திங்கள், 10 பிப்ரவரி, 2020

நாகர் தமிழரே மணி நாகன் தமிழி எழுத்துரு கிபி 2 ஆம் நூற்றாண்டு

aathi1956 aathi1956@gmail.com

வியா., 9 ஆக., 2018, பிற்பகல் 1:35
பெறுநர்: எனக்கு
Balaji Gandhi
இலங்கையின் பூர்வீக்குடிகள் நாகர் என்பது சிங்களவரே ??
49 நிமிடங்களுக்கு முன்பு ·
வலையிலிருந்து அனுப்பப்பட்டது

Aathimoola Perumal Prakash
இல்லை.
தெலுங்கர் இன்றும் நம்மை அரவர் என்பர்.
அரவம் என்பது பாம்பு.
2 நிமிடங்களுக்கு முன்பு ·

Aathimoola Perumal Prakash
நாகநாட்டு இளவரசி பீலிவளை என்பவள் பற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது
சற்றுமுன் ·

Aathimoola Perumal Prakash
மணி நாகன் எனும் தமிழி எழுத்து சான்று 
“மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு”
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.
இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப் பட்டிருப்பதாக தெரிவித்த பத்மநாதன், தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் விளக்கினார்.
இலங்கையின் பூர்வீக குடியினரான நாகர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துருக்கள், நாகர்களும் தமிழரும் ஒன்றே என்கிற தமது கருதுகோளுக்கான மற்றும் ஒரு வலுவான ஆதாரமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார் பத்மநாதன்.
இது குறித்து அவர் பிபிசிக்கு அளித்த செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

பழமை இலங்கை ஈழம் கல்வெட்டு எழுத்துரு கிணறு மட்டக்களப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக