திங்கள், 10 பிப்ரவரி, 2020

போர் யானை காதல் பற்றி இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 17 ஆக., 2018, முற்பகல் 10:09
பெறுநர்: எனக்கு
விசயக்குமார் கோவிந்தன்
போர் முடிந்துவிட்டது. வெற்றி மாலை சூடிய சோழனின் வீரர்களோடு யானைகளும், குதிரைகளும் நாடு திரும்பின.
சோழனின் ஆண் யானை (களிறு), அதன் காதலியாகிய பெண் யானையைப் (பிடி) பார்ப்பதற்காகச் செல்கிறது - ரொம்ப நாளாகப் பிரிந்திருந்த காரணத்தால், இந்தக் காலக் காதலர்களைப்போல, உரத்த குரலில் காதல் பாட்டுகள் பாடிக்கொண்டு, மிகுந்த ஆவலோடு அதைத் தேடி ஓடுகிறது.
ஆனால், அந்தப் பெண் யானையின் வீட்டு வாசலுக்குச் சென்றதும், இந்த ஆண் யானை தயங்கி நின்றுவிடுகிறது. அதற்குமேல் நடக்கமுடியாததுபோல், அங்கேயே வெட்கப்பட்டு நின்றுகொள்கிறது.
ஏன் ?
போரில், எதிரி நாட்டின் கோட்டைச் சுவர்களில் மோதி மோதி, கொடி பறக்கும் அந்த மதில்களைச் சாய்த்ததில், அந்த யானையின் கம்பீரமான தந்தம் உடைந்துபோயிருக்கிறது.
அதுமட்டுமா ? பகை அரசர்களின் மணிமுடிகளைத் தனது கால்களால் இடறி இடறி, அதன் கால் நகமும் தேய்ந்திருக்கிறது.
'தந்தம் உடைந்து, நகம் தேய்ந்து, இப்படி அழகில்லாத நிலையில், நான் எப்படி என் காதலியைப் பார்ப்பேன் ?', என்று வெட்கப்பட்டுக்கொண்டு, அந்த யானை புறக்கடையிலேயே தயங்கி நிற்கிறது !
போரில் இப்படிப்பட்ட காயங்கள் உண்டாவது இயல்புதான். ஆனால், காதலியைப் பார்க்கத் தயங்கும் யானையின் நாணத்தின்மீது இந்தச் செய்தியை அழகாக ஏற்றிச் சொல்வதால், அந்தப் போரின் கடுமையையும், தீவீரமாய்ப் போரிட்ட சோழன் யானையின் வீரத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது இந்தப் பாடல் !
கொடிமதில் பாய்ந்துஇற்ற கொடும், அரசர்
முடிஇடறித் தேய்ந்த நகமும், பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறக்கடை நின்றதே
கல்லார்தோள் கிள்ளி களிறு.

முத்தொள்ளாயிரம்
யானைப்படை பெண்யானை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக