செவ்வாய், 21 மார்ச், 2017

கொள்ளேகால் ஈவேரா 1956

aathi tamil aathi1956@gmail.com

25/8/16
பெறுநர்: எனக்கு
திராவிட குறியீடு ராமசாமி நாயக்கரை அறிவோம்;
==============================
========
கொள்ளேகாலம்(Kollegala) கொங்கு தமிழ் தேசத்தின் மிக அழகிய ஒரு பகுதியாகும்.
இன்றைய கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மிக முக்கிய பகுதியாகும்.
1956 வரை சென்னை மாகாணத்தின் கோவை மாவட்ட பகுதியாக இருந்தது.
இன்றைய கர்நாடகத்தின் பட்டு, கைத்தறிகள், பட்டு புடவைகள் என மூலதனமே
இங்குதான். ஒரு காலத்தில் முழுக்க தமிழும் பின்னர் கன்னடம் தமிழுமாய்
இன்று பெரும்பாலும் கன்னடமுமாய் மாறிய பகுதி இது.
ஆயினும் அங்கு தமிழ் பேசபட்டு வருகிறது இன்றுவரை.
கன்னடர்களால் அபகரிக்கபட்ட தமிழர் பகுதி அவை.
11.10.1955 ல் திராவிட கழக தலைவர் ராமசாமி நாயக்கரின் பேட்டி;
நிருபர்;கொள்ளேகாலம் கன்னட ராஜ்ஜியத்துடன் சேர்ந்து விடுமே..!
இதுபற்றி உங்கள் கருத்து என்ன..?
க.வெ.ரா; கொள்ளேகாலம் பறிபோனது பற்றி எனக்கு # கவலை இல்லை.அப்பகுதி நமக்கு
# சம்மந்தமில்லாதது . நம்மிடமுள்ள ஒரு பளு நீங்கியது என்று சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக