வியாழன், 23 மார்ச், 2017

சீமான் இந்து அர்ஜூன் சம்பத் வந்தேறி வங்கதேசம் விடுதலை மேற்குவங்க முதல்வர்

aathi tamil aathi1956@gmail.com

21/4/16
பெறுநர்: எனக்கு
சீமான் கிறிஸ்தவர், அவர் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும்
என சொல்லும் அர்ஜுன் சம்பத், தமிழர் அல்ல. வீட்டிலும், வெளியிலும் தமிழை
ஏற்றவர் தான் தமிழர். அந்த வகையில், அர்ஜுன் சம்பத்துக்கு, எங்களைப்
பற்றி பேச
எந்தத் தகுதியும் இல்லை.
சீமானை கிறிஸ்தவர் என கூறுவது பொய்யான பரப்புரை. அவர் இந்து, கிறிஸ்தவ
மதங்களை எதிர்ப்பவர். தமிழர்களுக்கான மதம் சைவ மதம். அதைத் தான் அவர்
ஏற்றுள்ளார். அதனால் தான், தமிழர்களுக்கான மரபு வழி வழிபாட்டு முறைகளை
ஏற்ற, முருகனையும், கிருஷ்ணனையும் முப்பாட்டன் என அறிவித்துள்ளார்.
சீமான் நாத்திகவாதியாக இருந்தார். படிப்படியாக அவர் ஆத்திகவாதி
ஆகிவிட்டார் என கூறுவது தவறு. நாம் தமிழர் என்ற கட்சியைத் துவங்கும்
முன், சீமான் தனி மனிதன். அந்த வகையில், திராவிடர் கழக மேடைகளில்,
பகுத்தறிவு பற்றி அவர் பேசியிருக்கலாம். அதை நாங்கள்
மறுக்கவில்லை.
ஆனால், ஈ.வெ.ரா., மற்றும் மார்க்சை முழுமையாக அவர் ஏற்றவர் அல்ல.
அவர்களின் சில கொள்கைகளில் மட்டும், அவருக்கு உடன்பாடு உண்டு.
எப்போது ஈழத் தமிழர்கள்
படுகொலை செய்யப்பட்டனரோ, அப்போது தான் இவர்களின் உண்மை முகம் தெரிந்தது.
மேற்கு வங்கத்தில், முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே,
'வங்கதேசத்துக்கு இந்திய படையை அனுப்பி, என் இன மக்களை காப்பாற்றத்
தவறினால், மாநில போலீசை அனுப்புவேன்' என, மத்திய அரசை எச்சரித்தார். இந்த
எச்சரிக்கைக்கு பயந்து, ராணுவத்தை பங்களாதேசுக்கு அனுப்பியது இந்தியா.
இதுபோன்ற நடவடிக்கையை, ஈழத் தமிழர்களை காப்பாற்ற, தமிழகத்தை ஆண்டவர்கள்
செய்யவில்லை. இதற்கு காரணம், அவர்கள் திராவிடர்கள். அவர்களுக்கு, தமிழன்
நலன் முக்கியம் அல்ல என்பதை, நாங்கள் உணர்ந்தோம்.
திராவிடர்களை எதிர்ப்பதற்காக, தெலுங்கர், மலையாளி, கன்னடர்களை சீமான்
எதிர்க்கிறார் என்பதும் சரியல்ல. திராவிடத்தை, அவர் எதிர்க்கிறார்.
காரணம், தமிழகத்தில் தமிழர்களை வீழ்த்தி, ஆட்சி அதிகாரம் மற்றும் தங்களை
வளமாக்கிக் கொள்ள, தமிழர் அல்லாதவர்கள், திராவிடர் போர்வையில்
ஊடுருவினர்.
அதனால், 50 ஆண்டு களாக, தமிழகத்தை தமிழன் ஆள முடியவில்லை என்பதே சீமானின் கணிப்பு.
குறிப்பாக, மூன்று சதவீத பிராமணர்களை, தமிழர்களுக்கு எதிராகத்
திருப்பிவிட்டு, 30 சதவீத திராவிடர்கள், தமிழர்களை அடிமையாக்கி,
தொடர்ந்து அரசியல் நடத்தி வருகின்றனர். இந்த உண்மையை, மக்கள் மத்தியில்
கொண்டு செல்வதே, எங்களின் நோக்கம்.
எனவே தமிழகத்தை, தமிழர் ஆட்சி செய்ய ஓட்டு போடுங்கள் என்கிறோம்.
அதேநேரத்தில், பிற மொழி பேசுபவர்களை எதிர்க்கவில்லை. ஏன், நாம் தமிழர்
கட்சியில் கூட, பல மொழி பேசுபவர்களும், பல மரபு வழிகளை சேர்ந்தவர்களும்
உள்ளனர். அவர்களும் இருக்கட்டும். ஆனால், தமிழனின் ஆட்சியின் கீழ்,
அவர்கள் இருக்கட்டும் என்பது தான், நாம் தமிழர் கட்சியின் சித்தாந்தம்.
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து, தெலுங்கானா உருவானது. இரு
மாநிலங்களிலும் தெலுங்கு பேசுபவர்கள் தான் இருக்கின்றனர். அங்கு, ஆட்சி
செய்பவர்கள் சந்திரபாபு நாயுடுவும், சந்திர
சேகர ராவும் தான்.
இதேபோல், கேரளம், கர்நாடகம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம் என,
இந்தியாவின் எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும், அங்கு ஆட்சி
செய்பவர்கள் அம்மாநில மண்ணின் மைந்தர்களே. எனவே, தமிழகத்திலும் அந்த
நிலையை உருவாக்க வேண்டும் என, களம் இறங்கி உள்ளோம்.
'தமிழகத்தையும், அதன் மொழியையும் விஜயநகர பேரரசர்கள் காப்பாற்றினர்.
தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அவர்கள் பாதுகாத்துக் கொடுத்தனர்'
என்கின்றனர். ஆனால், நடந்தது என்ன தெரியுமா? இலங்கை சென்ற
விஜயநகரத்துக்காரர்கள், அங்கு சென்றதும், சிங்கள மொழியைக் கற்றுக்
கொண்டு, பவுத்த மதத்தை தழுவினர். அவர்கள் தான், பண்டார நாயகாவில் இருந்து
ராஜ
பக் ஷே வரை. இவர்கள் அனைவரும் நாயுடு சமூகத்தினர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, ராஜபக் ஷே வரக் காரணமும் அதுவே. இவர்கள்
ஈழத் தமிழர்களை அழிக்க, இலங்கை அரசியலை பயன்படுத்தினர். எனவே, நாங்கள்
இவர்களை ஏற்க முடியாது. இவர்கள் எந்தக் காலத்திலும், தமிழர்களையும்,
தமிழ் பண்பாட்டையும் வாழ வழிவிட்டது இல்லை.
எங்களது பிரதான கொள்கை, தமிழ் தேசிய இனத்தின் நாடு தமிழ்நாடு என்பது
தான். இது இந்தியாவுக்குள் இருக்கிறது. நாங்கள் இந்திய குடிகள். எங்களது
மதம், சைவ மதம். அதையொட்டி தான் எங்களது அரசியலும், பண்பாடும் இருக்கும்.
இதைப் புரிந்து கொள்ளாமல் பேசுபவர்கள், தமிழர்
களுக்கு எதிரிகள்.
என்னைப் பெற்றவர், என் தகப்பன். என் ரத்தத்தின் ரத்தம், என் தலைவன்.
எனவே, என்னை ஆளக் கூடியவன் தமிழனாக மட்டுமே இருக்க முடியும். இதைத்தான்
தேர்தல் அரசியலில் முன்னெடுக்கிறோம். இதை தமிழர்கள் புரிந்து
கொண்டுள்ளனர். திராவிடர்கள் வழக்கம் போல், தமிழர்களை அடிமையாக்க
முயற்சிக்கின்றனர்.
வியனரசு
மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

www.dinamalar.com/news_detail.asp?id=1505055

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக