செவ்வாய், 21 மார்ச், 2017

மருத்துவம் நரைமுடி கறுக்க குறிப் சித்தர்கள்

aathi tamil aathi1956@gmail.com

15/7/16
பெறுநர்: எனக்கு
தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள்
சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம்
வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும்
புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள்
௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த
தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப
மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி
தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு:-
தலை முடி கறுக்க:
"எண்ணெய் இட்டு முழுகும் பொது
நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து
அரையப்பா அரைத்து போட்டு முழுகு"
நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்து, எண்ணெய்
தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.
"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி
யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".
பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.
சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது
கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக
வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவர், 150
வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள்
என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக