திங்கள், 10 பிப்ரவரி, 2020

நாவிதர் மருத்துவர் ஆமாத்தியர் கருணீகர் தொடர்பு ஆமாத்ய அமைச்சர்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:18
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்த திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகர் ஆமாத்திய குல அந்தணர் எனக் குறிப்பிடப்படுக
ிறார். இவர் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு.
‘வைத்தியர் ஆயுள்வேதியர் மருத்துவர்
ஆரியர் கடகர் ஆமாத்தியரே’
என்று வைத்தியரைக் குறிப்பிடும் சொற்களை வரிசைப் படுத்தும் அபிதான மணிமாலை என்ற நிகண்டு (செய்யுள் -235).
"ஆயவளம் பதியதனின் ஆமாத்தியரில் அருமறையின்
தூய சிவாகம நெறியின் துறை விளங்க…"
வந்தவர் மணிவாசகர் என்று கூறும் திருவிளையாடற் புராணம் (வாதவூரருக்கு உபதேசித்த படலம்-செய்யுள்4).
'‘மன்னுமிந் நகரிதன்னுள் மானமங்கலத்தார் ஆகுந்
தொன்னெறி முனிவராம் ஆமாத்தியர் தொழுகுலத்து
நன்னெறி விடையிற் போந்தார் நண்கணத் தலைவர் நாமம்
மின்னெறி வாதவூரர் என்றுவந் துதயஞ் செய்தார்’
என்று கூறும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (ஞானோபதேசம்-செ.6.)
இதே குலத்தைச் சேர்ந்தவரெனக் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற மற்றொருவர் பெரியபுராணம் சுட்டும் சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியார். பல்லவப் பேரரசன் முதலாம் நரசிம்மவர்மனுக்காகப் படைநடத்தி வாதாபி வென்றவர். இவர் காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு. இவர் கொணர்ந்த வாதாபி கணபதி இவரது சொந்த ஊரான திருச்செங்காட்ட
ங்குடி (குடந்தை-நாகை மார்க்கத்தில் திருமருகல் அருகே) சிவன் கோயிலில் உள்ளது.
‘ஆயுர்வேதக் கலையும் அலகில் வடநூற் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயிற்று… ‘
விளங்கியவர் பரஞ்சோதியார் என்று கூறும் பெரிய புராணம் (சிறுத்தொண்டர்-செய்யுள்3).
"மாமாத்திரரே பிடகர் மருத்துவர் ஆயுள்வேதியர்க் கபிதானம்மே"
என்று ஆயுள்வேதியரை குறிப்படும் சொற்களைக் கூறும் பிங்கல நிகண்டு (செய்யுள் 784).
கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் சடையவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் காலத்தில் அமாத்தியராக (அமாத்தியர்-அமைச்சர்) இருந்தவர்" மாறன் காரி". மதுரகவியார் எனப்படுபவர் இவர். பராந்தகன் ஆணைக்கிணங்க வேள்விக்குடிச் செப்பேடுகளை வெட்டுவித்தவர் இவர் (வைத்ய சிகாமணி மாறன் காரி) என்று அச்செப்பேடும் கூறும் . ஆமாத்திய குல அந்தணரான இவர் மூவேந்த மங்கலப் பேரரையன் எனும் பட்டம் பெற்றவர். மதுரையை அடுத்த ஆனைமலைப் பெருமாள் கோவில் இவர் கட்டுவித்தது. அதில் நரசிங்கப் பெருமாள் திருமேனியை நிறுவியவரும் இவரே.
இதே பாண்டியன் காலத்துச் சீவரமங்கலம் செப்பேட்டில் ஆணத்தியாகக் (தலைமைச் செயலாளர்) குறிப்பிடப்படுபவன் வாத்ய கேய சங்கீதங்களால் மலிவெய்திய வைத்திய குலத்தவனான தீரதரன் மூர்த்தி எயினன் என்கிற வீர மங்கலப் பேரரையன் ஆவான். இவ்விருவரையன்றி சங்கரன் ஸ்ரீதரன், சாத்தன் கணபதி முதலான பலரும் இக்காலத்தில் மங்கலப் பேரரரையன் பட்டம் பெற்ற அரசியல் தலைவர்களாக இருந்திருக்கின்றனர்.
வாத்ய கேய சங்கீதமென்பது வாத்திய மற்றும் வாய்ப்பாட்டு இசை. மங்கலப் பேரரையன் என்பது அரசியல் தலைவர்களாக இருந்த ஆமாத்திய குல அந்தணர்களில் சிலருக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்டமாகும்.
‘சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து அம்பட்டன் உத்தமசோழனான இராஜசோழ பிரயோகத்தரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் இவ்வூர்ச் சல்லியக் கிரியை’ என்று கி.பி.1016-ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவிசலூர்க் கல்வெட்டு (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 23 ஏ.ஆர்.350 ப.241) வைத்திய குலத்தாருக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் குறிப்பிடுகிறது. பிரயோகத்தரையன் என்றால் அறுவைச் சிகிச்சை நிபுணன் என்று பொருள்.
இவற்றைக் காண, பல்லவர் காலம் முதல் பிற்காலப் பாண்டியர் காலம் வரை ஆயுர்வேதக் கலையும், வடநூற் கலையும், இசைக் கலையும் கற்றுப் படைக்கலத் தொழிலும், அமைச்சர் பணியும் புரிந்த அந்தணர்களாக ஆமாத்ய குலத்தார் இருந்தது தெரிகிறது.
கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பிற்காலப் பாண்டியப் பேரரசுக்குப் பின் விஜயநகரப் பேரரசே தமிழகத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் நிலைபெற்றது என்பது கருதத்தக்கது. அதன் பின்னர் இச்சமூகம் குறித்து உயர்வான பதிவுகள் இல்லை. கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை மதிப்புடன் நோக்கப்பட்ட ஒரு சமூகம் அடுத்த ஆட்சிக்காலத்தே தாழ்ந்ததென வீழ்த்தப்பட்டது.
27 ஜூலை, PM 10:23 ·

Srishakthi Srishakthi
(‘சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து அம்பட்டன் உத்தமசோழனான இராஜசோழ பிரயோகத்தரையனுக
்கும்) -- குறிப்பது அம்பட்டன் என்பது பூவும் நீறும் கொண்டு பூசனை செய்யும் பூசகர்கள் உள்ளிட்டவரை பட்டர்கள் ஏன்று குறிப்பிடுவது வழக்கம். இஃது இன்றுவரை வழக்கத்திலுள்ளது, வாழ்வியல் சடங்குகளை செய்து வைக்க ஐந்து வகை பட்டர்கள் இருந்தனர், ஆவ்வகையில் ஒவகை தொழில் செய்தவரை பட்டர் என்று முற்காலத்தில் அழைத்தனர், ஐந்து பட்டர் = ஐம்பட்டர் = அம்பட்டர்= அம்பட்டன் என்றானது, காலப்போக்கில் பிறர் நம்முடையதைக் கைப்பற்ற அம்பட்டர்கள் அம்மட்டர்களானார்கள்

Mani Pari
அந்தணர்கள் அம்பட்டர் எனப்படும் முடிவெட்டி தாடி மழிப்பவராகவும் பணியாற்றியவார்களா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 10:14 மணிக்கு

Srishakthi Srishakthi
அந்தணர்கள் அம்பட்டர் எனப்படும் முடிவெட்டி தாடி மழிப்பவராகவும் பணியாற்ற வைக்கப்பட்டவர்கள்
இன்றளவிலும் இறுதி சடங்கு மற்றும் சில சடங்குகள் அவர்களின் பங்களிப்புடன் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே

Logan K Nathan
நீங்கள் நாவிதரைக் குறித்து கேட்கிறீர்கள். அந்தணர்கள் மருத்துவர்களாக இருந்துள்ளனர். மருத்துவ தொழிலின் தன்மை காரணமாக தனித்து ஒதுக்கப்பட்ட இவர்கள் நாவிதர்களுடன் கலந்தனர்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 11:09 மணிக்கு

Mani Pari
நாவிதருடன் அந்தணர்கள் கலந்துவிட்டார்கள் என்பதற்கு சான்று?
நாவிதர் இறுதிச்சடங்கு செய்வது சூத்தீரர்களுக்கு மட்டுமே.
மருத்துவம்செய்பவர்கள் எல்லாம் ஒரே சாதியா? மருத்துவம் ஒரே சாதியினர்ன் செய்தார்கள் என்பதற்கு சான்று உண்டா?
அந்தணர் நாவிதரானர் என்பதற்கு உங்கள் கூற்றுக்கு சான்று?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 12:25 மணிக்கு

Narayanaswamy Raja
அம்- (அழகிய) பட்டர்கள் மருத்துவப்பணி, இசய், இழகுக்கலய், சடங்குகள் நடத்தல் போன்ற பணிகளய்ச் செய்ததுடன் படய்கள் நடத்தி வெற்றி கண்டனர் என்பது புதுச் செய்தி. எனினும் அம்பட்டர் பெற்றிருந்த சிறப்பெல்லாம் பட்டர்களுக்கு விட்டுக்கொடுத்துத் தாழ்வடயந்தது எவ்வாறு ?
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஜூலை 28 அன்று PM 5:32 மணிக்கு

Mani Pari
பட்டர் னா? என்ன பொருள்?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 6:37 மணிக்கு

Logan K Nathan
பட்டர் என்றால் வடமொழியில் (பாடம்) படித்தவர் என்று பொருள்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 6:39 மணிக்கு

Mani Pari
அப்படியானால் கற்றோர் என்று பொருளா? கற்றோர் எல்லாம் பட்டரா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 6:56 மணிக்கு

Nakinam Sivam
பட்டர் என்பது சூத்திரம் அறிந்த சூத்திரர் அந்தணர் பட்டம் பெற்றவர்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 7:30 மணிக்கு

Mani Pari
Nakiran Nakinam Sivam . சூத்திரம் என்று எதை சொல்கின்றீர்கள்?

Santhosh Kumar
அந்தணர்களாக ஆமாத்ய குலத்தார் ??? தற்போது யாரை குறிக்கின்றன?

Logan K Nathan
ஆமாத்ய குலத்தாரை பிராமணர்களாக தற்போது கருதுவதில்லை. இவர்கள் தற்போது காயஸ்தா எனப்படுகின்றனர்.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 1:32 மணிக்கு

Mani Pari
காயஸ்தர் என்பது கன்னடர்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 11:54 மணிக்கு

Mani Pari
காயஸ்தர் தமிழகத்தில் இல்லை.கன்னடர் மட்டுமே.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 11:56 மணிக்கு

Logan K Nathan
கருணீகர் காயஸ்தா குலத்தவர்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 12:46 மணிக்கு

SriGanesan Mayakrishnan
கருணீகர் என்றால் கணக்குப் பிள்ளைகளா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 1:16 மணிக்கு

Logan K Nathan
ஆம், ஆங்கிலேயர் காலத்தில் வெறும் அரசு கணக்குப் பிள்ளைகளாக எஞ்சி இருந்தவர்கள்.
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 2:43 மணிக்கு

Mani Pari
கருணீகர் பற்றி இலக்கிம் கல்வெட்டுக்களில் உண்டா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 2:45 மணிக்கு

SriGanesan Mayakrishnan
கணக்குப் பிள்ளைகள் வேளாளர் பிரிவு என்று நினைத்திருந்துன்.
கணக்குத் தந்தைகள் என்று ஏதாவது பிரிவு உள்ளதா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 2:45 மணிக்கு

Mani Pari
கருணீகர்தான் கணக்குப்பிள்ளைகள் என்பதற்கு சான்று?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 2:47 மணிக்கு

Logan K Nathan
பிள்ளை என்பது அரசு ஊழியர்களுக்கு இடைக்காலத்தில் ஏற்பட்ட பட்டம். இவர்களே தந்தை குலமாகவும் திகழ்கின்றனர். நீங்கள் கூறுவது போல் இவர்களிலிருந்தும் பல சாதிகள் தோன்றி பிரிந்துள்ளன.

Mani Pari
கருணீகர்+காயஸ்தர்+ஆமாத்தியர்+ந
ாவிதர்+கணக்குப்பிள்ளை+அந்தணர் இந்த சொற்களை சான்றுகள் கொண்டு தொடர்பு படுத்தி சொன்னால் சரி. வெறும் கருத்தாகச்சொன்னால் சரியல்ல.

அம்பட்டர் சாதி ஆமாத்ய பார்ப்பனர் பிராமணர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக