செவ்வாய், 21 மார்ச், 2017

குறள் வேளாண்மை பற்றி திருக்குறள் விவசாயம்

aathi tamil aathi1956@gmail.com

13/7/16
பெறுநர்: எனக்கு
Enathi Poongkathirvel.
திருவள்ளுவர் கூறிய " சுழிய நிதி (zero budget) இயற்கை வேளாண்மை.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. - குறள் 1038
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய
பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி எரு இடுதல் நல்லது என்றும், களைக்கொல்லி
ஊற்றி மண்ணை நாசம் செய்யாமல் களையை நீக்குங்கள் என்றும், பயிருக்கு நீர்
பாய்ச்சுவதை விட பயிருக்கு அருகே இருந்து அதனை காவல்காப்பது மிகவும்
முக்கியமானது என்றும் ஐயன் வள்ளுவர் அன்றே " சுழிய நிதி (zero budget)
இயற்கை வேளாண்மையை " கூறி சென்றுள்ளார்.
பிற நாட்டவர் வந்து போதிப்பதை பெரும் செய்தியாக நம்பி பரப்பும் தமிழர்கள்
நம்முடைய இலக்கியங்கள் கூறியுள்ள அறிய செய்திகளை கவனித்தால் போதுமானது.
நாகரிகமும், வேளாண்மையும் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழ் மண்ணில் பிறர் வந்து
களப்பணி செய்வதென்பதுவும், போதனை கொடுப்பதும் தமிழர்களுக்கு
பேரிழுக்காகும்.
தெளிந்த தேசிய நோக்கத்தோடும், தேசிய உணர்வாளர்களின் வழி நடத்தலோடும்,
உலகத்தமிழர்களின் ஒத்துழைப்போடும் வீரநடை போடும் மாவேளின் புதிய கிளை
நாளை மறுநாள் ( சூலை 14-2014 ) அன்று எண் : 12 , கண்ணப்பா லேயவுட் , பழைய
பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் எனும் முகவரியில் திறக்கப்பட
உள்ளது.
விழுப்புரம் மாவட்ட உறவுகள் பேராதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
- மாவேள்
www.maavel.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக