சனி, 3 ஜூன், 2017

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே - விளக்கம்

aathi tamil aathi1956@gmail.com

11/1/15
பெறுநர்: எனக்கு
கல்தோன்றா மண்தோன்றா காலத்தில் உயிர் தோன்றுமா?
இது எல்லாம் வெட்டிபெருமை என்று கூறும்
திராவிட ,மார்க்சிய பகூத்தறிவாளர்கள்
அப்பாடலையோ அல்லது அதன் பொருளையோ படித்ததுண்டா?
புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35
" குடிநிலை
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி"
பொருள்:
பொய் அகல, புகழ் விளைக்குறாங்க..என்ன வியப்பு!
வையகம், நீர் போர்த்தி இருந்து,
பின்பு வாழ்வு துவங்கிற்று!
அப்போ, மலை வாழ்வு/ காட்டு வாழ்வு தான் முதல்!
கல் தோன்றி = மலை தோன்றி
மண் தோன்றா = வயல்கள் தோன்றா
முல்லை/ குறிஞ்சி தோன்றி, மருதம் தோன்றாக்
காலத்தே...
கையில், வாளோடு, Appear ஆகி,
இப்படி வீரமாகப் போர் செய்து,
ஆநிரை காக்கிறார்களே, இந்தக் கரந்தைத் திணையில்!
வாழ்க ஆதி குடிகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக