. மனிதனின் விவசாய, வீட்டு மற்றும் தொழிற்சாலைத் தேவைகளுக்குப்போக அதிகமான நீரின் பெயர் உபரிநீராம். நாம் உற்பத்திச்செய்யாத நமக்குச்சொந்தமி
ல்லாத ஒரு பொருளை இப்புவியின் அனைத்து உயிர்களும் பங்கிடும் ஒரு பொருளை மனிததேவைக்கு அதிகமாக இருப்பதால் மட்டும் உபரி என்று யார் எப்படித் தீர்மானிக்கிறார
்கள்? கடலுக்குச்செல்லும் நீரை வீணாகிறது என எப்படிச்சொல்கிற
ார்கள்?
அமேசான் நதிமட்டுமே ஒரு நொடிக்கு இரண்டு இலட்சத்து ஒன்பதாயிரம் கனமீட்டர் நீரை அட்லாண்டிக் கடலில் கலக்கச்செய்கிறத
ு என்றால் உலகின் ஒட்டுமொத்த நதிகளின் நன்னீர் கடலில் கலக்கும் அளவை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். இவற்றிற்கும் கடலுக்கும் ஏதேனும் உறவிருக்குமா? இத்தனை கோடி கனமீட்டர்கள் தண்ணீரை ஒவ்வொரு நொடியும் பெற்றும் கடல் ஒன்றும் பொங்கிவிடவில்லையே? அப்படியானால் என்ன நடக்கிறது அங்கே? இந்த நீர் வரத்து நின்றுபோனால் என்ன ஆகும்? நதிகளின் மடைமாற்றம் எவ்வளவு பெரிய சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறித்து என்ன ஆய்வுகள் இங்கு நடைபெற்றிருக்கிறது?
அதனதன் வழிகளில் பயணிக்கும் நதிகளின் நீரைப்பங்கிடுவதிலேயே மாநிலங்களுக்கிடையே ஆயிரம் சிக்கல்கள் இருக்க இதில் இல்லாத இணைப்புகளை உருவாக்கி புதிதுபுதிதாய் பங்கீட்டுப்பிரச
்சினைகளும் கலவரங்களும் ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறதா அரசு?
சிதையும் சூழியல் சமநிலை
ஒவ்வொரு நதியும் ஒரு பேருயிர். அதனுள் கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் முதலாய் பலகோடி உயிரினங்கள்வரை பொதிந்துள்ளன. அவை பல நூறு ஆண்டுகளாய் அந்த நதிநீரோடும் அது தவழ்ந்தோடும் நிலத்தோடும் அதன் மற்ற உயிர்களோடும் ஒன்றோடொன்று தொட்டுணரமுடியாத ஒரு மெல்லிய இழையால் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த இழைக்கு ஏதேனும் நிகழுமானால் அதன் சங்கிலிவினைகள் நிச்சயம் விரும்பத்தகாததாக இருக்கும். ஒரு நதியின் பிறப்பிடத்திலிருந்து அது கடலில் சங்கமிக்கும் கழிமுகப்பகுதிவரை அந்த நதிக்கே உரித்தான எண்ணெற்ற உயிரினங்கள் அதற்கே உரித்தான எண்ணிக்கையில் நெடுங்காலமாக ஒரு சமநிலையுடன் வாழ்ந்துகொண்டிருக்க இன்னொரு நதியோடு அதை இணைப்பதுஅதன் உயிரியல் சமநிலையில் பூகம்பத்தையே ஏற்படுத்தும். இதனால் உணவுச்சங்கிலி பாதிக்கப்படுவதோ
டு மீன்பிடிப்பும் பாதிக்கப்படக்கூடும். அந்த குறிப்பிட்ட நிலப்பரப்புக்கு அன்னியமான தாவரங்களும் விலங்குகளும் பெருகி அதன் சூழலை கெடுக்க ஏதுவாகும். இதற்கு ஏராளமான சான்றுகள் நம்மிடமே உள்ளன.
தைல மரங்கள் நம் மழைக்காடுளின் உயிர்ப்பன்மையைச் சிதைத்ததும் ஆப்பிரிக்க மீனினங்கள் நம் நீர்நிலைகளில் செழித்திருந்த உள்ளூர் மீனினங்களை அற்றுப்போகச் செய்ததும் வெளிநாட்டு பார்த்தீனியம் சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க இங்கு ஒரு இயக்கமே நடப்பதும் நாம் அறிந்ததே.
மாற்றுவழி என்ன?
உண்மையாகவே அரசு தேசத்தின் நீர்ப்பாதுகாப்பு, உணவு உற்பத்தி மற்றும் விவசாயம் குறித்தும் கவலைப்படுகிறது என்றால் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுத்து உருப்படியாய் அதனினும் குறைந்த செலவில் செய்ய எண்ணெற்ற மாற்றுகள் இருக்கின்றன.
Ø நிலத்தடிநீரைப் பெருக்க மழைநீர் சேகரிப்பு குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற பாரம்பரிய நீர்சேகரிப்பு முறைகளைப் பின்பற்றலாம்.
Ø இருக்கும் ஆயிரக்கணக்கான பாசனக்குளங்கள் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து நீர்ப்பிடிப்பை அதிகரிக்கலாம்.
Ø மழைக்காலங்களில் அதிக தண்ணீர் தேவைப்படும் நெல் போன்ற பயிர்களையும் கோடைகாலங்களில் குறைந்த தண்ணீரே தேவைப்படும் சிறுதானியங்கள், பயிறுகள் போன்றவற்றை விழைவிக்க ஊக்குவிக்கலாம்.
Ø கரும்பு போன்ற தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் மற்றும் பணப்பயிர்களின் சாகுபடியை குறைத்து உணவுப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
Ø தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு செத்துப்போன நொய்யல் போன்ற நதிகளை உருப்படியான திட்டங்கள் போட்டு மீட்டெடுத்து மீண்டும் விவாசாயத்தைப் பெருக்கலாம்.
Ø நதிகளை குளிர்பான கம்பெனிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தாரைவார்ப்பதை விடுத்து விவசாயத்துக்கு முழுமையான முக்கியத்துவம் தரலாம்.
Ø நீர்ச்சிக்கனத்துக்கான சொட்டுநீர்ப்பாசனம் போன்ற மாற்றுப் பாசனமுறைகளை முழுவீச்சில் செயல்படுத்த முயற்சி எடுக்கலாம்.
Ø நதிகளின் உயிர் குடிகொண்டிருக்க
ும் மலைகளையும் அடர்ந்த வனப்பகுதிகளையும் வளர்ச்சி என்ற பெயரில் சுரங்கங்களுக்கும் ஆய்வுகளுக்கும் தாரைவார்ப்பதைத் தவிர்த்து அவற்றின் நீர்ப்பிடிப்பை அதிகரிக்க திட்டங்கள் தீட்டலாம்.
கவர்ச்சிகரமான, நடைமுறை சாத்தியமல்லாத அழிவுத்திட்டமான இத்திட்டத்துக்கு மாற்றாக நீடித்த பலனளிக்கும் பலவழிமுறைகள் இருக்க அவற்றைத் தெரிந்துகொள்ளவும் உணரவும் மறுக்கும் அரசின் போக்கு வேதனை தருவதாக உள்ளது.
நம் சூழலையும் அழித்து பல்லுயிரின சமநிலையை கெடுத்து பல லட்சம் கோடி வரிப்பணத்தையும் வீணடிக்கும் நதிநீர் இணைப்புத்திட்டம் நிச்சயம் கைவிடப்படவேண்டும். நதிகளை இணைத்துவிட்டால் ஏதோ விவசாயம் செழித்து இந்தியாவே பச்சைப்பசேல் என மாறிவிடும் என்ற மாயையில் சிக்கியிருக்கும் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணமிது. நதிகளை அவற்றின் போக்குக்கு பாய்ந்தோட விடுவோம். நதிகள் நமக்கானவையல்ல. நமக்குமானவை!
நேற்று, 12:20 PM · பொது

குடும்பர் பட்டம் பல சாதி பள்ளர்

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

அரவிந்த் பாண்டியகுடும்பன்
# மூவேந்தர்_யார் ?
# பகுதி_38
மள்ளரிய தந்தை இரா. தேவ ஆசிர்வாதம் முன்னாள் டிப்டி கலெக்டர்
121
குடும்பன்:
குடும்பன் என்ற குலப்பட்டம் பள்ளுநூல்கள் தோன்றிய பின்னரே பெரு வழக்கில் வந்ததாகத் தெரிகிறது. அதற்கு முன்பு கரிவலம் வந்த நல்லூர், சீவிலிபுத்தூர் ஆலயங்களில் திருமலை நாயக்க மன்னனது ஆணையால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் தேவேந்திரக் குடும்பன் என்று கண்டுள்ளது என முன்னர் குறிப்பிடப்ட்டிருப்பதை வாசகர் அறிவர். குடும்பன் என்பது ஒரு குடும்பத்தின் தலைவன் ஆவன். ஒரு கணவன் மனைவி அவரது குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து கூடி வாழ்வது குடும்பம் எனப்படும். குடும்பம் தனி உடைமை ஏற்பட்டபின் உருவானது ஆகும். தகப்பனே குடும்பத்தின் தலைவனாவான்; அவனுக்குப்பின், அவனது ஆண் சந்ததியினரே அவனது உடைமை களுக்கு உரியவராவர். மக்களிடையே நாகரிகம் ஏற்பட்ட பின்னரே இம்மாதிரிக் குடும்பமுறை மக்களிடையே தோற்றம் பெற்றது என்பர் ஆராய்ச்சியாளர். தமிழகத்தில் முதன் முதல் திராவிடராகிய மருதநில மக்களிடையேதான் குடும்பு முறை ஏற்பட்டது எனலாம். இந்தக் குடும்பன் என்ற பட்டம் கரிவலம் வந்த நல்லூர், சிவிலிபுத்தூர் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள செய்திபற்றியும், பள்ளு நூல்கள் தோன்றியபின், அது பெரும் வழக்கில் வந்தது பற்றியும் மேலே கூறியிருப்பது நினைவிருக்கத் தக்கது. இக்கல்வெட்டுகளும், பள்ளு நூல்களும் நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றியவை ஆகும். எனவே, நாயக்கர், ஆட்சிக்குமுன் தமிழ் வேந்தர் ஆட்சியின்போது குடும்பன் என்ற பட்டம் இம்மக்களுக்கு ஏற்பட்டிருந்ததா? என்பது ஆய்வுக்குரியது. தமிழ் அகராதிகளில் குடும்பன் என்பதற்குப் பொதுவாய் பள்ளரின் தலைவன் என்று பொருள் கண்டுள்ளனர். சென்னை பல்கலைக் கழக அகராதியில் (Madras lexicon) குடும்பன் என்பதற்கு நிலம் அளப்பவன் என்று பொருள் கண்டுள்ளது. கி.பி. 9 - 10 நூற்றாண்டுகளில் தோன்றிய திவாகரம், பிங்கலந்தை நிகண்டுகளில் குடும்பன் என்பது இடம் பெறக்காணோம். ஆனால் அதற்குப் பதில் குடும்பினி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. குடும்பினி என்பதற்கு அந்நிகண்டுகளில் குடும்பத்தலைவி என்று பொருள் கண்டுள்ளது. இடைக்காலச்சோழ மன்னர் கல்வெட்டுகளில் “குடும்பிகள்” என்ற சொல் இடம்பெற்றுள்ளது. ஆக குடும்பினியின் ஆண்பால் பெயர் “குடும்பி” என வழங்கியதாக அறிகிறோம். கி.பி.16 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய சூடாமணி நிகண்டில் “குடும்பினி” என்பதற்குச் தேவி என்று பொருள்
122
கண்டுள்ளனர். தேவி என்பது பெண் தெய்வத்தைக் குறிப்பதுடன், அது மன்னரின் பட்டத்து ராணியையும் குறிப்பதாயுள்ளது. மன்னரின் பட்டத்து ராணி கோப்பெருந்தேவி என வழங்கியது என்பது நாம் அறிந்ததுவே. குடும்பன் என்ற குலப்பட்டம் வழக்கில் உள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்தலைவரையும் ஊர்க்குடும்பன் என்று வழங்குவர். ஊர்க்குடும்பன் எனில் ஊரில் குடும்பு பார்க்கிறவன் ஊர்சபை, ஊர்மன்றம் இவற்றிற்குத் தலைவராக இருப்பவர் என்று பொருள்படும். சங்க இலக்கியங்களில் வரும் ஊரன், மகிழ்நன், கிழவன் என்பவை அன்று இருந்த ஊர்த் தலைவர்களைச் சுட்டுவதாயுள. இத்தலைவர்கள் ஊர் காவலர், புரவலர் எனவும் வழங்கினர் என்பது நாம் அறிந்ததே.
இம்மரபினரைக் கொத்தடிமையாகச் சித்திரிக்கும் முக்கூடற் பள்ளில் இவரைக் 'குடும்பு செய்தூராருக்குக் குழைத்தான் (செய் - 88) என வருவது காண்க. இச்செய்யுளின்புடி, அக்காலத்தில் இம்மரபினரின் தலைவர்கள் தம் மரபினர்க்கு மட்டுமின்றி ஊரிலுள்ள எல்லாப் பிரிவினருக்கும் தலைவராயிருந்து குடும்பு பார்த்தனர் எனத்தெரிகிறது. கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் இறுதியில், சோழர் ஆட்சி தமிழகம் முழுவதுவும் பெரும்பாலும் பரவிய வேலையில் ஊராட்சி முறை சம்பந்தபட்ட பல்வேறு அலுவல்களைக் கவனிப்பதற்கு ஏற்பட்ட ஊர் சபையின் வாரியங்கள் குடும்பு என வழங்கியதாக அறிகிறோம். ஊரானது பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குட ஓலை மூலம் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்
பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்ச வாரியம், பொன் வாரியம், கழனி வாரியம், ஆட்டை வாரியம் எனப் பல்வேறு வாரியங்களில் அங்கம் வகித்தனர். இக்காலத்தில் ஒருவர் தேர்தலுக்கு நிற்க சில விதிமுறைகள் ஏற்பட்டிருந்தன. இக்காலத்தில் தேர்தலுக்கு அபேட்சகராக ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் அக்காலத்தில் ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தேர்தலுக்கு நிற்க அனுமதிக்கப்படுவர். அவருக்கு இருக்கவேண்டிய குறைந்த பட்ச வயது 31; அதிகபட்ச வயது 60 ஆகும். வயது வரம்பு விதி இடையிடையே மாற்றம் பெற்றுள்ளது. அபேட்சகரது உறவினர் ஒருவரும் ஏற்கனவே அங்கத்தினராக இருந்திருக்கக்கூடாது. அங்கத்தினரோ அல்லது அவரது உறவினரோ கையூட்டு வாங்காதவராகவும் இருந்திருக்கவேண்டும். நல்ல கல்வி, அறிவு உடையவராகவும் அரசுக்குத் தீர்வை (வரி) செலுத்துபவராகவும்,
123
குறைந்தது கால்வேலி நஞ்சை நிலம் உடையவராகவும் இருப்பதுடன், அவரது நடத்தையில் எவ்விதமான ஒழுங்கீனமும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இத்தேர்தல் விதிமுறைகள் உத்ரமேரூர், திருச்செய் நல்லூர் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான பல வாரியங்களை மேற்பார்வையிடும் அமைப்பு குடும்பு வாரியம் என வழங்கியது. கல்வெட்டுகளில் குடும்பு வாரியப்பெருமக்களும் தோட்ட வாரியப் பெருமக்களும், (ARE 690 / 1904) களத்து இப்பாட்டை குடும்பு வாரியப் பெருமக்களும், எரிவாரியப் பெருமக்களும், இருநூற்றுவயப் பெருமக்களும் (ARE 688 / 1904) என்று பொறிக்கப்பட்டுள்ளது காண்க. இடைக்காலச் சோழர் ஆட்சியில் வெள்ளாழர் குடும்பு பார்த்தனர் என்பது, தஞ்சை மாவட்டம் மன்னார்குடி கைலாசநாதசுவாமி கோயிலில் உள்ள வெள்ளாழரை . . . பிடாகைகளுக்கு குடும்பும், புரவும் செய்தாரையாதல், ஊர்க்கணக்கரையாதல், பிராமணரிலும், வெள் ளாழரிலும் முதலிகளுக்கு கொளச் சொன்னார் (SII. Vol. VI. ARE 98 / 1897) என்ற கல்வெட்டாலும் மன்னார்குடி இராஜகோபால் பெருமாள் கோயிலிலுள்ள ஆண்டு தோறும் குடும்பு மாறி இடவும்; நாட்டில் வெள்ளாழரையா ... ... ... குடும்பும் புரவும் செய்தாரையாதல், ஊர்க்கணக்கரையாதல் பிராமணரிலும் வெள்ளாழரிலும், முதலிகளுக்குக் கொளச் சொன்னார் (ARE 104 / 1897) என்ற கல்வெட்டாலும் நன்கு விளங்கும். (குறிப்பு: புரவு என்பது வரிவசூல் ஆகும்) அக்காலத்தில் குடும்பு பார்த்தவர் தேவேந்திரகுல வேளாளரே ஆவர். கல்வெட்டுகளில் வெள்ளாழர் என்று பொறிக்கப்பட்டுள்ளவர் இம்மரபினரே என்பதில் எள்ளவும் ஐயம் இல்லை. (இவ்வாசிரியரின் வேளாளர் யார்? நூலைப் பார்க்கவும்).
இன்று வேளாளர், வெள்ளாளர் என வழங்குபவர் அன்று வெவ்வேறு தொழில் மக்களாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வினைஞர், களமர், தொழுவர், கடைசியர், கூத்தர், விறலியர், பரத்தையர், பாணர் முதலிய பல்வேறு இனக்குழுக்களிலிருந்து தோன்றியவர் ஆவர். இவர் நாளடைவில் வளர்ச்சி பெற்று, இன்றைய நிலையை எய்தியுள்ளனர். சோழர் கால மரபை ஒட்டி தேவேந்திர குலத்தாரிடையே குடும்பு முறை பண்டு தொட்டு நீடித்து வருவதை மாவட்டக்குறிப்பு, மற்றும் மக்கள் குடிக்கணக்கு இவைகள் மூலம் அறியலாம். இவரிடையே பஞ்சாயத்து முறை அமுலில் இருந்து வருவது போன்று உயர் சாதி என்று பாராட்டுவோர்மத்தியில் அவை இல்லாதது சிந்திக்கத் தக்க ஒன்றாகும்.
124
அடுத்து குடும்பு என்ற சொல் எப்படிப் பிறந்ததென்பது பற்றிப் பார்ப்போம். இச்சொல் 'குடி என்ற சொல் அடிப்படையிலிருந்தே தோன்றியிருக்கிவேண்டும். குடிமை, குடித்தனம், குடிகை, குடில், குடும்பம், குடும்பி குடும்பினி, குடியானவன், என்ற சொற்கள் பிறந்திருக்கின்றன. குடி என்ற சொல் ஊர்பெயர்களில் அமைந்து குடியிருப்பையும் உணர்த்தும். உறவு முறையுடைய ஒரு குடும்பத்தார் ஒரு குடியினராகக் கருதப்படுவர். இத்தகையப் பல குடிகள் சேர்ந்து வாழும் இடம் குடியிருப்பு என்றும் அவ்விதம் கூடிவாழ்பவர் குடிஎன்றும் பொருள்படும். திருக்குறளில் குடிமை என்னும் அதிகாரத்தில் வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி பண்பிற்தலை பிரிதலின்று (செய். 985) என்ற செய்யுளில் பழங்குடி என்பதற்குப் பரிமேலழகர், சேர, சோழ, பாண்டியர் என்றாப்போல், தொன்றுதொட்டு மேம்பட்டு வரும் குடி என்று பொருள் கண்டுள்ளார் என்பதை நாம் அறிவோம். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் இச்சொல்பற்றிக் கூறுவதாவது: தமிழில்குடி என்பது குடும்பம், குலம், ஆட்சிக்குடி மக்கள், நாட்டு மக்கள் ஆகிய எல்லாப் பொருளும் உடையது. இப் பொருள்கள் குடியாட்சி, விரிவடைந்து வளர்ந்த வகையைக் குறிக்கின்றன. குடும்பமே குலமாய், சமுதாயமாய், நாட்டு மக்களாய் வளர, குடும்ப ஆட்சியே நாடாக விரிவுற்று வளர்ந்து குடியாட்சியாக முதிர்வுற்ற நிலையை அது காட்டுகிறது. (பன்மொழிப்புலவர் – கா. அப்பாத்துரை. மொழி வளம் சேகர் பதிப்பகம். தி. நகர் சென்னை - 17) குடுமி என்ற சொல்லுக்கு வெற்றி, உச்சி, கண்மயிர் எனப் பிங்கலந்தை நிகண்டு பொருள் கூறுகின்றது. சங்ககாலத்துப்பாண்டிய மன்னருள் ஒருவன் முதுகுடிமிப் பெருவழுதி என்று அழைக்கப்பட்டான் என்பது குடிமிக் கோமாற்கண்டு (புறம். - 64) என்ற செய்யுளால் அறியலாம். குடும்பி என்பதற்கு சம்சாரி என்று பொருள்படும் என்பது குடும்பி யெனுங் குறிப்பை மாற்றி (ஞான பா. உற்ப. 69) என்ற செய்யுள் மேற்கோளால் அறியலாம். குடும்பம் என்பது சமுசாரம் என்பதையே குறிக்கும் என்பது குடும்பத்தைக் குற்றமறைப்பான் (கம்ப. இராமா. சேது. ப. 53) என்ற மேற்கோளால் புலனாகும். அடுத்து குடும்பன் குடும்பத்தலைவன் எனப் பொருள்படும், என்பது. ஏழைக்குடும்பனாகி (தாயு. தே. சோ) என்ற தாயுமானவர் பாடலால் அறியலாம். குடும்பன் எனும் சொல் பொதுவாய், எல்லா மரபினருடைய குடும்பத்தலைவரைக் குறிக்கலாமென்றாலும், ஏற்கனவே கூறியது போன்று அது பண்டு தொட்டு வரும் வழக்கப்படி, தேவேந்திர குலத்தாரின் ஊர் மன்றத் தலைவரையும், அதையொட்டி அம்மரபினரின்
125
ஒவ்வொரு குடும்பத் தலைவரையும் சுட்டும் குலப்பட்டமாக அது
வழங்குகின்றது.
(தொடரும்)

வ.உ.சி தெலுங்கர் ஆல் இருட்டடிப்பு மபொசி மீண்டும்

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் 5.9.1872
“கப்பலோட்டிய தமி்ழர்”
வ.உ.சிதம்பரனார்
பிறந்த நாள்
05.09.1872
பிரித்தானிய அரசுக்கு எதிராக “கப்பலோட்டிய தமி்ழர்” என்று வ.உ.சிதம்பரனாரை தமிழர்கள் போற்றிக் கொண்டாடி வருகிறோம். அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரை பேராயக் கட்சி கொண்டாடவில்லை. இந்திய விடுதலைக்கு உழைத்த தமிழர்களை வடநாட்டுத் தலைமை கொண்ட பேராயக் (காங்கிரசு) கட்சி என்றுமே புறக்கணித்து தான் வந்துள்ளது. அதில் வ.உ.சியும் விதிவிலக்கல்ல. வ.உ.சி. தமிழராக மட்டுமல்லாமல் வர்ணதர்மத்திற்கு எதிராகவும், வகுப்புவாரி இடவொதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்ததை பிராமண காங்கிரசு தலைமையால் சீரணித்துக் கொள்ள முடிய வில்லை.
பேராயக்கட்சியின் புகழ்பெற்ற தலைவர் தெலுங்கு பிராமண பட்டாபி சீதாராமையா, தான் எழுதிய ‘காங்கிரசு வரலாறு’ நூலில் ஒருவரி கூட வ.உ.சி.யைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனாலும் மறைக்கப்பட்ட வ.உ.சி. வரலாற்றை இன்றைய இளந்தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம்.
வ.உ.சி. திருநெல்வேலி மாவட்டம் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதர்- பரமாயி அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். வ.உ.சி.யின் உடன் பிறந்தோர் அறுவர்; அதில் ஒருவர் தமக்கையார், இருவர் தங்கையர், தம்பியர் மூவர்.
உலகநாதர் ஒட்டப்பிடார நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவர் வ.உ.சி.யை அங்குள்ள திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். அந்தப் பள்ளியின் தமிழாசிரியர் வீரப்பெருமாள் அண்ணாவியார் என்பவர் நல்ல தமிழ்நூல்கள் பல கற்பித்து வ.உ.சி.யின் தமிழுணர்வுக்கு அடித்தளமிட்டார். தமிழ்மொழியை மிக ஆர்வத்தோடு கற்று வந்த – வ.உ.சி.க்கு ஆங்கில மொழியையும் சேர்த்துப் பயில உலகநாதர் விரும்பினார். அதன்படி அதே ஊரில் – தமது சொந்த செலவில் ஆங்கிலப் பள்ளி ஒன்றை நிறுவி நாதபிள்ளை என்பவரை ஆசிரியராக நியமித்தார். அப்பள்ளியில் படித்து முடித்த பின்னர் வ.உ.சி. தூத்துக்குடி சென்று அங்குள்ள புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், கால்டுவெல் கல்லூரியிலும் தேர்ச்சி பெற்றார்.
வ.உ.சி.யின் குடும்ப மூதாதையர்கள் பலரும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தனர். அதன்வழியில் வ.உ.சி.யும் செல்ல விரும்பினார். திருச்சிராப்பள்ளி சென்று கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் ஆகிய இருவரிடமும் சட்டம் பயின்று 1895இல் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்றார். ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய போது ஏழை மக்களின் சார்பாக வாதிட்டார். எவ்வித கட்டணமும் இன்றி வழக்கை நடத்தி நீதி பெற்றுத் தருவதிலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதிலும் உறுதி காட்டினார். இதில் கையூட்டுப் பெற்ற நீதிபதிகளும் தப்பமுடியவில்லை. நீதிபதிகள் ஏகாம்பர ஐயர், வாசுதேவராவ், பஞ்சாபகேச ஐயர் ஆகியோருக்கும் தண்டனை பெற்றுத் தந்தார்.
1895இல் வ.உ.சி. வள்ளியம்மை என்பவரை மணமுடித்தார். திருக்குறளை பொருளோடு கூறுவதில் வள்ளியம்மை சிறந்தவர். 1901இல் எதிர்பாராத அவரின் மரணம் வ.உ.சி.யை நிலைகுலையச் செய்தது.
பின்னர், மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவ்விணையருக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். உலகநாதன், ஆறுமுகம், சுப்பிரமணியன், வாலேசுவரன், ஞானாம்பிகை, வேதவல்லி, ஆனந்தவல்லி, மரகதவல்லி- என்று இவ்விணையர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
வ.உ.சி. வழக்கறிஞர் பணி புரிந்தபோதிலும், அவரின் மனம் ஆன்மிகத்தையே நாட்டங் கொண்டது. 1900இல் வெளிவந்த “விவேகபாநு” ஆன்மிக இதழோடு தம்மை பிணைத்துக் கொண்டார். தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையிலும் உறுப்பினராக சேர்ந்து இலக்கிய கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார். திருக்குறள் மீதும் மிகுந்த பற்று கொண்டு விளக்க உரை நிகழ்த்தி வந்தார்.
ஆன்மிக, இலக்கியத் தேடலில் கவனம் கொண்டிருந்த வ.உ.சி.யை அப்போது திலகர் தலைமையில் நடைபெற்று வந்த சுதேசி இயக்கம் ஈர்த்தது. பிரித்தானியரின் வங்கப் பிரிவினையை எதிர்த்து அன்னிய ஆடை எரிப்புப் போராட்டம் நாடெங்கும் நடைபெற்று வந்தது. இதைக்கண்டு எழுச்சி பெற்ற வ.உ.சி. வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு சுதேசிப் போராட்டத்தில் ஈடுபட முன்வந்தார். தம்மிடமிருந்த அத்தனை அன்னிய ஆடைகளையும் தீயிலிட்டுக் கொளுத்தினார். “எரிவது ஆடையல்ல: அயலார் ஆட்சியே” என்று முழங்கினார். அயலார் பொருள்கள் எதையும் வாங்குவதில்லை என்று உறுதியும் பூண்டார்.
வட இந்தியரும் வியக்கும் வகையில் சுதேசியம் என்னும் கோட்பாட்டிற்கு அவர் தந்த செயல்வடிவம்தான் சுதேசிக் கப்பல் நிறுனமாகும். “சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி” ( Swadesi steam navigation company) என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட அந்நிறுவனம் 1882ஆம் ஆண்டின் இந்திய நிறுவனச் சட்டப்படி 16.10. 1906 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
இந்நிறுவனத்தின் மூலதனம் பத்து இலட்சமாகும். பங்கு ஒன்றுக்கு ரூ 25 வீதம் 40,000 பங்குகளை விற்பனை செய்து மூலதனம் திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் தலைவராக மதுரைத் தமிழ்ச்சங்க நிறுவனர் பொ.பாண்டித்துரையாரும், செயலாளராக H.A.R.ஹாஜி பக்கீர் முகமது சேட்டும், துணைச் செயலாளராக வ.உ.சி.யும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவர் அவர்கள் ஒரு இலட்சமும், செயலாளர் அவர்கள் இரண்டு இலட்சமும் செலுத்தி அதிகளவிலான பங்குகளைப் பெற்றனர்.
சுதேசி நிறுவனத்தின் கப்பல்கள் ஐரோப்பாவிலிருந்து மும்பை துறைமுகத்திற்கு வரவிருப்பதை அறிந்து வ.உ.சி. மும்பைக்குச் சென்றார். அப்போது அவரது மூத்த மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு காலமான செய்தி பேரிடியாய் காதில் விழுந்தது. பலர் ஊருக்கு திரும்பி வரக்கோரி வேண்டுகோள் விடுத்தனர். அவற்றைப் புறந்தள்ளி, “கப்பலுடன் மட்டுமே நான் வருவேன்” என்று உறுதிபட தெரிவித்தார்.
சில மாதங்கள் கழித்து 1907ஆம் ஆண்டு மே திங்கள் “காலியா” என்று பெயர் சூட்டப்பட்ட கப்பலோடு தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தார். அப்போது அங்கு கூடி நின்ற மக்கள் ” வீரச்சிதம்பரம் வாழ்க” என முழக்கமிட்டனர். இக்கப்பலில் 42 முதல்வகுப்பு பயணிகளும், 24 இரண்டாம் வகுப்பு பயணிகளும், 1300 சாதாரண வகுப்பு பயணிகளும் இருப்பதற்கும், 4000 மூட்டைச் சரக்குகள் ஏற்றுவதற்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது.
“லாவா” என்ற மற்றொரு கப்பலை வ.உ.சி.யின் வழிகாட்டுதலில் எஸ்.வேதமூர்த்தி என்பவர் பிரான்சுக்கு செனறு வாங்கி வந்தார். அத்தோடு இரண்டு விசைப்படகுகளும் வாங்கப்பட்டன. ஒரே காலத்தில் இரண்டு கப்பல்களை வாங்கி சாதனை படைத்த வ.உ.சி.யை பல்வேறு இந்திய ஏடுகள் பாராட்டி எழுதின. பாரதியார் “இந்தியா” ஏட்டில் கருத்துப்படம் வெளியிட்டு சிறப்பித்தார்.
வ.உ.சி. விரும்பியபடி, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே சுதேசிக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதற்கு மக்கள் அனைவரும் பெரும் ஆதரவு நல்கினர். இதனைக் கண்ட பிரித்தானியரின் பி.ஐ.எஸ்.என். கப்பல் நிறுவனம் பயணிகளிடம் கட்டணம் வாங்காமல் இலவசமாக ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. மக்கள் அவற்றைப் புறக்கணித்து சுதேசிக் கப்பலையே நாடினர். இதன் காரணமாக பிரித்தானிய கப்பல் நிறுவனத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 30,000 இழப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பிரித்தானியரின் அரசு, சுதேசி கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்களை மிரட்டியது. வ.உ.சி.க்கு இருந்த பிரித்தானிய எதிர்ப்புணர்வு – மற்ற பங்குதாரர்களிடம் இல்லை. வருவாயை நோக்கமாகக் கொண்ட பங்குதாரர்கள் அவரை துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகும்படி செய்தனர். வெறும் சம்பளம் பெறும் பணியாளராக வ.உ.சி.யை வைத்திருக்கவே விரும்பினர். இதற்கு வ.உ.சி. உடன்பட மறுத்து சுதேசிக் கப்பல் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.
சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் இயங்கி வந்த போதே வ.உ.சி. 1908இல் திருநெல்வேலியில் “தேசாபிமான சங்கம்” என்னும் புதியதொரு அமைப்பைத் தொடங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இந்திய விடுதலைப் பரப்புரையை மேற்கொண்டிருந்தார். அப்போது எழுந்த கோரல் நூற்பாலைத் தொழிலாளர் போராட்டம் அவரை தொழிலாளர் இயக்கத்தின்பால் ஈர்த்தது.
27.2.1908 இல் கோரல் ஆலைத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வேலை நேரக் குறைப்பு, வார விடுமுறை கேட்டு போராட்டத்தில் இறங்கினர். வ.உ.சியோடு சுப்பிரமணிய சிவா அவர்களும் இணைந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்ததால் போராட்டம் வீறு கொண்டது. ஆலை நிர்வாகம் வேறுவழியின்றி அடிபணிந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.
இதனிடையில், “வந்தே மாதரம்” இதழ் நடத்திய அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த விபின் சந்திரபால் அவர்களுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆறுமாத கால தண்டனை விதித்தது. இவர் விடுதலை அடையும் (9.3.1908 அன்று) நாளினைச் சிறப்பாகக் கொண்டாட வ.உ.சி. முடிவு செய்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் இதற்கு தடை விதித்தார். தடையை மீறி சந்திரபாலின் விடுதலை நாள் பல்வேறு ஊர்களில் கொண்டாடப்பட்டது. வ.உ.சி.யின் சட்டமீறலைத் தனக்கு விடுக்கப்பட்ட சவலாகக் கருதிய ஆட்சித் தலைவர்
12.3.1908 இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.
வ.உ.சியும், மற்றவர்களும் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி கேட்டு திருநெல்வேலி- தூத்துக்குடி பகுதிகளில் மக்கள் கோப ஆவேசத்தோடு கிளர்ந்தெழுந்தனர். இரயில் நிலையக் கடைகள் மூடப்பட்டன. அஞ்சலகங்கள், மண்ணெண்ணெய்க் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. காவல் நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. மாவட்ட ஆட்சித் தலைவர் விஞ்சும், ஆட்சித் துணைத் தலைவர் ஆஷ்சும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் இறந்தனர். வேலைக்குத் திரும்பிய கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வ.உ.சி. கைதைக் கண்டித்து அரசியல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் செயலற்று நின்றது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில், தொழிலாளர்கள் முதன்முதலாக வேலை நிறுத்தம் செய்தது, தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள்தான் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதன்பிறகு, திலகர் கைது செய்யப்பட்ட போது அதே ஆண்டில் மும்பைத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வேலை நிறுத்தம் செய்து அரசியல் ஆர்ப்பாட்டம் நடத்தியது வரலாற்றில் குறிக்கப்பட்டிருக்கிறது. அதைவிட எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், தூத்துக்குடியில் தொழிலாளர்கள் நடத்திய இந்திய விடுதலை ஆதரவுப் போராட்டம் அனைத்திந்திய அளவில் சொல்லப்படுவதில்லை.
வ.உ.சி. கைதையொட்டி ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கண்டனப் போராட்டம் நடத்தியதால் மாவட்டம் செயலற்றுப் போனது.
பிரித்தானிய அரசுக்கு எதிராக கலகத்தைத் தூண்டி விட்டார் வ.உ.சி என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் எந்த அரசியல் தலைவருக்கும் விதிக்கப்படாத தண்டனையை நீதிபதி ஏ.எப்.பின்ஹே அறிவித்தார்.
அரசு நிந்தனைக்கு 20 ஆண்டுகளும், சிவாவிற்கு உதவி செய்ததற்காக 20 ஆண்டுகளுமாக மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அத்துடன் நாடு கடத்தல் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார். அதாவது இரட்டை வாழ்நாள் சிறைத் தண்டனையாகும். உயர்நீதி மன்றம் மற்றும் இலண்டன் பிரிவி கவுன்சில் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் நாடுகடத்தல் நீக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளாக தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது.
வ.உ.சி. கோவைச் சிறையில் இரண்டு ஆண்டுகளும், கண்ணனூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளுமாக மொத்தம் நான்கரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.
அவரை சுட்டெரிக்கும் வெயிலில் எண்ணெய்ச் செக்கினை இழுக்க வைத்த பிரித்தானியரின் கொடுஞ்செயல் மனித மாண்புக்கு இழுக்கானது. இதைக்காட்டிலும 24.12. 1912 அன்று கண்ணனூர் சிறையிலிருந்து வெளியே வந்த வ.உ.சி.க்கு பெரும் பாவச் செயல் ஒன்றும் நடந்தது.
வ.உ.சி.யை வாசலில் வரவேற்க பேராயக்கட்சி கூட்டமோ, மக்கள் கூட்டமோ கடலலையென ஆர்ப்பரித்து நின்று மாலை அணிவித்து வரவேற்றிருக்க வேண்டும், யாரும் வரவில்லை! வந்தவர்கள் 4 பேர். வ.உசி.யின் மனைவி, மைத்துனர், நண்பர் கணபதி, தொழு நோயாளி சுப்பிரமணிய சிவா ஆகிய நால்வரும் ஆனந்தக் கண்ணீரோடு வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
சிறைவாழ்வுக்குப் பின் மீண்டு வந்த வ.உ.சி. அவர்களை வறுமையும் பிணியுமே வாட்டி வதைத்தன. அரிசி, நெய், மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தும் மீடேற முடியவில்லை. திலகர் சுயராச்சிய நிதியிலிருந்து மாதம் ரூபாய் 50 அனுப்பி வைத்தார். செல்வத்தோடு வாழ்ந்து வந்தவர் வறுமையோடு வாழவும் பழகிக் கொண்டார்.
1920களில் காந்தியார் தலைமையில் பேராயக்கட்சி செயல்பட்ட போது அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வ.உ.சி. மறுத்து விட்டார். காந்தியார் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்த நிலையில், அதை ஏற்க மறுத்து பேராயக் கட்சியிலிருந்து விலகினார். அதன் பின்னர் அரசியல் பணிகளில் தன் ஈடுபாட்டை குறைத்துக் கொண்டு தமிழ்ப்பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
வ.உ.சி. சிறையிலிருக்கும் போதே அவர் எழுதிய சிறைப்பாடல்கள், செய்யுள் வாசகங்கள் படிப்போர் நெஞ்சைப் பிழிய வைக்கும். தந்தைக்கு.. மனைவிக்கு.. என்று தனித்தனியே எழுதி தமது அன்பை வெளிப்படுத்தினார். புகழ்பெற்ற ஆங்கில மொழி அறிஞர் ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் போன்றவை ஜேம்ஸ் ஆலனின் மூல நூல்களைப் போலவே ஒத்திருக்கும்.
வர்ணாசிரம எதிர்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி ஆதரவுக் கோரிக்கை, தமிழ்ப் பற்று, ஆகியவை வ.உ.சி. அவர்களிடம் நிரம்ப இருந்தன. வர்ணாசிரம கொள்கை எதிர்ப்பின் காரணமாக பெரியார் அவர்களோடு நெருங்கிய நட்பு வ.உ.சி.க்கு இருந்தது.
நீதி போதனையை உரைக்கும் மெய்யறிவு, மெய்யறம் நூல்கள் அவரின் எழுத்தாற்றலுக்கு சான்று பகரும். பதிப்புத் துறையிலும் வ.உ.சி. கால் பதித்தார். அவர் பதிப்பித்த திருக்குறள் மணக்குடவர் உரை, அறத்துப்பால்; தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள், இளம்பூரணம்; இன்னிலை ஆகிய நூல்களைக் கற்றவர் எவரும் போற்றுவர்.
தம் வாழ்வின் இறுதியில் வ.உ.சி. கடும் நோய்வாய்ப்பட்டார். தண்ணீர் கூட பருக முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பாரதியாரின் பாடலை பாடக் கேட்டு இன்புற்றார். அப்போது, ” என்னை சிறையிலடைத்து துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடிய வில்லையே” என்று கண்ணீர் மல்கினார். மனைவி, மக்கள், சுற்றத்தார் சூழ்ந்திட 18.11.1936 இல் வ.உ.சி.யின் உயிர் பிரிந்தது.
ஆங்கில, தமிழ் பிராமண ஊடகங்கள் வ.உ.சி.யின் மறைவை அப்போது இருட்டடிப்பு செய்தன. அவர் மறைந்த மூன்று ஆண்டுகள் வரை நினைவு நாள் கொண்டாடப்படவில்லை.
வ.உ.சி. மறைவுக்குப் பின் பேராயக்கட்சி சார்பில் கெளரவித்த பெருமை ம.பொ.சியை மட்டுமே சேரும். அவர் தான் வ.உ.சிக்கு சென்னை – பேராயக்கட்சி – அலுவலகத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையில்
21.12.1939 இல் மார்பளவு சிலை வைத்து புகழஞ்சலி செலுத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.
குறிப்புதவி:
1. மா.ரா. அரசு எழுதிய
“வ.உ.சிதம்பரனார்”
2. ம.பொ.சிவஞானம் எழுதிய “கப்பலோட்டிய தமிழன்”
3. அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய “தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்”
நன்றி:
வரலாறு அறிவோம், கதிர் நிலவன்
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
மாதமிருமுறை இதழ், (செப். 1-15, 2017)
Share this:
  வஉசி கப்பல் பொருளாதாரம் வணிகம் ஆங்கிலேயர்