புதன், 22 மார்ச், 2017

நாகர் தமிழர் ஒன்றே

aathi tamil aathi1956@gmail.com

29/5/16
பெறுநர்: எனக்கு
Enathi Poongkathirvel.
" நாகர் " என பெயர் சூட்ட காரணமான ஆந்திர மக்கள்- படித்து, பகிரவும்.
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் மற்றும் மாவேள் நிர்வாகத்தினருட
ன் கிராம சீரமைப்பு தொடர்பாக ஆந்திரா சென்றபோது செல்லவேண்டிய
கிராமத்திற்கு செல்லாமல் அதே போல் உச்சரிப்பில் உள்ள இன்னொரு பகுதிக்கு
சென்றுவிட்டோம்.
அந்த ஊருக்குள் நுழைந்ததும் சரியாகத்தான் வந்துள்ளோமா என்று அறிய
பெட்டிக்கடை ஒன்றில் விசாரித்தோம். நாங்கள் தமிழ் பேசுவதை அறிந்து உடனே
யார் நீங்கள்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்று வினவிக்கொண்டே
இருந்தார். சற்று நேரத்தில் எங்களை சுற்றி பெண்களும், ஆண்களும் எதோ
பிரச்சனைபோல கூடிவிட்டனர்.
நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகின்றோம். பென்னலபாடு கிராமத்திற்கு போக
வேண்டும் எனக்கூற என்ன காரணத்திற்காக வந்துள்ளீர்கள்? யாரை பார்க்க
வேண்டும்? என்று அடுத்தடுத்த வினாக்களுக்கும் பதிலளித்த பின்னர்...
அந்தக் கூட்டத்தில் புதிதாக நுழைந்த ஒரு பெண் கேட்டார் யார் இவர்கள்
என்று. அதற்கு அவர் " அரவர்கள்" , தமிழ்நாட்டிலிரு
ந்து வந்துள்ளனர் என்று கூறினார்.
அதன் பின்னர் அரவர்கள் பற்றி தேடத் தொடங்கியதில் கிடைத்த தகவல்கள்...
அரவர்கள் என்றால் நாகர்கள் என்று அர்த்தம். அரவம் என்றால் பாம்பு என்பது
பொருள். தமிழகம் மற்றும் இலங்கையை பூர்வீகமாக ஆண்ட தமிழர் குடிகளே
நாகர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
நாகபட்டினம், நாகமலை, நாகராசன், நாகம்மாள் போன்று ஊர்மற்றும் மக்களின்
பெயர்களும் இதனையொட்டியே வந்துள்ளது.
புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர்,
வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் என்னும் நாகரியர் என்ற தமிழ்
புலவர்களும்
இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற
மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள்
ஆண்டுவந்தனர். இதற்கு ஆதாரமாக முரஞ்சியூர் முடிநாகராயர் பாடல்
குறிப்புகளும் உள்ளன. இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள்
முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.
நாம் யாரென்று நாமே மறந்தோம்! தெலுங்கர்கள் மறக்கவில்லை!! தெலுங்கர்கள்
யாரென்பதை அவர்கள் மறக்வில்லை! நாம் மறந்துவிட்டோம்!!
- ஏனாதி பூங்கதிர்வேல்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்.
www.maavel.com
www.aaproject.org

கார்த்திகேயன் மதுரை
உண்மைதான் பீமாராவ் அம்பேத்கர் கூட இந்தியக்துணைக்கண்டம் முழுக்க தமிழை
தாய் மொழியாகக் கொண்ட நாகர்களே வாழ்ந்தார்கள் என்று கூறியுள்ளார்..
வேதத்தில் நாகர்களை ஆரிய மன்னன் சனமேசயன் என்பவன் கூண்டொடு அழித்தான்
என்று பதிவாகியுள்ளது..
அவன் இனப்படுகொலை செய்தது பாம்புகளை அல்ல.. தமிழர்களை...
https://ta.m.wikipedia.org/wiki/சனமேசயன்

J Senthil Kumar
உன்மை.. ந மு வேங்கட சாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரம் புத்தகம்
நாகர் குறித்த தகவலை கொண்டுள்ளது.. திராவிட அரசியலில் தெலுங்கர் நம்மை
அழித்தார் !!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக