ஞாயிறு, 19 மார்ச், 2017

ஆதிச்சநல்லூர் ஆய்வு குழு மலையாளி கையில்

aathi tamil aathi1956@gmail.com

19/11/16
பெறுநர்: எனக்கு
[19/11 08:54] ‪+91 97686 00851‬: 14-10-2014

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளிவருமா : 10 ஆண்டுகள் ஆனதால்
ஆய்வாளர்கள் அதிருப்தி

http://m.dinamalar.com/detail.php?id=1627640

.....

17-11-2016

வெளிவராத ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை : வெளியானால் தமிழக வரலாறு மாறும்

http://m.dinamalar.com/detail.php?id=1651015

.....

முதலில் வந்த செய்தியில் மானுடவியல் ஆய்வாளர் திரு ராகவன் பத்மநாபன்
ஆசுதிரேலியாவில் உள்ளதால் ஆய்வறிக்கை (மண்டை ஓடு ஆய்வு) கிடைக்க
தாமதமாவதாக கூறியுள்ளார்.

இன்று வந்த செய்தியில் ராகவன் பத்மநாதன் மற்றும் அப்போதைய சென்னை மண்டல
தொல்லியல் துறை கண்காணிப்பாளரும், ஆலய அளவியல் கண்காணிப்பாளருமான
மகேஸ்வரி அவர்கள் என்ன சொன்னார் என்பதையும் பாருங்கள்.

முதல் செய்தி வந்தபோது முகநூல் வழியாக ராகவன் அவர்களுக்கு தகவல்
தெரிவித்தேன் தங்களால்தான் ஆய்வறிக்கை தாமதம் ஆவதாக கிருஷ்ணமூர்த்தி
சொல்கிறாரே என...

அதிர்ச்சி ஆன அவர் உடனே என் எண்ணை பெற்றுகொண்டு தொடர்புகொண்டார். நான்
2013, 2014 காலகட்டத்திலேயே மூன்று பகுதிகளாக அனுப்பிவிட்டதாகவும், அவர்
ஏன் பொய் சொல்கிறார் எனவும் வருத்தப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் ஆய்வு
செய்ததையும் இதற்கு ஒரு பைசாகூட வாங்காமல் இலவயமாக வேலை செய்ததாக
சொன்னார்.

மேலும் தான் அவரை அலைபேசியில் அழைத்தால் எடுக்காமல் தவிர்த்ததாகவும் கூறினார்.

ஆய்வறிக்கையின் மூன்று பாகங்களை பெற்றுக்கொண்டதற்கான கடிதத்தை தனக்கு
அனுப்பியதாகவும், மூன்று பகுதி ஆய்வறிக்கையும்
அச்சாகிகொண்டிருப்பதாகவும், விரைவில் ஆய்வறிக்கை வெளியிடப்படும் எனவும்
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என சொன்னார்.

முதலில் என்னை ஊடகங்களுக்கு சொல்ல சொன்னார். பின்பு சிறிது நேரம் கழித்து
தான் சொல்லும்வரை சற்ற பொறுமையாக என்னை இருக்குமாறு அறிவுறுத்தினார்.

நான் உண்மை மறைக்கப்பட்டதை எவ்வேற்றி (பகிரி) வழியாக முதல் செய்தி வந்த
மறுநாளே அனைவருக்கும் தகவல் தெரிவித்தேன்.

இன்று ஆதிச்சநல்லூர் விடயத்தில் ஏதோ மறைக்கப்படுகிறது என பரவிய தகவலால்
அதே தினமலர் மதுரை பதிப்பில் ராகவன் பத்மநாபன் மற்றும் மகேஸ்வரியிடம்
பேட்டி கண்டு வெளியிட்டுள்ளனர்.

இன்று வந்த செய்தியை அவருக்கு தெரிவித்தேன். அவரும் தன் நிலையை
வெளிப்படுத்திவிட்டதாக தெரிவித்தார்.

கேள்விகள்

இதற்கு ராகவன் வெளிநாட்டில் உள்ளதால் ஆய்வறிக்கை வெளியிட தாமதம் ஆவதாக
பொய் சொன்ன டி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பதில் என்ன?

நேர்மையாக எல்லோரையும் ஊக்கப்படுத்தி வேலை செய்த மகேஸ்வரி மாற்றப்பட்டதன்
அவசியம் என்ன?

எல்லோருக்கும்  பணி மாறுதல் கிடைத்தாலும் தொடர்ந்து 22 வருடங்களாக திரு.
K.P. Mohandas, Assistant Superintending Archaeologist, Chennai Circle
என்ற மலையாளி மட்டும் எப்படி அங்கேயே வேலை செய்யமுடிகிறது. (4-ஆவது பகுதி
ஆய்வறிக்கை தடுத்து வைத்திருப்பதில் அல்லது முடிக்காமல் இருக்க இவரும்
ஒரு காரணம் என சந்தேகத்திற்கிடமான செய்தி உலா வருகிறது)

மேற்கொண்டு ஊடகங்கள்தான் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

செய்வார்களா?

.....
[19/11 08:54] ‪+91 97686 00851‬: ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியில்
வராது. இது சர்வ நிச்சயம். காரணம், இந்த அறிக்கை வெளியேவந்தால்
இந்தியாவின் சரித்திர புத்தகத்தையே மாற்றி எழுதக்கூடிய நிர்பந்தம் எழும்.
இதனால் இங்கு தங்களை இந்தியர்களாக காட்டிக்கொள்ளும் ஆரியர்களுக்கு
குறிப்பாக பிராமணர்களுக்கு பெரிய சிக்கல் எழும்.

சிந்து வெளி நாகரீகம் தமிழனுடையது என்று நிரூபணமாகி வருடங்கள் ஆகியும்
கூட இல்லாத சரஸ்வதி நதியோரம்தான் இந்திய நாகரிகம் தோன்றியது. அந்த
நாகரிகத்தின் சொந்தகாரர்கள் நாங்கள் தான் என்ற பொய்யை ஆரியர்கள் இன்றும்
சொல்லிவருகிறார்கள்.

ஆனால் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகள் மிகவும் வலுவாக தமிழனுடைய
நாகரீகத்தை சொல்லுவதால் ஆரியர்களுக்கு தங்களின் சரஸ்வதி நாகரீகம்
பொய்யாகிவிடுகிறது.

அதேபோலத்தான் பூம்புகார் ஆழ்கடல் ஆராய்ச்சியும் நின்று போனது.
ஆதிச்சநல்லூர் அறிக்கைக்கும் இதே நிலைதான் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக