திங்கள், 10 பிப்ரவரி, 2020

புலிகள் தண்டனை பண்ணை விவசாயம் பெண்கள் சிறை

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 4:10
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் வசந்தன்

விடுதலைப் புலிகள் இயக்கம் பல விவசாயப் பண்ணைகளை உருவாக்கி நடத்தி வந்தது. அதில் ஒன்று புன்னாலைக்கட்டுவன் மஸ்கன் பாம் வளாகத்தில் அமைந்திருந்த ஒரு விவசாயப் பண்ணை. இதன் நிர்வாகியாகவும் தமிழினி செயலாற்றியுள்ளார். இந்தப் பண்ணை சமூகத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட பெண்களை தடுத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட பண்ணையாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவினரே சமூகக் குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கி வந்தனர். தண்டனை என்பது 3 மாதங்கள், 6 மாதங்கள் என இந்த விவசாயப் பண்ணையில் பணி புரிவதாகும். நன்னடத்தைப் பெண்கள் பண்ணை என்று அழைக்கப்பட்ட இப்பண்ணையில் விளையும் பொருட்கள் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே இப்பண்ணையின் நிர்வாத்தையும், அதில் உள்ள பெண்களின் அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, அப்பெண்களுக்கு ”நிர்ணயிக்கப்பட
்டிருந்த தண்டனைக் காலங்கள் முடிந்ததும் வாழ்வாதாரமாக 5000 ரூபாய் பணமும், அரிசி, மா, சீனி, பருப்பு என எல்லாமுமாக 25 கிலோ பெறுமதியுள்ள உணவுப் பொருட்களும் கொடுத்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்”.
அது மட்டுமல்லாது, ”அப்பெண்கள் நன்னடத்தைப் பண்ணையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர்களுடைய குடும்பங்களை மாதமொருமுறை சென்று கண்காணித்து மகளிர் முன்னணிப் பொறுப்பாளருக்கு அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த்க குடும்பத்தின் தேவைகளை, குறிப்பாக குழந்தைகளு்கான தேவைகளை அந்தப் பிரதேசப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்து உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். அதே வேளை அந்தப் பெண்கள் விடுதலையாகி வீடு சென்ற பின்னரும் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்ற நிலைமைகளை ஆராய்ந்து தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்”.
இந்த விவரணையானது, இயக்கம் எவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு நிர்வாகத்தை செயற்படுத்தி வந்தது என்பதற்கு சிறந்த சான்றாக உள்ளது.
# பூங்குழலி_Poonkuzhali

கமலா பாலன்
ஊரெழு என்னும் குறிச்சியில்!
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 48 நிமிடங்களுக்கு முன்பு

கோ ஜெயச்சந்திரன் வன்னியன்
தற்சார்பு வாழ்வினை எளிதாக செயல்படுத்தியுள்ளார்...இது ஒரு ஆகச்சிறந்த ஆளுமை

புதுமுயற்சி வேளாண்மை பெண்ணுரிமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக