செவ்வாய், 21 மார்ச், 2017

வாலி பிரபாகரன் பற்றி கவிதை பார்ப்பனர்

கவிஞர்-வாலி. தமிழீழ தேசிய தலைவரை பற்றி எழுதிய கவிதை.

மாமனிதனின் மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;

மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது உன் - பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன்
என்று... சூளுரைத்து -

சின்னஞ்சிறு தோளுயர்த்தி நின்றது நீல
இரவில் - அது நிலாச் சோறு தின்னாமல் - உன்
இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில்
- சூடும் சொரணையும் வர சூரியச்
சோறு தின்றது;

அம்மா! அதற்கு நீயும்
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்
அதற்கு,தினச் சோறு கூடவே இனச்
சோறும் ஊட்டினாய் நாட்பட - நாட்பட -
உன் கடைக்குட்டி புலியானது காடையர்க்கு கிலியானது!

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை. ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி அவர்களது உழைப்பைத் தம்
உணவுக்கு உப்பாக்கி
----- Message truncated -----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக