திங்கள், 10 பிப்ரவரி, 2020

வாஜ்பாய் ஆங்கிலேயர் க்கு எழுதிக்கொடுத்த மன்னிப்பு கடிதம் வாக்குமூலம் 1942

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்வெள்., 17 ஆக., 2018, முற்பகல் 10:44
பெறுநர்: எனக்கு
மேகநாதன் முனுசாமி Athiyaman Thamuka உடன்.
*வாஜ்பாய் சுதந்திர போராட்ட தியாகியா?*
*************** ************†****************
ஆகஸ்ட் 27-ம் தேதி பத்தேஷ்வர் பஜாரில் நானும் என் சகோதரரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது மதியம் 2 மணி அளவில் காகுவா என்று அழைக்கப்படும் லீலாதர் என்பவரும் மகுன் என்பவரும் அந்த பஜாருக்கு வந்தனர்.
அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில், காந்திஜி அறிவித்துள்ள ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்கள். அந்த உரையைக் கேட்ட பொதுமக்களில் பலர், காகுவா மற்றும் மகுன் பின்னால் நூற்றுக்கணக்கில் திரண்டனர்.
அவர்களை அழைத்துக்கொண்டு மகுனும் காகுவாவும், பத்தேஷ்வர் வனத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது அதை வேடிக்கை பார்ப்பதற்காக நானும் என் சகோதரரும் அவர்களின் பின்னால் சென்றோம்.
வனத்துறை அலுவலகத்தை அடைந்ததும் கூட்டம் ஆவேசமாக கோஷமிட்டது. இதனால், நானும் என் சகோதரரும் அந்தக் கூட்டத்தில் இருந்து சற்று தள்ளி, ஒரு நூறு அடி தொலைவில் நின்றுகொண்டோம். வனத்துறை அலுவலகத்துக்குள் 10 முதல் 15 பேர் வரை இருந்திருக்கலாம்.
இதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அங்கு திரண்டிருந்த மக்கள், அந்த அலுவலகத்தைத் தாக்கினார்கள். எங்கள் கண் முன்னே அலுவலகத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அதன்பிறகு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருந்தவர்களில் காகுவா மற்றும் மகுனைத் தவிர மற்றவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. இதை நான் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் தெளிவான சிந்தனையுடனும் கூறுகிறேன்"
நாள்: செப்டம்பர் 1, 1942; பெயர் அடல் பிகாரி வாஜ்பாய்; தந்தை பெயர்: கௌரி சங்கர்; வயது 20; தொழில்: மாணவர், குவாலியர் கல்லூரி; முகவரி பத்தேஷ்வர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக பிரிட்டிஷ் நீதித்துறையிடம்
# வாஜ்பாய் அளித்துள்ள வாக்குமூலம்.

பா.ஜ.க பாஜக 

சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டாரா வாஜ்பாய்?
[wysija_form id=”1″]வி ருதுகள் என்றால் விமர்சனங்கள் இல்லாமலா? ‘பாரத ரத்னா’வின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய தேசத்துக்்கு தங்களின் பணிகள், செயல்பாடுகள் மூலம் பெருமை தேடித் தந்தவர்களுக்கே ‘பாரத ரத்னா’ விருதுக்கான அடிப்படை தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. எமர்ஜென்சியை அறிவித்த இந்திரா காந்திக்கும் போஃபர்ஸ் ஊழலில் சிக்கிய ராஜீவ் காந்திக்கும் அந்த விருது அறிவிக்கப்பட்டபோது கடும் விமர்சனங்கள், விருதைப் பெற்றவர்கள் மீதும், விருதின் மீதும் விழுந்தன. இந்தமுறை அப்படி விமர்சனத்துக்குள்ளாகி இருப்பவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.http://tamilagamtimes.com/?post_type=product
பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீச்சுவாலைகள் தேசமெங்கும் அனல் கக்கிக்கொண்டிருந்த நேரம்.  அப்போது, குவாலியர் நகரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள பத்தேஷ்வர் என்ற கிராமத்திலும் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்துடன் ஒரு போராட்டம் தீரமாய் நடந்தது. அதில் வாஜ்பாய் கைது செய்யப்பட்டு, ஆக்ரா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். போராட்டக்களத்தில் நடந்தது என்ன என்பது பற்றி, நீதிபதி ஹசனிடம் வாஜ்பாய் அளித்துள்ள வாக்குமூலம் அதற்கு ஆதாரமாக உள்ளது.http://tamilagamtimes.com/?post_type=product
நாள்: செப்டம்பர் 1, 1942; பெயர்  அடல் பிகாரி வாஜ்பாய்; தந்தை பெயர்: கௌரி சங்கர்; வயது 20; தொழில்: மாணவர், குவாலியர் கல்லூரி; முகவரி பத்தேஷ்வர்.
”ஆகஸ்ட் 27-ம் தேதி பத்தேஷ்வர் பஜாரில் நானும் என் சகோதரரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது மதியம் 2 மணி அளவில் காகுவா என்று அழைக்கப்படும் லீலாதர் என்பவரும் மகுன் என்பவரும் அந்த பஜாருக்கு வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில், காந்திஜி அறிவித்துள்ள ‘வெள்ளையனே  வெளியேறு’ இயக்கம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்கள். அந்த உரையைக் கேட்ட பொதுமக்களில் பலர், காகுவா மற்றும் மகுன் பின்னால் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அவர்களை அழைத்துக்கொண்டு மகுனும் காகுவாவும், http://tamilagamtimes.com/?post_type=productபத்தேஷ்வர் வனத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது அதை வேடிக்கை பார்ப்பதற்காக நானும் என் சகோதரரும் அவர்களின் பின்னால் சென்றோம். வனத்துறை அலுவலகத்தை அடைந்ததும் கூட்டம் ஆவேசமாக கோஷமிட்டது. இதனால், நானும் என் சகோதரரும் அந்தக் கூட்டத்தில் இருந்து சற்று தள்ளி, ஒரு நூறு அடி தொலைவில் நின்றுகொண்டோம். வனத்துறை அலுவலகத்துக்்குள் 10 முதல் 15 பேர் வரை இருந்திருக்கலாம். இதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அங்கு திரண்டிருந்த மக்கள், அந்த அலுவலகத்தைத் தாக்கினார்கள். எங்கள் கண் முன்னே அலுவலகத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அதன்பிறகு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருந்தவர்களில் காகுவா மற்றும் மகுனைத் தவிர மற்றவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. இதை நான் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் தெளிவான சிந்தனையுடனும் கூறுகிறேன்’  என்று சொல்லி இப்படிக்கு, அடல் பிகாரி வாஜ்பாய் என்று கையெழுத்துப் போட்டுள்ளார். அதாவது நான் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, தூரத்தில் நின்று வேடிக்கை மட்டும் பார்த்தேன் என்பது அவரே அளித்த வாக்குமூலமாகியிருக்கிறது.http:/tamilagamtimes.com/?post_type=product
உருதுவில் எழுதப்பட்டுள்ள இந்த வாக்குமூலத்துக்குக் கீழே, ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்த்து எழுதி, நீதிபதி ஹசன் கையெழுத்திட்டுள்ளார். அதற்குக் கீழே வாஜ்பாய் கையெழுத்திட்டுள்ளார். இந்த வாக்குமூலம்தான் அரை நூற்றாண்டு காலமாக வாஜ்பாயை, கேள்விகளாக துளைத்துக் கொண்டே வந்தது. இது சம்பந்தமாக ‘ஃபிரன்ட்லைன்’ பத்திரிகை 1998-ம் ஆண்டு ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டது. கட்டுரை வெளியானதும், ஃபிரன்ட்லைன் இதழுக்கு, வாஜ்பாயின் வழக்கறிஞர் கட்டாடே அனுப்பிய நோட்டீஸில், ”அந்த வாக்குமூலம் கொடுத்தவரின் தந்தை பெயர் கௌரி சங்கர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், http://tamilagamtimes.com/?post_type=productவாஜ்பாயின் தந்தை பெயர் கிருஷ்ணன் பிகாரி வாஜ்பாய். எனவே, வாக்குமூலம் கொடுத்தவரும் அடல் பிகாரி வாஜ்பாயும் ஒன்றல்ல’ என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இதுபற்றி, உடனடியாக பத்தேஷ்வரிலும், குவாலியரிலும் விசாரித்தபோது, அடல் பிகாரி வாஜ்பாயின் தந்தையின் பெயர் கௌரி சங்கர் என்ற கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் என்பது தெரிய வந்தது. மேலும், அந்தக் கிராமத்தில் கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் என்பதைவிட கௌரி சங்கர் என்பதுதான்  எல்லோராலும் அறியப்பட்டுள்ளது என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது.http://tamilagamtimes.com/?post_type=product
1989-ம் ஆண்டு அனைத்திந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒருங்கிணைப்பின் தலைவர் டி.எஸ்.அடேல், வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில், சுதந்திரப் போராட்டத்தில் வாஜ்பாயின் பங்கு என்ன என்பதை ஆதாரபூர்வமாக வெளியிட்டிருந்தார். 1989, ஜூலை 23-ம் தேதி, வாஜ்பாய், ” ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அதை பி.ஜே.பி கவனமாகப் பரிசீலித்துக்கொண்டிருந்தது” என்று நாடாளுமன்றத்தில் பேசியதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. மோகன் குமாரமங்கலம் உள்பட 52 எம்.பிக்கள், வாஜ்பாயின் இந்தப் பேச்சு, வரலாற்றைத் திரிக்கும் செயல் என்று கடிதம் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தனர். ஆகஸ்ட் 5, 1997-ல் மகாராஷ்டிரா சேவா தள் அமைப்பின் தலைவர் சந்திரகாந்த் தயாமகவி அன்றைய பிரதமர் ஐ.கே.குஜ்ராலுக்கு எழுதிய கடிதத்தில், ”வாஜ்பாயுடன் நீங்கள் ஒரே மேடையில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாதீர்கள். அவர்கள்தான், இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள்” என்று அதற்கான ஆதாரங்களாக ஆக்ரா நீதிமன்றத்தில் வாஜ்பாய் கொடுத்த வாக்குமூலத்தின் நகலையே கொடுத்தனர்.http://tamilagamtimes.com/?post_type=product
ஆனால், இப்படி ஆதாரத்துடன் வரலாறு தன்னை நிரூபிக்கப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், வாஜ்பாய் மற்றும் சங் பரிவாரங்களும் சளைக்காமல் அதை மறுப்பதும் அது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு என்று சொல்வதும் புதிய முறையில் வாஜ்பாயின் வாழ்க்கைக் குறிப்பைத் தயாரிக்கும் வேலையிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். குறிப்பாக 1997-க்குப் பிறகு, வாஜ்பாய் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் என்று அழுத்தமாகப் பதிய வைக்கும் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருந்தன. இந்த நேரத்தில், ஃபிரன்ட்லைன் பத்திரிகை, வாஜ்பாயின் வாக்குமூலத்தின் நகல் மற்றும் பத்தேஷ்வர் கிராமவாசிகளின் பேட்டி, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் வனத்துறை அலுவலகத்தை இடித்த வழக்கில் கைதான காகுவாவின் பேட்டி ஆகியவற்றை ஓர் ஆவணமாக தொகுத்து, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருடைய அலுவலகத்துக்கே அனுப்பி வைத்தது. அத்துடன் அதுபற்றி வாஜ்பாயின் கருத்தையும் கேட்டிருந்தது. சில நாள்கள் கழித்து, அந்தப் பத்திரிகையின் ஆசிரியருடன் தொடர்புகொண்டு பேசினார் வாஜ்பாய். அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டது. அதில் பேசிய வாஜ்பாய், ”ஆம் அந்த வாக்குமூலம் என்னுடையதுதான். அதில் இருக்கும் கையெழுத்தும் என்னுடையதுதான்’ என்று ஒப்புக்கொண்டார். அதை நீங்கள் ஏன்? இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்று எதிர்முனையில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் சொல்லும் வாஜ்பாய், ”அதை நான் அவ்வளவு சீரியஸான விவகாரமாக நினைக்கவில்லை” என்றார்.http://tamilagamtimes.com/?post_type=product
வென்றவர்களின் பார்வையில் எழுதப்படுவதுதானே வரலாறு!http://tamilagamtimes.com/?post_type=product

ஆதாரம் சான்று பாஜக தேசத்துரோகம் தேசத்துரோகி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக