வியாழன், 23 மார்ச், 2017

40000 ஆண்டு முன்பே நிலையான வாழ்க்கை குறவர் பழமை நாகரீகம்

aathi tamil aathi1956@gmail.com

21/4/16
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah பகிர்ந்துள்ளார்.
குறிஞ்சி முல்லை நிலக்குடிகள் நாடோடியாய் வாழ்ந்தார்கள் என்பது பணியடர்
மலைகளை கொண்ட நிலநடுக்கோட்டுக்கு தள்ளி உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு
பொருந்தலாம்.
ஆனால் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே
பணியூழி விலகி இயல்வளர்ச்சிகளுக்கான சூழலியல் மலைகளில் உருவாகிவிட்டன.
அதனால் தமிழக ஈழப்பகுதிகளில் தோன்றிய குறிஞ்சி நிலக்குடிகள் நாடோடிகளாய்
இல்லாமல் சீறூர்களை அமைத்து அகழ்தலை தொடங்கிவிட்டனர் என்கிறேன் நான்.
மெக்காலே கல்வியைத்தாண்டி சிந்திக்க தெரியாத ஆய்வாளர்கள் தான் ஐரோப்பிய
நிலஙகளை தமிழ்த்தேச நிலங்களோடு ஒப்பிட்டு தமிழ்க்குறிஞ்சி நிலக்குடிகளை
நாடோடிகள் என எழுதி வருகின்றனர். - தென்காசி சுப்பிரமணியன்
Sivagnanam Balasubramani ' Yuvaraj Amirthapandian' செல்வா குமார்' KS
Thurai ' Gunaseelan Samuel ' VettaiMannan M SolaiRaja
கூர்ங்கோட்டவர்
தமிழர்களில் குறிஞ்சி நிலக்குடிகள் தோன்றிய காலத்திலேயே நிரந்தரக்குடியி
ருப்புகள் அமைத்துவிட்டனர் என்கிறேன் நான்.
ஐரோப்பிய ஆதிக்கத்திலேயே பழங்கற்கால ஆய்வு இருந்ததாலும் ஐரோப்பிய நாடுகள்
நிலநடுக்கோட்டில் இருந்து வெகுதூரம் தொலைவில் இருந்ததாலும் அங்கே
குறிஞ்சி நிலங்கள் பணி படர்ந்து இருந்தமையாலும் அங்குள்ள குறிஞ்சி நில
மக்களுக்கு உணவு தொடர்ந்து கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் நாடோடி
வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும்.
ஆனால் ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கள் பணி படர்ந்த குறிஞ்சி நிலங்களை வைத்து
உலகமுழுதுமிருந்த குறிஞ்சி நில மக்களை நாடோடிகள் என கதை கட்டிவிட்டனர்.
தமிழ்நாட்டின் தட்பவெட்பம் 40,000 ஆண்டுகள் முன்னரே சைவ உணவுக்கான
மூலப்பொருட்களை விளைவிப்பதற்கான சூழலை பெற்றுவிட்டது. அதனால்
பழந்தமிழகத்தில் குறிஞ்சி நில குறவரே நிரந்தர குடியிருப்புகளை அமைத்து
சீறூர்களை அமைத்துவிட்டனர் என்கிறேன் நான்.
மெக்காலே பாடத்திட்டத்தைத
்தாண்டி யோசிக்க தெரியாத ஆய்வாளர்களால் இதை நிறுவவே முடியாது. ஆனால் நான்
உருவாக்கப்போகும் புது ஆய்வுமுறை 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
தமிழகத்தில் (அப்போது ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாய் இருந்தது) சீறூர்களை
குறவர்கள் அமைத்துவிட்டனர் என்பதை நிறுவும்.
உலகத்தில் எந்த ஒரு ஆய்வாளரும் குறிஞ்சி நில மக்கள் நாடோடிகள் என்றே
சொல்லிவருகின்றனர். இதற்கு பின் ஒழிந்திருக்கும் அரசியலும் மிகப்பெரிது.
ஆனால் அதை எல்லாம் தாண்டி என் ஆய்வுமுறை பழந்தமிழகத்தில் குறவரே முதல்
சீறூரை அமைத்தனர் என்ற வாதத்தை வழுவான சான்றுகளுடன் முன்மொழியும்.
- @ தென்காசி சுப்பிரமணியன் (Rajasubramanian Sundaram Muthiah )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக