திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஈழம் கிழக்கு மண்பறிப்பு தொடர் 6 அம்பாறை உருவாக்கம் மேற்கு சிங்கள பெரும்பான்மை

aathi1956 aathi1956@gmail.com

வியா., 9 ஆக., 2018, பிற்பகல் 2:19
பெறுநர்: எனக்கு
Thiruchchelvam Kathiravelippillai , Prashanth Tpr மற்றும் 72 பேருடன் இருக்கிறார்.

தொடர் – 06
சிறிலங்கா 1955 ஆம் ஆண்டுவரை மாகாணங்களையே நிருவாக அலகாகக் கொண்டிருந்தது. 1955 இல் ஒன்பது மாகாணங்கள் 21 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. 1961 இல் அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1978 இல் கம்பஹா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இறுதியாக 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி 25 ஆவது நிருவாக மாவட்டமாக உருவானது.
1961 ஆம் ஆண்டு அம்பாறை உருவாக்கப்பட்ட போது பொலன்னறுவையிலிருந்து 57கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறையிலிருந்து 135கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவு சனத்தொகையைக் (முழுமையாக சிங்களவர்கள்) கொண்டிருப்பதுமான தெஹியத்தைக்கண்டிய பிரதேச செயலக பிரிவு கிழக்கு மாகாணத்தில் உள்வாங்கப்பட்டத
ு தமிழ்பேசும் மக்களது பெரும்பான்மையை கிழக்கு மாகாணத்தில் குறைப்பதற்காகும்.
அத்தோடு பதுளை மாவட்டத்திற்கு மிக அண்மையிலுள்ள பதியத்தலாவ பிரதேச செயலாளர் பிரிவும் மொனராகலை மாவட்டத்திற்கு அண்மையிலிருக்கும் லகுகலை பிரதேச செயலாளர் பிரிவும் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் சிங்களவர்களை முழுமையாகக் கொண்ட பிரிவுகளாகும்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்டது. மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் திருக்கோணமலை 11 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டது.
நிலப்பரப்பில் அம்பாறை மாவட்டம் 4415 ச.கி.மீ உம், மட்டக்களப்பு மாவட்டம் 2854ச.கி.மீ.உம் திருக்கோணமலை மாவட்டம் 2727 ச.கி.மீ.உம் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டாக 2012 ஆம் ஆண்டு சனத்தொகையினை நோக்கும் போது அம்பாறையில் சிங்களவர் -251018 , தமிழர்-112750 , முஸ்லிம்-282484
மட்டக்களப்பில் சிங்களவர் -6127 , தமிழர்-382300 , முஸ்லிம்-133844
திருக்கோணமலையில் சிங்களவர் -101991 , தமிழர்-122080 , முஸ்லிம்-152854
கிழக்கு மாகாணத்தில் மொத்த சனத்தொகையில் சிங்களவர் 359136 ஆகவும் தமிழர் 623063 அகவும் முஸ்லிம்கள் 569182 ஆகவும் வாழ்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களே வாழ்கின்றனர். அவர்களது பெரும்பான்மையினை குறைக்கும் நோக்குடனேயே குறிப்பாக தெஹியத்தைக்கண்டி. பதியத்தலாவ, லகுகலை ஆகிய தனிச் சிங்களவர்கள் வாழ்கின்ற பிரதேச செயலக பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. துரதிஸ்டவசமாக அப்போதிருந்த தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகள் யாருமே இவ்விடயத்திற்கு எதிராக போராடவுமில்லை கருத்துகளைத் தெரிவிக்கவுமில்லை.
மாவட்ட நிருவாக அலகுகள் உருவாக்கப்பட்ட அடுத்த ஆண்டான 1956 இல் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் நாடு முழுவதும் நடைபெற்றமையினாலும் 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது வடக்கு கிழக்குப் பகுதிகளிலே இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் அரச நிருவாக முடக்கத்திற்காக தொடர்ச்சியான ஆறுமாத கால அறவழிப் போராட்டங்கள் நடைபெற்றமையாலும் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளும் இணைக்கப்பட்ட விடயம் தமிழ்பேசும் மக்களால் அதிக அக்கறை செலுத்தி பார்க்க முடியாமல் போயிருந்தது. ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பியது போல் நிருவாக அலகினைத் தீர்மானித்துக்கொண்டார்கள்.
கிழக்கு மாகாணத்தின் நிரப்பரப்பினை உற்று நோக்கும் போது திருக்கோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் நிலப்பரப்பை விட அண்ணளவாக இரண்டு மடங்கு நிலப்பரப்பு அம்பாறை மாவட்டத்திற்கு காணப்படுகிறது. அம்பாறையிலும் தெஹியத்தைக்கண்ட
ிய, பதியதலாவ, லகுகலை பிரிவுகளே அதிக நிலப்பரப்புகளைக் கொண்ட பிரதேசசெயலாளர் பிரிவுகளாகும்.
கல்லோயாத் திட்டத்தின் மூலமாக குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் இல்லாவிட்டால் அத்துடன் மூன்று பிரிவுகளும் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டாது விட்டிருந்தால் அம்பாறையில் தமிழ்பேசும் மக்கள் மாத்திரமே இருந்திருப்பார்கள். கல்லோயாத் திட்டத்தின் மூலமாக 50000 இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்திலே 1881 ஆம் ஆண்டு குடிசனக் கணக்கெடுப்பின்ப
டி சிங்களவர்கள் 4.66வீதமும் தமிழர்கள் 58.66வீதமும் 33.66முஸ்லிம்கள் வீதமும் வாழ்ந்தனர். ஆனால் 2012 ஆம் ஆண்டு குடிசனக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சிங்களவர் 23.15வீதமும் தமிழர் 40.13வீதமும் 36.72முஸ்லிம்கள் வீதமும் வாழ்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் எண்ணிக்கையில் தமிழ்பேசும் மக்கள் அதிகளவில் இருந்தமையினாலும் அவர்கள் ஒற்றுமையாக இருந்தமையாலும் தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட
ுகின்ற போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கினால் நாடு பிரிவுபடுவதை தடுப்பதற்கான வழி எதுவுமில்லை என்பதனை உணர்ந்த ஆட்சியாளர்கள் அக்கரைப்பற்று, கிண்ணியா சம்பவங்களைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களிடையே திட்டமிட்ட வகையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்காக 1985 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதன் முதலாவது வடிவத்தையே அம்பாறை தம்பிலுவில் எனும் தமிழ் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர்களை முன்னிறுத்தி சிறப்பு அதிரடிப்படையினர் அரங்கேற்றினார்க
ள்.
13 மணி நேரம் · பொது
சேமி
Prashanth Tpr மற்றும் 35 பேர்
Abdul Muthalib Jafarullah
திருமலை மாவட்டத்தில் 1970 தொடக்கம் 1977ஆண்டு காலப்பகுதியில் சிரிமா அம்மையாரின் ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட செருவில தொகுதியானது ஏனைய இரு தொகுதிகளை விட அதிக நிலப்பரப்பும் குறைந்த சனத்தொகையுடன் சிங்கள மக்களுக்காக விரும்பியோ விரும்பாமலோ உருவாக்கப்பட்டது. அன்றைய தமிழ் பேசும் தலைமைகள் இது தொடர்பில் எந்த விதமான மாற்று கருத்தையும் முன் வைக்காமல் வெறும் மௌனிகளாக இருந்தமையும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயம்.

CargoNizar Cargo
அவர்கள். பதியதலாவ. தெஹியத்தகண்டி . லகுகலை இணைத்த பயன் இன்னும் அவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை .
காரணம் பொதுத்தேர்தலில். மாகாணசபைத் தேர்தல்களில் அவர்கள் உருப்பினர்கள் எண்ணிக்கை கூடியபாடில்லை.
அதனால் தான் சமீபத்திய நிகழ்வுகள் அரங்கேறுகிறது. அதாவது கோமரங்கடவல .கொக்குளாய். புல்மோட்டை. திரியாய். கித்துல்ஊத். கந்தளாய் அண்டிய பகுதியில் சர்தாபுர என சிங்கள மக்களின் அவசர குடியேற்றம் நடக்கிறது. கடந்த காலங்களில் மஹாவலி.மற்றும் மஹாஓயா குடியேற்றம் அனைத்தும் பெருபான்மையினரின் கிழக்கு ஆக்கிரமிப்பாகவே கருதவேண்டியுள்ளது.
சேருவில எல்லை சமீபகாலமாக ஈச்சளம்பற்று நோக்கி நகர்கிறது. புதிய காணி வழங்கப்பட்டு தற்போது குடியேற்றமும் நடக்கிறது. அ
இலங்கையில் ஆக சனத்தொகை குறைந்த பிரதேச செயலகங்கள். இரண்டு ஒன்று . சேருவில. மற்றது கொமரங்கடவல. இங்கு 400 வாக்குகளுக்கு ஒரு பிரதேசசபை உருப்பினர்கள் தெறிவு செய்யப்படுகின்றனர்.
நமது பாமர அரசியல்வாதிகளின் இயலாமையை பயன்படுத்தி சில கண்துடைப்பு ஒதுக்கீடுகளை கொடுத்துவிட்டு பெரும்பான்மை சமூகம் நமது நாலாபுறமும் திட்டமிட்டு குடியேற்றம் நடக்கிறது. இதில் இறைவன் ஒரு சந்தர்ப்பம் தந்துள்ளது யாவரும் அறிவோம். அதுதான் எதிர்கட்சி பதவி இதை சரிவர பயன்படுத்தாத ஒருவரிடம் கொடுத்து விட்டு அவர்கள் தமது வேலைகளை நமது கண்முன் நிகழ்த்தி வருகின்றனர்.
இதை பேச முற்படும் போது ஏதாவது வேறு திசையில் நமது கவணத்தை திசை திருப்பும் சம்பவங்கள் நிறைவேறுகிறது.
தமிழ் பேசும் தமிழர். தமிழ் பேசும் முஸ்லிம்கள். பிரிவினையில் தான் பெரும்பான்மை சமூகத்தின் வெற்றி தங்கியுள்ளது. பெரும்பான்மை கட்சிகள் அடிக்கடி ஆட்சி மற்றம் பெற்றாலும். அந்த யானை. கை.வெற்றிலை. இப்ப மொட்டு.இவர்கள் செயலில் மொழியால் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் சமூகத்தின் பிரிவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் தொடர் தொடர வாழ்த்துக்கள்

மண்மீட்பு சிங்களவர் ஆக்கிரமிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக