செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழ்ப்புத்தாண்டு நாட்காட்டி வானியல் காலக்கணக்கீடு

aathi tamil aathi1956@gmail.com

27/7/16
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Karupaiya
Ramanathan மற்றும் 17 பேர் உடன்.
சங்கத்தமிழர் நாள்காட்டி - 8
========================
பண்டைய தமிழர் விழாக்கள்- சங்கத்தமிழர் நாள்காட்டிப்படி: பகுதி 2
------------------------------------------------------------
-----------------------------------------
5)பங்குனி திங்கள்.
-------------------------------
பங்குனி முழுநிலவில் உத்திரம் நாளில் பங்குனி மாதம் தொடங்கும். அன்றே
கரும்புடையான் நோன்பு/காமவேள் விழவு/காமன் விழா.
ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் பாவை நோன்பு இருந்த ஆண்டாளுக்கு
கண்ணனை அடைய முடியவில்லை. சாதாரண மனிதர்களை அடைய வேண்டுமானால், பாவை
நோன்பிருந்தால், தையில் வழி பிறந்திருக்கும். கண்ணனையே அடைய
வேண்டுமல்லவா? அவ்வளவு எளிதில் அடைய முடியுமா? எனவே, காமனை(மன்மதன்)
வேண்டி கரும்புடையான் நோன்பு இருக்கிறாள்.
உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
ஓத்துவல் லார்களைக் கொண்டுவைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய்
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
பசுங்காய் நெல்லும், கரும்பும் அமைத்து, அரிசி,அவல், வெல்லம்
ஆகியவற்றைக்கொண்டு பலகாரம் செய்து மன்மதனுக்கு படைத்து, கண்ணனையும்
என்னையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று கரும்புடையான் நோன்பு
இருக்கிறாள் ஆண்டாள்.
ஆனால் தற்போது அந்த கரும்புடையான் நோன்பை, காரடையான் நோன்பு என்றாக்கி,
கார அடை செய்ய வேண்டும் என்று உளறிக்கொண்டு இருக்கிறோம்.
இதனை வில் விழா என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
"கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்" (சிலம்பு. மதுரை: ஊர்காண்: 110
- 111.)
கலித்தொகையோ, வில்லவன் விழா என்று குறிப்பிடுகிறது.
"மல்கிய துருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்து, அவர், வில்லவன் விழவினுள்
விளையாடும் பொழுதன்றோ - "வலன் ஆகவினை!" என்று வணங்கி நாம் விடுத்தக்கால்,
ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்"என்று உரைத்ததை? நிலன் நாவில்
திரிதரூஉம் நீள் மாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும்
பொழுது அன்றோ - பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால்,
சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" நன்று உரைத்ததை?" (கலித்தொகை. 35)
வினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும் காதலரை
மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும் என விரும்பும் பெண்கள், தங்கள்
காதல்தேவனை வணங்கி, "காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும்
சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும்" என்று
வேண்டுகின்றனர்.'காதலன் தன்னை, தன் கண்ணால் காணுமாறு காணச்
செய்யவேண்டும்! அவன், பனை ஈன்ற மடற்குதிரையில் ஏறி விரைந்து வரச் செய்ய
வேண்டும், காதலனின் வருகையைப் பெறச் செய்வதற்காகக் காமனின் கால்களைக்
கட்டிக் கொண்டு, இரப்பேன் அவனின் அம்புகள் எனக்குக்கிடைக்க அருள் செய்ய
வேண்டும்!என்று காமனை இன்று மட்டுமல்ல என்றும் இரப்பேன்' என்று
கலித்தொகையில் ஒருத்தி உரைக்கக் காணலாம்
'பனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காமன் கணை இரப்பேன், கால் புல்லிக்
கொண்டு' (கலித்தொகை.147)
'ஒளிரும் இழையினை உடைய தோழி, நீர் கொண்ட காரியம்வெற்றி உண்டாவதாக என்று
கூறித் தொழுது நம் காதலரை நாம் விடுத்தக்கால், அவர் நம்மிடத்தேவருதும்
என்று உரைத்தக்காலம், நீர் நிறைந்த ஆற்றிடைக் குறையிலே அவர் தம்மை
மகிழும் பரத்தையரைக்கூடி
க் காமனுக்கு நிகழ்த்துகின்ற விழாவினிடத்தே, அவருடனே விளையாடும் இவ்
இளவேனிற் காலமல்லவோ?' என்று காதலன் வரவை எதிர் நோக்கிக் காத்திருப்பது
புலனாகிறது.
இந்த நாள் தான் சங்க கால காதலர் தினம்.
6.சித்திரை திங்கள்:
--------------------------------
சித்திரை மாதம் முழுநிலவில், சித்திரை நாள்மீன் சேரும். அதுவே சித்திரை
திங்கள் தொடக்கம் மற்றும் இந்திர விழா தொடக்கம்.
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,
‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என,
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை-
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து; (சிலம்பு விழாவூரெடுத்த காதை)
சித்திரை திங்கள், சித்திரை நாள்மீனில்(சித்திரை முழுநிலவு) இந்திர விழா
தொடங்கியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
அப்படி சித்திரை முழுநிலவில் தொடங்கிய இந்திர விழா, ஒரு திங்கள்(28
நாட்கள்) நடைப்பெற்றது என்று மணிமேகலை கூறுகிறது. (நால் ஏழ் நாளினும்-
7*4=28)
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
'மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக' என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்
மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும் (மணிமேகலை)
ஆடி:
--------
ஆடி திங்களில் ஆடிப்பூரம் நீர்வழிபாடு நடைப்பெற்றுள்ளது.
மழை பொழிந்து ஆற்றில் நீரோட்டம் ஏற்பட, நீராடி வழிபடுவதே புனலாட்டு விழா
எனப்படுகிறது. தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நீரை வாழ்த்தி,
வழிபடுவது வளமை வேண்டிச் செய்யப்பட்ட செயலாகக் கருதலாம்.
ஆவணி:
---------------
திருவோணம்:
------------------------
திருமாலோடு தொடர்புடைய விண்மீன் திருவோணமாகும். இந்நாளில் கொண்டாடிய விழா
ஓண விழாவாகும். இதனை,
‘‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்’’ (மதுரைக்காஞ்சி. 590-591-வது வரிகள்)
என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. இந்த நாளில் வீரர்கள்
நீலக்கச்சையணிந்து விருந்துண்டு களித்தனர். இவ்விழா ஆவணித் திங்களில்
கொண்டாடப்பட்டது. இவ்வோணம் பின்னாளில் கேரள மாநிலத்தில் வசிக்கும் மக்கள்
மட்டும் கொண்டாடும் விழாவா இன்று மாறிவிட்டது நோக்கத்தக்கது. கி.பி.
7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் இதுபற்றிக் குறிப்பிடுகின்றனர்.
ஐப்பசி திங்கள்:
-------------------------
மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.(தேவாரம் திருமயிலை பதிகம்)
இன்று கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவதற்கு 9 நாட்கள் முன் அண்ணாமலையாருக்க
ு பெருவுற்சவம்(பிரம்மோற்சவம்) நடைபெறுகிறது. முன்பு, ஐப்பசி ஓண நாளில்
பெருவுற்சவம் தொடங்கி, ஒன்பது நாள் கழித்து கார்த்திகை முழுநிலவில்
முடிவுற்றிருப்பதை இப்பதிகம் காட்டுகிறது.
ஐப்பசி இறுதி நாளில், ஆண்டின் ‘கடை முழுக்கு’ நடைப்பெற்றுள்ளது.
அடுத்த நாள் ‘முதல் நாள் முழுக்கு’ செய்து ஆண்டை தொடங்கி, மாலையில் புது
ஆண்டை வரவேற்று, விளக்குகளை ஏற்றி வைத்துள்ளனர்.
தொடரும்-8
4 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக