சனி, 25 மார்ச், 2017

இந்தி எதிர்ப்பு முதன்முதலில் தமிழர்கள்

aathi tamil aathi1956@gmail.com

9/4/16
பெறுநர்: எனக்கு
Yal Iniyan
1937 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் முக்கியமான சில உண்மைகள்
இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு முறை
எழுதியுள்ளேன் என்றாலும் இளைய தலைமுறைக்காகவும் கருங்காலிகள் மற்றும்
வெள்ளேந்திகள் சிலருக்காகவும் மறுபடியும் சுருக்கமாக எழுதவுள்ளேன்.
உண்மை சுருக்கம் : 1937 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஈழத்து சிவானந்த
அடிகள், அருணகிரி அடிகள், சண்முகானந்த அடிகள், சைவ நெறி
கழகத்தார்,கி.ஆ.பெ. விசுவநாதம், செ.தெ. நாயகம், மறைமலையடிகள், சோமசுந்தர
பாரதியார், மு.சி.பூரணலிங்க
ம்பிள்ளை, தெ.பொ.வேதாசலம், திரு.வி.க, உள்ளிட்ட தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட
்டு தலைமையேற்று நடத்தப்பட்டது. மிக வலுவான செயல் திட்டத்துடன்
ஒருங்கமைக்கப்பட்டது . முதன் முதலில் எதிர்ப்பு குரலை வெளியிட்டவர்
ஈழத்து சிவானந்த அடிகள் என்பதையும் பதிவு செய்கிறேன்.பின்னர் மாணவர்கள்
பேரெழுச்சி உடன் பங்கேற்றனர் .
பெரியாரின் பங்கு மிகைப்படுத்தப்பட்டு திராவிடர் கழக சிகாமணிகளால்
போராட்ட வரலாறு திரிக்கப்பட்டுள்ளது .
உண்மையை உரக்க சொல்ல விரும்பும் நண்பர்கள் பகிரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக