செவ்வாய், 21 மார்ச், 2017

தோழர் பாலு படுகொலை இடுக்கி புத்தகம் மலையாளி 1956 கம்யூனிஸ்ட் பொதுவுடைமை anwar

aathi tamil aathi1956@gmail.com

29/8/16
பெறுநர்: எனக்கு
தங்கராசு நாகேந்திரன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Tamil
Balan மற்றும் 6 பேர் உடன்.
தோழர் பாலு
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் தோழன்
வண்டிப்பெரியாறு பாலு.
கேரளத்தில் எதற்கும் அஞ்சாத கம்யூனிஸ்டுகளே தூய தமிழர் பாலுவை கண்டு
பயந்தார்கள்.கார
ணம்,பாலு தனது "பிரச்சார ஜாத்தா" (பிரச்சார ஊர்வலங்கள்) மூலம் தேயிலைத்
தோட்ட மக்களிடம் கம்யூனிஸ்ட்களின் முகத்திரையை கிழித்தவர் பாலு.
பொதுச் சேவைக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதற்காக திருமணம்
செய்துகொள்லாமல் வாழ்ந்த பாலு அடிப்படையில் உண்மையான கம்யூனிஸ்ட்.
1984 வரை 14 வருடங்கள் இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம்
ஆகியவற்றில் களப் போராளியாக களமாடியவர்.
ஆனால், ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தலைதூக்கிய
சாதி,இன,வேறுபாடுகளும் முதலாளித்துவ சிந்தனைகளும் செஞ்சட்டைக்குள் இருந்த
பாலுவை கதர் சட்டைக்காரராக மாற்றியது,தொழிலாளர்கள் மத்தியில் பாலுவுக்கு
இருந்த செல்வாக்கை பார்த்த காங்கிரசு கட்சி அவரை வண்டிப் பெரியாறு மண்டல
காங்கிரசு தலைவராக அங்கீகரித்தது.இடுக்கி ஜில்லாவின் ஐ.என்.டி.யு.சி
செயலாளராகவும் வளர்ந்தார்.
2006 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாலுவை பீர்மேடு தொகுதியில்
வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டது காங்கிரசு.ஆனால்
,தங்களிடம் அரசியல் படித்த பாலு தனிப்பெரும் தலைவராக வளர்வதை
கம்யூனிஸ்ட்கள் விரும்பவில்லை.
20.10.2004 ல் பத்துமலை தேயிலைத் தோட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக்
கொண்டிருந்த பாலு அவர்களை 8 பேர் கொண்ட கொலைகார கும்பல் மேடையில் இருந்த
பாலு ஈவிரக்கமின்றி வெட்டி கொன்றது.
இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 8 பேர் சரணடைந்தனர்.
ஆனால், இடுக்கி செசன்சு நீதிமன்றம் 2008_ல் அத்தனை பேரையும் விடுதலை
செய்தது.
இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய காங்கிரசு கட்சி அக்கறை எடுத்து
கொள்ளவில்லை. ஆனால், பாலுவின் தாய் முனியம்மா விடுவதாய்
இல்லை.எழுதப்படிக்க தெரியாத முனியம்மா தன் மகனின் கொடூர கொலைக்கு நீதி
கேட்டு எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
தன் தள்ளாத வயதிலும் வழக்கை தொடந்து நடத்தினார் அந்த போராளியின் தாய்
கடைசியாக நீதி கிடைத்தது அதை உணரும் நிலையில் முனியம்மா இல்லை.
கொலையில் சம்பந்தப்பட்ட 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்றம்.
ஆனால் இந்த தீர்ப்பு வருவதற்குள் புத்திர சோகம் முனியம்மாவின் புத்தியை
பறித்து கொண்டது.
வண்டிப்பெரியாறு பகுதியில் வெள்ளைச் சட்டையில் பளிச்சென செல்பவர் யாரைம்
பார்த்தாலும் "மக்களே பாலு....உனக்கு இன்னும் கூட்டம்
முடியல்லியோ...சீக்கிரமா வீட்டு வா..." என கையைப் பிடித்து விசாரிப்பதே
அவரின் அனிச்சையாகிப் போனது.
தன் மகனை கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்தது கூட அவர் உணரும்படி இல்லை.
கொஞ்ச நாளில் முனியம்மாவின் குரலும் அடங்கிப் போனது.
கொலை செய்துவிட்டு சிறையில் உள்ளவர்களின் குடும்பத்திற்கு மாதம்
பத்தாயிரம் வீதம் உதவி செய்கிறது ஒரு கட்சி.
முனியம்மாவின் இறப்பிற்கு கூட காங்கிரசு கட்சித் தலைகள் வரவில்லை
கம்யூனிஸ்ட்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு பயம்.
வண்டிப் பெரியாற்றில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் தங்களுக்குள்
ஒற்றுமையில்லாமல் சாதியம் பேசி வாழ்ந்ததால்,உன்னதமான தலைவன் பாலுவை
இழந்து விட்டார்கள்.
பாலுவின் தியாக வாழ்வை நூலாக எழுதி ஆவணப்படுத்தி இருக்கிறார் நாம் தமிழர்
கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அன்வர் பாலசிங்கம் அவர்கள்.
"பாலுவின் கதை" என்ற தலைப்பில் 320 பக்கங்கள் கொண்ட நூலாக தமிழ் மலையாளம்
என இரு மொழிகளிலும் வெளிவர இருக்கிறது இது பாலுவின் உண்மையான வரலாற்றுப்
பதிவாக இருக்கும்.
இதை ஒரு ஆவணப் படமாகவும் பதிவு செய்ய திட்டமிட்டிருக்
கிறோம் என்கிறார் அன்வர் பாலசிங்கம்.

anwar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக