திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஈழம் கிழக்கு மண்பறிப்பு தொடர் 4 இசுலாமியர் ஒற்றுமை நல்லிணக்கம்

aathi1956 <aathi1956@gmail.com>
வியா., 9 ஆக., 2018, பிற்பகல் 2:29
பெறுநர்: எனக்கு

Thiruchchelvam Kathiravelippillai , CargoNizar Cargo மற்றும் 10 பேருடன் இருக்கிறார்.
தொடர் – 04
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் எண்பதுகளின் முன்னர் குறிப்பாக 1984 ஆம் ஆண்டின் முன்னர் மிகவும் அன்னியோன்னிய உறவுடன் வாழ்ந்து வந்தனர். தமிழ் மக்களின் திருமண வீடுகளில் முஸ்லிம் மக்கள் கலந்துகொள்வதும் முஸ்லிம் மக்களின் திருமண வீடுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்வதும சாதாரண விடயங்கள். அனேகமான நல்லது கெட்டதான நிகழ்வுகள் இரு சமூக மக்களும் கலந்தே நடத்தினர். பிட்டும் தேங்காய்ப் பூவும் போல என எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டன.
கிழக்கு மாகாணத்தின் பிரதான பொருண்மியம் நெற்செய்கையுடனா
ன விவசாயமாகவும் மீன்பிடி அடுத்ததாகவும் காணப்பட்டது காணப்படுகின்றது. திருக்கோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களில் பெரும்பான்மையான தமிழர்கள் நெற்செய்கையிலும் அம்பாறை மாவட்டத்தில் பெரம்பான்மையான முஸ்லிம் மக்கள் நெற்செய்கையிலும் ஈடுபடுகின்றார்கள்.
அக்காலத்தில் நெற்செய்கைக்குத் தேவையான பிரதான உபகரணமாக மண்வெட்டிகள் “கம்மாலைகளில்“ நெற்செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயாரிப்பார்கள். (மண்வெட்டியை தோய்ந்து சேற்று மண்வெட்டியாக மாற்றுதல்) கம்மாலைகள் அனேகமாக முஸ்லிம் மக்களால் நடத்தப்பட்டன. இச்சிறிய செயற்பாடானது தமிழ்பேசும் மக்களின் உறவிற்கு பலமான காரணியாக திகழ்ந்தது. அனைத்து மக்களும் கம்மாலைக்குச் சென்றார்கள். அந்த இடங்கள் அந்நாளில் தமிழ்பேசும் மக்கள் அதிகளவில் கூடுகின்ற இடமாகவும் ஐக்கியத்திற்கும் உறவு மேம்படலுக்குமான இடங்களாகத் திகழ்ந்தன.
ஒரு தமிழ் ஊருக்குப் பக்கத்தில் ஒரு முஸ்லிம் ஊர் கிழக்கு மாகாணத்தில் அனைத்து இடங்களிலும் உள்ளன. ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களது வீடுகளுக்கு முஸ்லிம் மக்கள் செல்வது வழமையானது. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களது வீடுகளுக்குச் சென்றாலும் முஸ்லிம் மக்களிடம் ஒன்றுகூடுகின்ற தன்மையும் ஒவ்வொருநாளும் மாலை நேரங்களை வீடு தவிர்ந்த இடங்களில் மகிழ்ச்சியாக செலவிடும் உயர்ந்த பண்புகள் இருப்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. இன்றும் முஸ்லிம் பிரதேசங்களில் மாலை நேரங்களில் ஒன்றாகக் கூடி பேசுவதும் இளைஞர்கள் விளையாடுவதும் சாதாரண நிகழ்வுகள். தமிழ் மக்களிடையே ஒன்றுகூடல் தன்மை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது.
தமிழர்களின் வயல்நிலங்களில் தொழிலாளர்களாக அநேகமாக முஸ்லிம் மக்கள் தொழிலாற்றினர்.
முஸ்லிம் பிரதேசங்களின் கல்வி வளர்ச்சியில் தமிழ் மக்கள் அளவிட முடியா பணியாற்றினர். எவ்வித வேறுபாடுகளுமின்றி தமது தொழிலை ஆற்றினர். இன்றும் அவ்வாறு பணியாற்றியவர்கள
ை முஸ்லிம் மக்கள் நினைவுகூருவது அவதானிக்க முடிகிறது.
கிண்ணியா பிரதேசம் இது சிறந்த எடுத்துக்காட்டாகும். கிண்ணியா துறையடியில் இருக்கும் ஊற்றடிப் பிள்ளையார் கோவிலை அண்டிய பகுதியில் தமிழ் மக்களே செறிந்து வாழ்ந்தார்கள். அங்கு வாழ்ந்த முருகுப்பிள்ளை வாத்தியார் என்றழைக்கப்பட்ட அமரர் தம்பர் காசிநாதர் அவர்களே கிண்ணியாவின் முதலாவது ஆசிரியர் ஆவார்.
1930 ஆண்டில் ஆசிரிய நியமனம் பெற்ற அவர் பயிற்றப்பட்ட ஆசிரியராகி 1945 இல் பதவி உயர்வுபெற்று கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி தற்போது உள்ள இடத்தில் இயங்கிய பெரிய கிண்ணியா ஆண்கள் கலவன் வித்தியாலயத்தில் பத்து ஆண்டுகள் அதிபராக பணியாற்றினார். இப்பாடசாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆண்கள் பாடசாலையாகவும் பெண்கள் பாடசாலையாகவும் இயங்கின. பெண்கள் பாடசாலைக்கு அவரது துணைவியார் அமரர் இரட்ணபூபதி செல்லம்மா அவர்கள் அதிபராகவும் பணியாற்றினார்.
அக்காலத்தில் கிண்ணியாவில் கல்வி மட்டம் குறைந்திருந்தது. இவர்கள் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். இங்குள்ள மாணவர்களுக்கு எப்படியாவது கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டி கற்க வைக்க வேண்டும் என்பதில் மிகவும் தியாகத்தோடு பணியாற்றினர். கல்வி கற்க கூடிய வயதுள்ள மாணவர்களது வீடுகளுக்கு தேடிச் சென்று அவர்களை அழைத்து வந்து கற்பித்தனர்.
வறுமை காரணமாக பலர் அக்காலத்தில் கல்வியை தொடரமுடியாது இடையில் கைவிட்டனர். எப்படியாவது அவர்களும் கல்வியினைப் பெற்றுவிட வேண்டும் எனும் நோக்கில் முருகுப்பிள்ளை வாத்தியார் தனது சொந்தப் பணத்தில் உணவு வழங்கி மாணவர்ளைக் கற்க வைத்தார். இவரது தோளில் எப்போதும் ஒரு பை இருக்கும். அதனுள் "வாட்டு ரொட்டி, ரஸ்க், பல்லி மிட்டாய்" போன்ற உணவுப் பொருட்கள் இருக்கும். மாணவர் நிலையறிந்து அவற்றை அவர்களுக்கு அவர் கொடுத்து மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துவந்தார்.
இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் மக்களால் நிகழ்த்தப்பட்டன. ஐக்கியமான உறவுகள் பலமாக இருந்தமையினால் யாருமே மதமாற்றத்திலும் ஈடுபடவில்லை. அதற்கான தேவையுமிருக்கவில்லை.
திருக்கோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை தோப்பூர் பிரதேசங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்திலும் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு யார் தமிழர் யார் முஸ்லிம் என பிரித்தறியா முடியா நிலையில் இருந்தன. இப்பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்களது பேச்சு மொழிநடை தமிழ் மக்கள் போன்றே இருந்தன. தற்போதும் புல்மோட்டை முஸ்லிம் மக்களில் அதனைக் காணலாம்.
இவ்வாறு பலமான உறவுகளால் கட்டிக்காக்கப்பட்டு பேணப்பட்டு வந்த உறவுகளே தற்காலத்தில் இரு சமூகத்திலுமுள்ள குறிப்பாக இளைஞர்களால் விரோதிகளாகப் பார்க்கப்படுகின்ற நிலையிலும் இரு சமூகங்களில் செயற்பாடுகளில் ஒருவரையொருவர் ஐயத்துடன் நோக்குகின்ற நிலையும் காணப்படுகின்றது.
(அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு அதிரடிப்படையின் திட்டமிட்ட செயல்கள் எவ்வாறு இரு சமூகங்களையும் துண்டாடின எனப் பார்க்கலாம்)

முஸ்லிம் ஊர்க்காவல் படை மதம் மண்மீட்பு

எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

aathi tamil <aathi1956@gmail.com>
வியா., 9 ஆக., 2018, பிற்பகல் 2:33
பெறுநர்: எனக்கு

Mohamed Jatheer
நல்ல பதிவு தமிழ் பேசும் மக்கள் அன்றும் இன்றும் நல்ல குடும்பம் போன்றே
பழகி வருகின்றனர் சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்காகவே இவ்வாறு இண
உணர்வு துண்டாடப்பட்டது. இன்றும் கூட மூதூரின் சில பகுதிகளில் இரு
சமூகமும் அன்போடு பலகுவதனை கானமுடியும்.
வாழ்த்துக்கள் திரு அண்ணா

Nagul Selvan
உண்மைதான். எனது அப்பா 90 களில் கிண்ணியா AGA ஆக இருந்தவர். நிறைய
இஸ்லாமியர்கள் வீட்டிற்கு வருவார்கள். கிண்ணியாவில் ஒரு ஆலமரம்
இருந்ததாகவும் மதிய நேரத்தில் அதன் கீழ் இரு இன மக்களும் ஒன்று கூடி
பொழுதை போக்கியதாகவும் கேள்வி

Nsn Niro
தமிழர்கள் முஸ்லிம்களின் கல்வியில் கூடிய கரிசனை கொண்டவர்கள் என்பதை
இதனூடக உணரமுடிகிறது. மேலும் இது தொடர்பான கருத்தாடல்கள் எங்கள் இரு
சமூகத்தின் மத்தியிலும் வர வேண்டும். அப்போதுதான் இன நல்லுறவு வெற்றி
பெறும்.
தமிழ் முஸ்லின் நல்லுறவுக்கு ஒரு எடுத்துக்காட்டு எமது கிண்ணியா மண்
என்பது பெருமையாக உள்ளது. இன்றும் அவ்வாறுதான் நாங்கள் இருக்கிறோம்
என்பதையும் சொல்லியாக வேண்டும்.

Harees Mohamed
உங்களுடைய கூற்று முற்றும் உண்மை கிண்ணியா மண் என்றும் மரவாது தமிழ்
ஆசான்கலை இரு இனத்தையும் பிரித்து பகையை உண்டாக்கி இன்று வெற்றி கன்ட
சிங்க..... இன வாதிகள் அடுத்த கட்ட நகர்வு போதை வஸ்து பாவிக்கும் சமுகமாக
வடக்கு கிழக்கு மாகாணத்தை மாற்றி அதிலும் வெற்றி நடை போடுகிறது இதை
சிந்திக்குமா நமது தமிழ் பெசும் தலைமைகள்

Saravana Pavan
எனது அம்மம்மா தோப்பூரில் படிப்பிக்கும் போது இவ்வாறான உறவு
இருந்ததென்றும் எனது பெற்றோரின் திருமணத்திற்கு தோப்பூரை சேர்ந்த ஒருவர்
பெயர் ஞாபகமில்லை பசுமாடு அன்பளிப்பாக கொடுத்த என்றும் அம்மா கூறுவார்...

Shivanandam Elaiyathamby
அரசியல்வாதிகள்கள் தங்கள் சுயநலனுக்காக இரு இனத்தையும் மோதவிட்டு அதில்
குளிர்காய்கிறார
்கள்.குறிப்பாக அஷ்ரப் அவர்களால் என்று முஸ்லீம் காங்கிரஸ்
உருவாக்கப்பட்டதோ அன்று கிழக்கில் இரு சமூகங்களுக்கிடையிலான இன உறவுக்கு
குழி வெட்டப்பட்டது.அதே போல் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை
தொடர்ந்து அது மிகத்தீவிரம் அடைந்தது என்ற கசப்பான உண்மையை நாம்
ஏற்றுக்கொள்ளவேண்டும்.

aathi tamil aathi1956@gmail.com

வியா., 9 ஆக., 2018, பிற்பகல் 2:38
பெறுநர்: எனக்கு
Mohamed Sulthan Najeem
நான் ஆங்கிலம் கற்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் திருமலை கொஸ்தா சேர்
மற்றும் நவாலியூர் குகனேஸ்வரி டீச்சர் என்றுமே மறக்க முடியாதவர்கள்
இவர்களின் அறிவுரையின் அடிப்படையிலேயே நான் இன்றும் தமிழில்
ஒப்பமிடுகிறேன் இவர்களிடத்தில் பொறாமை குணத்தைக்கணடதே இல்லை

Kandiah Thavarajah
அது மகறூப் g s அவர்களின் வாப்பா
ஹயாத்துத்துமுகதீன் நானா அவர்கள்
ஹிதாயத்துல்லா nursing officer மற்றபொடியன் தற்போது engineer
அவர்களது அப்ப்பா

Zilmiya Hamsa
குகா டீச்சரை நீங்களும் மறக்கலையா.மறக்கக்கூடிய டீச்சரா அவங்க. என் ரோல்
மொடலே அவங்கதான்

Niyas Haji
நல்ல பதிவு இந்த நாட்டில் எல்லா சமூகமும் இணைந்து இதய சுத்தியுடன் கடந்த
காலங்களில் நடந்தவைகளை மறந்து இனிமேலும் இனவாதத்துக்கு இடமளியாது .இன்றைய
இளைஞர்கள் மத்தியில் நல்ல பல பண்புகளையும்,தூரநோக்கு சிந்தனைகளையும்,
விட்டுக் கொடுப்பு ,போன்ற மனித நேயம் கொண்ட மனித உரிமையை மதிப்பவர்களாக
வாழ நாம் தான் சிறப்பான பாதையை கற்றுக் கொடுக்க வேண்டும் . மனிதர்களில்
ஒரு கூட்டத்தினர் பிழையான பாதையில் சென்று கொண்டேதான் இருந்தாலும் நாம்
அதையும் தாண்டி பயணிப்போம்..
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · செவ்வாய் அன்று PM 1:53 மணிக்கு

Kandiah Thavarajah
அந்தக்காலத்தில்
நான் தோப்பூர் முஸ்லீம் மகாவித்தியாலயத்தில்
கல்விபயின்றேன்
மனோகரன் b a துரைலிங்கம் b s c
ஆகியோர் அங்கு நீண்டகாலம் கல்வி போதித்தனர் தோப்பூரின் அண்மைய கல்வி
வளர்ச்சியில் இவர்களின் பங்கு அளப்பரியது அத்துடன் தமிழ் மாணவர்கள்
அதிகம் அங்கதான் கல்வி பயின்றனர்
சித்திக் sir புகாரிsir சாலிsir அசீஸ் sir
Farooq jahn sir ஹபீப் sir எங்கள் அதிபர்
S m s Mohamed sir இப்படி பல தமிழ் முஸ்லீம்
ஆளுமைகளால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள்
இன்றய நிலைமைகள் வேறு

Amsudeen Abdula
தமிழர், முஸ்லிம் உறவுகளில் ஏற்பட்ட மாறுதல்களுக்குக் காரணம் 1978 ஆம்
ஆண்டு காெண்டுவரப் பட்ட மாவட் விகிதாசாரத் தேர்தல் முறையாகும். இதை
மக்கள் அறிவார்களா? அதனால்த்தான் மக்கள் ஒவ்வாெரு இனத்தின் பெயரையும்
ஒவ்வாெரு கட்சிகளும் வைத்துக் காெண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்களை
கட்சி, மதம், இனம் அரசியல் வியாபாரிகள் அவர்களின் இலாபத்துக்காக பிளவு
படுத்துகிறார்கள். மீண்டும் தாெகுதி வாரி தேர்தல் முறை மூலம் மட்டுமே
உறவுகளை மீட்டு தமிழ்,முஸ்லிம் மக்களின் சந்தோசத்தைக் கட்டியெழுப்ப
முடியும்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · செவ்வாய் அன்று PM 3:29 மணிக்கு
Shivanandam Elaiya... பதிலளித்தார் · 1 பதில்

Farhan Musthafa
சிறந்த கட்டுரை.
ஒரு சிறு திருத்தம் தேவை,
தமிழ் முஸ்லிம் உறவு என எழுவதை விட இந்துக்களும், கிருஸ்தவர்களும்,
முஸ்லிம்களும் என எழுதுங்கள். ஏனெனில் தமிழ் என்பது பிரித்துக் காட்டும்
மதமல்ல, தமிழ் என்பது இனம். நான் தமிழன், தமிழை மொழியாய் கொண்டவன்.
தமிழ், முஸ்லிம் உறவு என எழுதியதில் நான் எந்த உறவு என்பதில் எனக்கே
குழப்பமாக இருக்கிறது.
அத்துடன் இந்த உறவுகளை சிதைத்தது ஆயுதம் தாங்கியவர்களே.
திருத்தப்பட்டது · 3 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · செவ்வாய் அன்று PM 7:33 மணிக்கு

Sasitharan Kandiah
மிக நல்ல பதிவு திருச்செல்வம். செவ்வனே தொடருங்கள்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · செவ்வாய் அன்று PM 7:50 மணிக்கு

Hemachandra Kumarasamy Iyer
நல்ல ஒரு நடுநிலையான பதிவு. நீங்கள் கிண்ணியாவை அண்டிய தம்பலகாமத்தை
பிறப்பிடமாகவும் சேனையூரை உங்கள் உயர்கல்விக்குரிய இடமாகவும்,
திருகோனமலையை உங்கள் வாழுமிடமுமாக கொண்டபடியினால் பல துல்லியமான தரவுகளை
நினைவுகூற முடியுமாக இருக்கிறது.
நானும் சோனகவாடியில் பிறந்து,வளர்ந்து எல்லா இன மக்களுடன் ஒன்றாக ஓடியாடி
வளர்ந்தபடியினால் எங்களினால் சகல இனத்துடன் ஒன்றாக விட்டுகொடுப்புடன்
வாழமுடிகிறது.
யாழ்ப்பானம் வடக்கு ஒரு முனையிலும் மாத்தறை தெற்கு மறுமுனயிலும்
மொழிகளுக்குள் வறையறுக்கபட்டு வாழுவதால் அவர்களுக்குள் சந்தேகங்களும்
ஒருவரைபற்றி மற்றவர்களுக்கு நம்பிக்கையீனமும் ஏற்பட்டு அவர்களை
இருவரையும் தூரத்திற்கே கொண்டுபோய்விட்டது.
மேலும் இஸ்லாமியர்கள் மொழியிலும் பார்க்க தங்களது மதத்தில் கூடுதலான
பற்று கொண்டவர்கள். வாழ்கையில் நெளிவு சுளிவையும் அறிந்து ஒருவித
அனுசரித்துபோககூடிய தன்மையையும் கொண்டவர்கள். அதனால் அவர்கள் இலங்கை
தழிழர்களிலும்பார்க்க வியாபாரத்திலும் கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை
கொண்டனிலையிலும் தங்கள் சமயத்தின் தனித்தன்மையை என்றும்
விட்டுகொடுக்காமல் ஒப்பீடளவில் சிறப்புடனும் முன்னேறத்துடனும்
வாழுகின்றனர்.
பெரிய சிறுபாண்மையான இனமான நாம் சிறிய சிறுபான்மையினத்தை
அரவணைத்துபோகாததும் அவர்கள் எம்மிடம் இருந்து விலகிசெல்ல்தற்க
ு ஒரு முக்கியகாரணம்.
கிழக்கிலங்கையின் பூகோள அமைப்பும் இயற்கையின் வளங்களும் எமக்கு கிடைத்த
ஒரு வரபிரசாதம். இங்கு எமக்கு தேவைக்கு அதிகமாகவே செல்வங்கள் இருந்தன.
என்று நாம் எமது தனித்தன்மையை இழந்து வழங்கள் குறைந்த யாழ்பான
குடானாட்டின் கட்டுபாட்டுக்குள் வந்தோமோ அப்போதே பிரிவினைவாதம் தொடங்கி
கடைசியில் அழிவில் முடிந்தது.
இன்றும் எம்மிலில் பலபேர்கள் அந்த முந்தைய இறுகிய நட்புடன் வாழுவதை காண
மகிழ்ச்சியாக உள்ளது. கிழக்கு தனித்து இயங்குமாயின் மீண்டும் அந்த இனிய
காலத்தினுள் நாம் பிரவேசிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
திருத்தப்பட்டது · 5 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · செவ்வாய் அன்று PM 9:09 மணிக்கு

Mohamed Sajary
ஐயா அருமையான பதிவு.. வாசிக்கும் போதே உடம்பெல்லாம் புள்ளரிக்கின்றது.
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் இனமுறுகள் ஏற்படக்காரணம், பிண்ணனியில்
பெரும்பான்மையின் தீய சக்திகளே...
நான் இற்றை வரைக்கும் தமிழ் மக்களோடு மிக நெருக்கமாகவே இருக்கின்றேன்.
இப்போதைய தமிழ் முஸ்லிம் உறவுகளில் உள்ள சிறு சிறு கசப்பான சம்பவங்கள்
அனுவளவும் எனது பிள்ளைகளுக்கு தெரியக்கூடாதென்
பதற்காக, எனது பிள்ளைகளை திருகோணமலையில் மூவின மக்களும் கல்வி கற்கும்
பாடசாலை ஒன்றில் சேர்த்திருக்கின்றேன்.
என்றும் எம் தமிழ் பேசும் மக்களின் உறவு தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இசுலாமியர் சோனகர் சாட்சியம் தொகுப்பு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக