திங்கள், 10 பிப்ரவரி, 2020

தூத்துக்குடி தெலுங்கர் சாதிவெறி தங்கள் சமூக ஆசிரியருக்கு வேலை கேட்டு போராட்டம்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 7 ஆக., 2018, பிற்பகல் 12:03
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
பிள்ளைகளின் படிப்பு வீணானாலும் பிழையில்லையாம்! அவ்வளவு சாதி வெறி!
செய்தி:
மாற்றுச்சான்றிதழ் கேட்டு பெற்றோர்களின் பிடிவாதம் - குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம்!
தூத்துக்குடியில் சின்னவநாயக்கன்ப
ட்டி கிராம பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மாற்றுச்சான்றிதழை வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இதனால் அப்பள்ளியில் படித்துவரும் 120 குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் சின்னவநாயக்கன்ப
ட்டி கிராம பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இதனால் அப்பள்ளியில் படித்துவரும் 120 குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ளது சின்னவநாயக்கன்பட்டி கிராமம். இங்கு, கடந்த 1945-ம் ஆண்டு முதல் இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இதில், இக்கிராமத்தைச் சேர்ந்த, 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களே அதிகம் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு ஆசிரியை மே 31-ம் தேதி இப்பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றார். அந்தக் காலிப் பணியிடத்தில், தங்களது சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியைதான் பணியில் அமர்த்த வேண்டும் என, அக்கிராமத்தில் அதிகம் வாழும் மக்கள் கம்பளத்து நாயக்கர் பள்ளிக்கு தெரிவித்தனர்.
அரசு விதிமுறைப்படிதான் ஆசிரியர் பணி நிரப்பப்படும் என பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை, 9-ம் தேதி முதல், அந்த சமுதாய மக்கள், தங்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர். இதுகுறித்து, தாசில்தார் லெனின், ஆர்.டி.ஓ விஜயா ஆகியோர் தலைமையில் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பெற்றோர்கள் தங்களின் குழந்கைளைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். தற்போது பள்ளியில் 12 மாணவ, மாணவியரே உள்ளனர்.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் லெனின், ``இந்தச் சம்பவம் குறித்து, ஆரம்பத்தில் தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஆசிரியராக நியமிக்க வேண்டும் எனக் கூறியவர்கள், பின் எங்கள் கிராமத்துக்கு அரசு உதவி பெறும் பள்ளி வேண்டாம், பஞ்சாயத்து யூனியன் பள்ளிதான் வேண்டும் என தெரிவித்தனர். பின்னர், அரசு உதவி பெறும் பள்ளியை நடுநிலைப்பள்ளிய
ாக உயர்த்த வேண்டும் எனவும் சொன்னார்கள். பின் நாங்கள் சொல்லும் நபரை தான் ஆசிரியராக நியமிக்க வேண்டும் எனச் சொன்னார்கள் இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்கள்' என்றார்.
இந்நிலையில், நேற்று சின்னவநாயக்கன் பட்டியிலிருந்து தங்கள் குழந்தைகளுடன், இன்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு டி.சி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். பள்ளித் தொடங்கி முதல் பருவத் தேர்வுக்கு குழந்தைகள் தயாராகி வரும், நிலையில் பெற்றோர்களின் பிடிவாதத்தால், பிள்ளைகளின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- விகடன்

கம்பளத்து நாயக்கர் வேலைவாய்ப்பு வந்தேறி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக