திங்கள், 10 பிப்ரவரி, 2020

2009 இனப்படுகொலை கருணாநிதி துரோகம் சுருக்கமாக

aathi1956 aathi1956@gmail.com

2 ஆக., 2018, பிற்பகல் 8:04
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
'துரோகத்தால் வீழ்ந்தது தமிழீழம்'
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் மிகப் பெரிய மனிதப் பேரழிவு இலங்கையில் தமிழீழ மண்ணில் நிகழ்ந்தது. அங்கு தமிழினம் மிகக் கொடூரமான வழிகளில் அழிக்கப்பட்டது. ஒருவன் தமிழன் தானா.... என்பதை உரசிப் பார்த்துக் கொள்ளும் களமாக இறுதிப்போரின் போது அவன் அளித்த பங்களிப்பை வைத்து முடிவு செய்யலாம்.
20-நாடுகளின் துணையுடன் 7 ஏகாதிபத்திய நாடுகளின் முழு ஆதரவுடன், போரில் தடைசெய்யப்பட்ட நச்சு ஆயுதங்களை பயன்படுத்தியும், கனரக ஆயுதங்களைக் கொண்டும் ஈழத்தில் ஒரு சின்னஞ்சிறு தமிழீழத் தேசிய இனம் அழிக்கப்பட்டது. தங்களைக் காப்பாற்ற 18 மைல் தொலைவில் வாழும் தங்களது தாய்த்தமிழகம் திரண்டெழும் என்று நம்பினார்கள். தமிழகமும் கிளர்ந்தெழவும் செய்தது. ஆனால் 8- கோடி தமிழர்கள் நாம் இருந்தும் ஏன் நமது தொப்பூழ் கொடி உறவுகளை உறவுகளைக் காப்பாற்ற முடியாமல் போனது? துரோகம் தான் தமிழீழத்தை அழிக்கத் துணை போனது. துரோகத்தலைமை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய அழிவை தடுத்திருக்க முடியும்.
நோய்வாய் பட்டு கிடக்கும் கருணாநிதி அவரின் அரசு தான் மிக முக்கிய காரணம் என்பதை தமிழ் குழந்தைகள் கூட அறியும். சமீப நாட்களாக தொலைக்காட்சி ஊடகங்களில் அனைத்து விவாதங்களிலும் கருணாநிதி வானளாவப் புகழப்பட்டு வருகிறார். எதிர்மறையாக அவரது பச்சையான இனத்துரோகத்தை இந்தக் கட்டத்தில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் முன்னால் ஒரு உளவியல் போரை நடத்த வேண்டியுள்ளது. பண்பாடு, நாகரிகம், மனிதநேயம் என்றெல்லாம் பேசி வரலாற்றில் செய்த துரோகங்களை மறைத்து விடக்கூடாது. ஒருபுறம் அம்மனிதர் தமிழினத்தை தமிழினத்தை காக்க வந்த தெய்வமாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அவரின் மோசமான மறுபக்கத்தை இந்த நேரத்தில் அம்பலப்படுத்தியாக வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்ட காலங்களில் முழுமையாக, மனத்தெளிவுடன் தங்களை ஒன்றுபடுத்திக் கொள்ளாமல், பெயரளவுக்கு தொடர்பு கொண்டவர்கள், மற்றும் தமிழின உணர்வே இல்லாதவர்கள் தான் விமர்சிக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
அக்காலத்திய துரோக நிகழ்வுகளை ஒப்பீட்டுக்காக இன்று நாம் பார்ப்பது அவசியமே. லட்சக்கணக்கான மக்கள் குண்டு வீச்சுகளில் பலியாகி வீதிகளில் பிணங்களாக சிதறிக் கிடக்கும் போது சர்வதேச சமூகத்தின் கண்களில் இருந்து மறைக்க சிங்கள பேரினவாத அரசு, இந்திய அரசு வழங்கிய புல்டோசர்களை கொண்டு அவசர அவசரமாக குழிகளில் மொத்தமாக கொட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தான்... நமது முதல்வர் கருணாநிதி அவர்கள் டெல்லியில் சோனியாவின் வீட்டு படிகளிலும் மன்மோகன்சிங் வீட்டுப் படிகளிலும் 'ஏறி இறங்கிக் கொண்டிருந்தார், எதற்காக?.. மத்திய அரசின் இன அழிப்புப் போருக்கு தான் ஆற்றிய சேவைக்கு பதவிப் பரிசுகள் கேட்டு வாங்கத்தான்.
அப்போது ஒரு செய்தியாளர் கருணாநிதியிடம், "ஐயா தங்களது தமிழர்கள் பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பிணங்களின் நாற்றமும், மக்களின் ஒப்பாரியும், அழுகுரலும் இன்று ராமேஸ்வரம் வரை கேட்டுக்கொண்டிருக்கிறதே, நீங்கள் இப்படி பதவி கேட்டு வந்துள்ளீர்களே" என்று கேட்ட போது, கருணாநிதி கூறினார், "சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை பற்றி உனக்கு தெரியுமா? ஒரு வீட்டில் இழவு என்றால் பக்கத்து வீட்டில் விருந்து.." என்று ஏகடியம் பேசினார். இதுதான் தமிழர் பண்பாடு என்பதை போல் கூறினார்.
மே18 இறுதி போர் முடிந்து பத்து நாட்கள் நிறைவு பெறாத நிலையில் மதுரையில் மூத்த மகனின் பிறந்தநாளுக்கு பட்டு வேட்டி சட்டையுடன் கிடாய் கறி விருந்து சாப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார். 'பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்டு விட்டார், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கொல்லப்பட்டு விடுவார்' என்ற செய்தியை கொழும்புவிலிருந்து எம்.கே. நாராயணன் கருணாநிதியிடம் தகவல் கூற அடுத்த மணி நேரமே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுவலி என்று பொய் கூறி படுத்துக்கொண்டார். இதேபோல் மீண்டும் ஒரு செய்தி சொல்லப்பட்டவுடன், மெரினா கடற்கரையில் மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி தமிழர்களை ஏமாற்றி வஞ்சித்தார்.
ஜெயலலிதா புலிகளுக்கு எதிரானவர் என்று அறியப்பட்ட 91-96ம் ஆண்டுகளில் அவரது ஆட்சியில் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக சிங்கள அரசைக் கண்டித்து மூன்று முறை பொது வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் நடத்தினார். ஆனால் கருணாநிதியோ 2006-ல் பொது வேலை நிறுத்தம் செய்யக் கோரி தன்னிடம் வந்த நெடுமாறன் வீரமணி அவர்களிடம் உறுதி அளித்துவிட்டு கடைசி நேரத்தில் வாழப்பாடி ராமமூர்த்தியையும் மார்க்சிஸ்ட் கட்சியும் விட்டு எதிர் அறிக்கை விடச் செய்து பொது வேலை நிறுத்தம் இல்லை என்று அறிவித்து தமிழ் மக்களை ஏமாற்றினார்.
விமர்சிக்க வேண்டாம் என்று கூறும் இவர்கள் தான் ஜெயலலிதா மரணப் படுக்கையில் இருந்த போது ஊழல் மகாராணி, கொள்ளைக்காரி என்று பக்கம் பக்கமாக எழுதியும், பேசியும் வந்தவர்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
சிங்கள மூதாட்டி சிரிமா வோவுக்கு இந்தியாவில் சிறப்பு சிகிச்சை... ஆனால் தமிழ் மூதாட்டி எங்கள் பார்வதி அம்மாவை விமானத்தை விட்டு இறங்க விடாமல் விரட்டியடித்த கருணாநிதி கூறினார்.. "பார்வதி அம்மாவை வைத்து நெடுமாறனும் வைகோவும் தமிழர் எழுச்சி மாநாடு நடத்த திட்டமிட்டதால் அனுமதிக்க மறுத்தேன்" என்றார். மயக்கநிலையில் சிகிச்சைக்கு வந்த 86 வயது மூதாட்டிக்கு கருணாநிதி காட்டிய மனிதநேயம்.. தமிழ் பண்பாடு இதுதான்...
-வைகை கருப்பையா.
நேற்று, AM 9:56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக