திங்கள், 10 பிப்ரவரி, 2020

வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆதரவு பதிவுகள் சீமான் பெ.மணியரசன் சிற்பம் மருத்துவம் அக்கு கார்ப்பரேட் மருத்துவமனை

a

athi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்சனி, 11 ஆக., 2018, பிற்பகல் 8:43
பெறுநர்: எனக்கு
[3/8, 15:37] ‪+91 97686 00851‬: கோவைல ராயல் கேர் ன்ற மருத்துவமனை ஆரம்பிச்சி 14 மாசம் தான் ஆகுது இது வரை 6032 பிரசவங்கள் நடந்துள்ளன, 5809 பிரசவங்கள் சிசேரியன்!! 152 பிரசவங்களில் குழந்தைகள் மரணம், 3 கர்ப்பிணிகள் அறுவை சிகிச்சையின் போது மரணம்!! சிசேரியன் க்கு 100000 ₹, முடியாதவர்கள் மாத தவனையில் பணம் கட்டலாம்!! கோவையின் எந்த ஆம்புலன்ஸ்ல பிரசவத்துக்காக ஏறினாலும் ராயல் கேர் மருத்துவமனைக்கு மட்டுமே செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் ராயல் கேர் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்படுவர்..!! கடந்த ஓராண்டில் ராயல் கேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 12091 .... கலெக்ஷன் ஏஜென்ட்களை நியமித்து கடன் பாக்கியை வசூல் செய்கிறார்கள்!! அந்த மருத்துவமனைக்கு வெகு அருகில் தான் ஹீலர் பாஸ்கர் 🔥

இப்போ புரியுதா?? ஹீலர் பாஸ்கர் ஏன் கைது ன்னு.....
[4/8, 08:09] ‪+91 97686 00851‬: *மகப்பேறு குறித்த பயிற்சிக்காக கைதுசெய்யப்பட்ட மருத்துவர் ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும்.*
*– சீமான் வலியுறுத்தல்*

மருத்துவர் ஹீலர் பாஸ்கர் கைதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் மருத்துவர் ஹீலர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு முற்றிலும் எதிரானதாகும்.

நிஷ்டை எனும் அமைப்பின் மூலமாக, ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி’ எனும் பெயரில் மகப்பேறு குறித்தப் பரப்புரை நிகழ்வொன்றை வரும் ஆகஸ்ட் 26 ம் தேதியன்று கோவையில் நடத்துவதற்கு மருத்துவர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அந்நிகழ்வுக்கெதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீது  மோசடி செய்யும் நோக்கத்துடன் ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அப்படியே அது குற்றமென்றால் பயிற்சி வகுப்பை தடை செய்திருந்தாலே போதுமானது. மரபுவழி மருத்துவத்தையே மடமைத்தனம் என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்துவதைத் தாண்டி வேறு எதனையும் இக்கைது நடவடிக்கை சாதிக்கப் போவதில்லை.

திருப்பூரில் கிருத்திகா எனும் பெண்மணிக்கு அவரது கணவர் காணொளியைப் பார்த்து மகப்பேறு பார்க்க முயன்று அப்பெண்மணி இறந்துபோனது பெரும் வேதனைக்குரிய நிகழ்வாகும். முறையான வழிகாட்டுதலோ, மகப்பேறு பயிற்சியோ, முன் அனுபவமோ, அதுகுறித்தான எந்தவொரு அடிப்படை அறிவுமின்றி மகப்பேறு செய்ய முயன்றது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேநேரத்தில், இதனை வைத்து மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் கட்டமைக்க முயல்வதும், அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவோரை சிறைப்படுத்துவதும் மிகத் தவறானப் போக்காகும். இது தமிழர்களின் மரபுவழி மருத்துவத்திற்கும், பாரம்பரியமான இயற்கை வாழ்வியலுக்கும் திரும்புவோரைத் திட்டமிட்டுக் குழப்பி திசைதிருப்பும் துரோகச்செயலாகும்.

முடி உதிர்தல், ஆண்மைக்குறைவு போன்றவைகளுக்குத் தீர்வெனக் கூறி பலதரப்பட்ட விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. அவ்விளம்பரங்கள் வாயிலாகக் காட்டப்படும் மருத்துவமானது உயிருக்குத் தீங்கு விளைவிக்கா, பக்கவிளைவும் எதுவுமற்ற தீர்வினைத் தரும் என்பதற்கு எவ்வித உறுதிப்பாடுமில்லை. அவ்வாறு காட்டப்பட்ட மருத்துவத்தின் வாயிலாக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு தனிப்பெரும் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக மக்களின் அறியாமையை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உயிரும், உடலும் வணிகமாக்கப்பட்டு மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் இப்பெரும் மோசடி ஆளும் வர்க்கத்தின் கண்பார்வையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எவரையும் மோசடி வழக்கின் கைதுசெய்ததுமில்லை; அவர்களது பரப்புரைக்கு எவ்விதத் தடை உத்தரவை இடவுமில்லை.

மேலும், மதங்களின் பெயராலும், ‘நோயைக் குணப்படுத்துகிறேன்’ எனும் பொய்யுரையும், ‘இறந்தவரை உயிர்ப்பிக்க எம்மிடம் வாருங்கள்’ எனும் மத அடிப்படைவாதப் பரப்புரையும் இங்கு செய்யப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையை வெளியே எடுக்க நல்ல நேரம் பார்க்கும் மூட நம்பிக்கை கொடுமைகளும்கூட தழைத்துக் கொண்டுதானிருக்கிறது. அவர்களுக்கெதிராக சட்டமும், அரசும் இதுவரை எவ்விதத் துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை.

ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் மூலமாக குழந்தையை வெளியே எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதை கண்முன்னே பார்த்து வருகிறோம். மகப்பேறின்போது தாய் இறந்துபோவதை மோசமானச் சுகாதார குறியீடாக உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் செய்யும்போது நிகழும் மரணங்களை வைத்து எவரும் ஆங்கில மருத்துவமே தவறென வாதிட முன்வருவதில்லை. இன்னும் சொல்லப் போனால், விபத்து எனக் கூறி அதனை எளிதாக மூடி மறைத்து விடுகின்றனர். அதேசமயம், இயற்கையாகக் குழந்தையைப் பெற்றெடுக்கும் மரபுவழி மருத்துவத்தையே பயிலாத ஒருவர் சுகப்பிரசவம் எனும் பெயரில் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க முயன்று அதில் அக்கர்ப்பிணி பெண் இறந்து போனதை தனிமனிதத் தவறு என்பதனைக் கணக்கிடாமல் ஒட்டுமொத்த மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் குற்றஞ்சாட்ட முயல்வது மிகுந்த உள்நோக்கமுடையது. இதனை அடிப்படையாக வைத்து மரபுவழி மருத்துவத்தையே அடிப்படைவாதமாகவும், அறிவற்றச்செயலாகவும் நிறுவ முற்படுவோரின் செயலானது மகப்பேறினை பெரும் வணிகமாக்கி அதன்மூலம் இலாபமீட்டத் துடிக்கும் தனியார் முதலாளிகளின் இலாபவேட்டைக்குத் துணைபோகிற கொடுஞ்செயலாகும்.

மரபுவழி மருத்துவத்தின் வாயிலாகவே, ஆங்கில மருத்துவத்தின் வாயிலாகவோ எதன் வாயிலாகக் குழந்தையினைப் பெற்றெடுக்க வேண்டுமென்பதை எவரும் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. அது உரிமையினையும், விருப்பத்தினையும் சார்ந்தது. அதேநேரத்தில், நமது பாரம்பரிய மரபுவழி மருத்துவம் குறித்தும், இயற்கை முறையில் மகப்பேறு பெறுதல் குறித்தும் போதிய விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் செய்யலாம். அவ்வாறு செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். அந்த அடிப்படையில் மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரை மேற்கொள்ளவிருந்த மருத்துவர் பாஸ்கர் கைது நடவடிக்கை என்பது தேவையற்ற ஒன்றாகும்.

ஆகவே, மருத்துவர் ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
[4/8, 21:56] ‪+91 97686 00851‬: ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களின் கைது நடவடிக்கையின் -#உண்மை_காரணம்.!

ஐயா ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். அவர் சுகப்பிரசவம் குறித்த வகுப்பு நடத்த விளம்பரம் கொடுத்து இருந்தார், அதனால் கைது செய்கிறோம் என காரணம் கூறுகிறார்கள்...

ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல. இது ஒன்றும் முதல் வகுப்பல்ல. சுகப்பிரசவம் குறித்து ஏற்கனவே பல வகுப்புகள் - மருட்டி பிரசவம் -  நடத்தி உள்ளார். அப்போது கைது செய்யவில்லை. மேலும் 8 வருடங்களாக  நோயில்லாமல் வாழ கற்று கொடுத்து வருகிறார்...

இப்போது இரண்டு வருடங்களாக தற்சார்பு வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களையும் கற்று கொடுத்து வருகிறார்.  தேங்காய் எண்ணெய்  சோப்பு , செக்கு நல்லெண்ணெய் , செக்கு கடலை எண்ணெய், தூய தேங்காய் எண்ணெய், இயற்கை அரிசி, இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள், இயற்கை உணவு பொருட்கள், இன்னும் பல...

மேலும் தற்சார்பு வாழ்க்கைக்கு தேவையான பயிற்சியை அளிக்கவும் உள்ளார். இதற்கான வகுப்பு வரும் "ஆகஸ்ட் 15"  அன்று சென்னையில் நடக்க உள்ளது. இதில் நம் வீட்டில் பயன்படுத்தும் "42" வகையான பொருட்களை நாமே குறைந்த செலவில், தரமாக தயாரிப்பது எப்படி என ஹீலர் பாஸ்கர் பயிற்சி தர உள்ளார். மேலும் பன்னாட்டு நிறுவன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அந்த வீடியோவில் கூறி உள்ளார்...

ஏற்கனவே குளியல் சோப்பு , கலப்பட எண்ணெய் மார்க்கெட் இவரால் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது . பலரும் தூய தேங்காய் எண்ணெய் சோப்பு, செக்கு எண்ணெய்க்கு மாறி வருகின்றனர்.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இதில் பலத்த அடி. "வருமானம் இழப்பு"...

இதில் மேலும் 42 பொருட்கள் குறித்த பயிற்சி என்றால் சும்மா விடுவார்களா கார்ப்பரேட் முதலாளிகள்..! எதாவது காரணம் கிடைக்குமா என்று காத்திருந்து. இந்த சுகப்பிரசவ பயிற்சியை காரணமாக வைத்து  கைது செய்து விட்டார்கள்...

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இயற்கை மருத்துவம்  பற்றி கூறினால் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆங்கில மருத்துவத்தை பற்றி குறை கூறினாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் பெரும்பாலும் மீடியாக்கள் மூலமாக பிரச்சாரம் செய்து , பயம் காட்டி ஆங்கில மருத்துவத்தை நடத்தி விடலாம். முட்டாள் மக்கள் என்ன சொன்னாலும் நம்புவார்கள் என அவர்களுக்கு தெரியும்.

ஆனால் தற்சார்பு வாழ்கை என்று பேசினால் போதும். உங்களை கைது செய்து விடுவார்கள். ஏனென்றால் கார்ப்பரேட்டுகள், இல்லுமினாட்டிகளுக்கு அவர்கள் வியாபாரம் முக்கியம். அதை இழக்க ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அதற்காக எதையும் செய்வார்கள்...

தற்சார்பு பேசுபவன் கார்ப்பரேட் கம்பெனிகளின் முதல் எதிரி. சுதந்திர தினத்தன்று , கார்பொரேட் கம்பெனி பொருள்களில் இருந்து விடுதலை தர நமக்கு பயிற்சி தர இருந்தார் ஹீலர் பாஸ்கர்...

அவர்களது வியாபாரத்தில் கை வைத்தால் கார்ப்பரேட் அலறுவான். அதிகாரத்தை பாய்ச்சுவான். இதுதான் ஹீலர் பாஸ்கருக்கும் நடந்தது...
[6/8, 15:18] ‪+91 97686 00851‬: =============================================
வீட்டில் சுகப்பிரசவம் தண்டனைக்குரிய குற்றமா?
=============================================
தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப்
பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=============================================

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி - தென்றல் நகரில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரியான கண்ணன், கடந்த 03.08.2018 அன்றிரவு தனது மனைவி மகாலெட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இரவு 11.45 மணியளவில், அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து, தாயும் சேயும் நலமாக இருந்துள்ளனர். பிரசவம் முடிந்த மறுநாள், மகாலட்சுமி தனது இயல்பான வீட்டு வேலைகளைப் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து ஆரம்ப நலத்துறை (சுகாதார) ஊழியர்கள் மூலம் தெரிந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், மாவட்ட பொது சுகாதாரம் இணை இயக்குநர் உள்ளிட்ட மொத்த மருத்துவக் குழுவும், பி.சி. பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன், தேனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான காவலர்களும் “குற்றவாளி” வீட்டை முற்றுகையிடுவது போல், கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டு, தாயையும் குழந்தையையும் மருத்துவமனையில் சேர்க்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தாயையும் குழந்தையையும் பரிசோதிக்க வந்த அலோபதி மருத்துவர்களுக்கு கண்ணன் – மகாலட்சுமி இணையர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அரசு சார்பில் சித்த மருத்துவர் குழு அங்கு வந்தது. தாயையும் குழந்தையும் பரிசோதித்த போடேந்திரபுரம் வட்டார துணை மருத்துவ அலுவலரும், சித்த மருத்துவருமான திலகவதி, கம்பம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சிராஜூதீன் ஆகியோர் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்றாலும், தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது, எனவே குழந்தையின் தொப்புள் கொடியை அகற்ற வேண்டுமெனக் கூறி அகற்றியுள்ளார். அரசு நலத்துறை துணை இயக்குநர் வரதராஜ், குழந்தை 3.50 கிலோ எடையுடன் நல்ல நிலையில் உள்ளது என்றார்.

இந்நிலையில், மருத்துவர்களை மிரட்டியதாக கூறி கண்ணன் மற்றும் அவரது தந்தை தனுஷ்கோடி, தாய் அழகம்மாள் ஆகியோர் மீது பி.சி.பட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததுடன், தனுஷ்கோடியை கைது செய்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இது குறித்து, தேனியில் ஊடகங்களிடம் பேசியுள்ள தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசு விதிகளின்படி மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என்றும், சட்ட விதிகளை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு நலத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், வீட்டுப்பிரசவம் பார்ப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது, அந்தப் பிறப்பை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று மட்டுமே சட்டம் கூறுவதாக பி்.பி.சி. தமிழ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

நாடெங்கும் ஓடும் தொடர்வண்டிகளில், பேருந்துகளில், வீடுகளில் என பிரசவங்கள் இயல்பான முறையில் நடந்து கொண்டுள்ள நிலையில், அவற்றையெல்லாம் “குற்றச்செயலாக” சித்தரித்து, அதில் ஈடுபடுபவர்கள் மீது “குற்ற” நடவடிக்கை எடுக்கும் கார்ப்பரேட் ஆதரவுப் போக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கொண்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையால் சூழப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தையும், மருத்துவ முறைகளையும் கட்டாயப்படுத்தித் திணிக்கும் தமிழ்நாடு அரசின் இப்போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயமும் அந்தரங்க உரிமை (Right to Privacy)-யை உறுதி செய்கின்றன. தாங்கள் விரும்பும் மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. இவை அனைத்தையும், தமிழ்நாடு அரசு மீறியுள்ளது, இங்கு கார்ப்பரேட் காட்டாட்சி நடக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாடு அரசு, உடனடியாக தனுஷ்கோடியை விடுதலை செய்து, கண்ணன் உள்ளிட்டோர் மீது தொடர்ந்துள்ள வழக்கைத் திருபம்பப் பெற வேண்டும்! உரிய முறையில் நடைபெறும் இயற்கை முறை வீட்டுப்பிரசவங்களை தமிழ்நாடு அரசு தடுப்பதும், அதில் ஈடுபடுவோரை மிரட்டுவதும் கூடாது!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannottam.com
=====================================
இணையம்: tamizhdesiyam.com
=====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக