ஞாயிறு, 19 மார்ச், 2017

மலேசியத் தமிழர் தற்போது நல்லநிலை தெலுங்கு வந்தேறி பதவியில் மலேசியா

aathi tamil aathi1956@gmail.com

22/12/16
பெறுநர்: எனக்கு
கடார வேங்கை காளிதாசன் மதுரைவீரன்
இன்றைய மலேசியச் சூழலில் தமிழர்களைப் பிரதிநிதித்து நடுவண் அரசில்
இடம்பெற்றுள்ள ஒரே கட்சி ம.இ.கா எனப்படும் மலேசிய இந்தியர் காங்கிரஸ்.
இது முழுக்க தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் தலைவர்கள்
பதவி சுகத்திற்காக தமிழர்களின் எதிர்காலத்தை அடமானம் வைப்பவர்கள்.
உட்கட்சி பூசலும் இளைஞர்கள் மத்தியில் துரோகிகள் என்ற நிலையில்
இருக்கிறது. எதிர்கட்சிகளின் நிலை பரவாயில்லை. உரிய மதிப்பும்
அங்கீகாரமும் உள்ளது. எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்
தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு உட்பட அனைத்தும் திருப்தியளிக்கும் வகையில்
உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் பினாங்கு துணை முதல்வர்
இராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், சார்ல்ஸ் சந்தியாகோ, கஸ்தூரி
பட்டு ஆகியோர் தமிழர்களே. இவர்களில் கணபதி ராவ் (தெலுங்கர்)
எதிர்கட்சியில் நல்லமுறையில் பணியாற்றி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக