செவ்வாய், 21 மார்ச், 2017

கரிகாலன் புகழ் வெண்ணி போர் சேரன் புகழ் வென்னி தற்போது திருவாரூர் அருகே

aathi tamil aathi1956@gmail.com

1/8/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக !
களிஇயல் யானைக் கரிகால் வளவ !
சென்று அமர்க் கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் ! நின்னினும் நல்லவன் அன்றே !
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே.
(புறம் 66)
"நீரால் நிறைந்த பெரிய கடலில் காற்றின் துணையின்றிப் பெருங்கலங்கள்
ஓடாதாக, ஆங்கு அக்காற்றினை ஏவல் கொண்டு நாவாய் ஒட்டிய வலியோன் மரபில்
வந்தோனே! போர்மதம் மிக்க யானைப் படையுடைய கரிகால் வளவ! படையெடுத்துச்
சென்று பகைவர் ஆற்றிய போர்த் தொழிலை அழித்து, உன் பேராண்மை வெளிப்பட
வெற்றி கொண்டவனே! ஆரவாரம் மிக்க புதுப்புது வருவாய்களைக் கொண்ட வெண்ணி
எனும் இடத்தில் நடைபெற்ற போர்க்களத்தில், பெரும்புகழை இப்பேருலகில்
நிலைபெறப் பண்ணி, போரில் புறப்புண் பெற்றமைக்கு நாணி, வடக்கிருந்து உயிர்
நீத்த உன் பகைவன் நின்னினும் நல்லன் அன்றோ?"
அடடா! வெண்ணிக்குயத்தியார் கரிகாற் பெருவளத்தானைப் போற்றுகின்றாரா இல்லை
சேரனைப் போற்றுகின்றாரா?

Sasi Sasi
தற்போது இந்த ஊர்" கோவில்வெண்ணி" என்றழைக்கப்படுக
ிறது..திருவாரூர் மாவட்டம்.. போர் நடந்ததாக சொல்லப்படும் பரந்த அந்த
"போர்களம் "தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம்
இயங்குகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக