திங்கள், 10 பிப்ரவரி, 2020

கி.வீரமணி ஜெயலலிதா வுக்கு ஆதரவாக திமுக வை திட்டி சான்று ஆதாரம் தி.க

aathi1956 aathi1956@gmail.com

வியா., 16 ஆக., 2018, பிற்பகல் 3:00
பெறுநர்: எனக்கு
Krishna Muthukumarappan
செயலலிதா வீட்டில் "ஓசிச் சோறு" சாப்பிட்டு விட்டு கருணாநிதியைக் கைது செய்தது பற்றி வீரமணி எழுதியது....

''எத்தனையோ தலைவர்களை இப்படி எத்தனையோ முறை கைது செய்திருக்கிறார்கள். போலீசார் அழைத்தவுடன் வந்திருந்தால் இந்த மாதிரியான பிரச்சினைகளுக் கெல்லாம் இடம் உண்டா?
இவர் வீட்டிற்குள்ளேயே ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனில் தகவல் கொடுக்கின்றார் சன் டி.வி.க்கு, மாறனுக்கு.
இதற்குரிய ஆதாரங்கள், தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் - முரசொலியிலே வந்த செய்திகள் - இப்படி கத்தை, கத்தையாக என்னிடத்திலே ஆதாரங்களாக உள்ளன.
என்னுடைய வாதத்தை சந்திக்க முடியாதவர்கள். என்னைத் தனிப்பட்ட முறையிலே கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
ஆனால், அவருக்கு என்ன பெயர்? எனக்கென்ன பெயர் என்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும்.
சர்க்காரியா என்னைப் பார்த்து விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவன் வீரமணி என்று சர்டிஃபிகேட் கொடுக்கவில்லை''
-மு. கருணாநிதி கைது குறித்து திக தலைவர் கி வீரமணி (13.07.2001, நூல்: எனது மரண சாசனம்)

(தட்... நான் அவங்க அம்மாவ வண்டை வண்டையா திட்டுவேன், அவென் எங்கம்மாவ வண்டை வண்டையா திட்டுவேன்...மொமெண்ட். திராவிடம் வளர்த்த நாகரீகமும், பெரியார் மண்ணும்னு நாம தனியா ஒரு புத்தகம் எழுதணும்)
முகநூல் பதிவர்


Krishna Muthukumarappan 

"பெரியார் அய்யா நினைத்ததை எல்லாம் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சியில் செய்கிறார். 
அதை பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் பாராட்டுகிறோம். 
இதிலென்ன வியப்பு?
இத்தகைய பெரியாரிய கொள்கையில் உங்கள் ஆட்சி நடக்கின்ற நேரத்திலே, உங்களுக்கு எதிர்ப்பு ஏற்படுமானால், எந்த இடத்தில் இருந்து எதிர்ப்பு ஏற்படுமானாலும்..
எங்களது கருப்புச் சட்டைப் படை, கருப்பு மெழுகுவர்த்தி ஏந்தி, சமுதாயத்திற்கு ஒளி கொடுக்க, தற்கொலைப்படையாக தங்களை தாங்களே அழித்துக் கொண்டு...
முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று இந்த மாபெரும் மக்கள் மன்றத்தின் முன்னாலே நான் சொல்ல விழைகிறேன்"
-கி. வீரமணி (விடுதலை,14.3.1994)

''உசுர விட மானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சது...; வயிறு எங்க கேட்டுச்சு...!

ஒரு சாண் வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்...; நான் எல்லாத்தையும் விக்கிறேன்...!!

இப்ப இங்க நிக்கிறேன்... என் கதையை முடிக்கிறேன்...'

என்கிற ஈசன் பட பாடல் வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ வீரமணிக்கும், திராவிட அரசியலார்க்கும் மிக பொருந்தும்.
பலரையும் கலாய்க்க எதையாவது நக்கலாக எழுத வேண்டும். வீரமணிக்கு மட்டும் அது தேவையில்லை, அவர் பெயரே போதும் 'மானமிகு'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக