செவ்வாய், 21 மார்ச், 2017

இராசாஜி ஈவேரா ஆங்கில ஆதரவு ஆங்கிலேயர் மட்டும் அறிவாளிகளா கண்டுபிடிப்பு ஜெர்மனி

aathi tamil aathi1956@gmail.com

27/7/16
பெறுநர்: எனக்கு
அருள்குமார் சோமசுந்தரம்/ சான்று 3/
இராசாசியோடு சேர்ந்து ஆங்கில மொழிக்கு வாதாடிய பெரியார்
28.1.1956இல் சுப்பையா பிள்ளை என்பவரது வீட்டில் மத்திய அரசின் இந்தித்
திணிப்பிற்கு எதிரான கூட்டத்தை இராசாசி கூட்டினார். இக்கூட்டத்தில்
அண்ணாதுரை, ம.பொ.சி., நெடுஞ்செழியன் உள்ளிட்ட சில பிராமணர்கள்
பங்கேற்றனர். அக்கூட்டத்தில் தலைப்பின் நோக்கத்திற்கு மாறாக இராசாசியின்
ஆங்கில மொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பெரியார் பேசினார். இந்த உரையை
மேற்கோள் காட்டி பெரியார் கோவையிலிருந்து வெளிவரும் 'கலைக்கதிர்'
(டிசம்பர் 1956) எனும் ஏட்டிற்கு "எனது மொழிக்கொள்கை" என்ற தலைப்பிட்டு
கட்டுரை ஒன்றை எழுதினார். அதுவருமாறு:
"சமீபத்தில் 5,6 மாதங்களுக்கு முன்னால் நுங்கம் பாக்கத்தில் திருவாளர்
ஏ.சுப்பையா பிள்ளை அவர்கள் பங்களாவில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் என்பதாக
ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில் எல்லாக் கட்சிக்காரர்களும்
வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் சி.ராஜ
கோபாலச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டிக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்க
வேண்டும் என்றும் பேசினார். பிறகு நான் பேசும் போது அதுபோலவே பேசிவிட்டு,
ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்று சொன்னேன்.
அது சமயம் இப்படி நான் சொல்லுவதில் சிலர் என்னை நீ யாருக்குப் பிறந்தாய்
என்று கூட க் கேட்டார்கள். அந்த மொழியைப் பேச வேண்டும் என்று சொல்வதனால்
நாம் ஆங்கிலேயனுக்குப் பிறப்பதானால் மற்றப்படி காப்பி குடிப்பது
முதற்கொண்டு ரயில், ஆகாயக் கப்பல், ரேடியோ, டெலிபோன், மருந்து
முதலியவைகள் ஆங்கிலேயனுடையவை என்று தெரிந்து அனுபவிக்கிற நாம் எத்தனை
தடவை ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்களாவோம் என்பதைச் சிந்தித்துப்
பார்த்தால் மொழி பேசுவதனால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாக மாட்டோம் என்று
சொன்னேன்."
( கலைக்கதிர், டிசம்பர் 1956)
தமிழ்நாட்டில் ஆங்கிலமே ஆட்சிமொழியாகவும, பேச்சு மொழியாகவும் மாற
வேண்டும் என்று சொல்லும் பெரியார் எப்போதாவது தமிழர்களிடம்
ஆங்கிலமொழியில் பகுத்தறிவு பரப்புரை செய்ததுண்டா? ஆங்கில மொழியில் ஆட்சி
நடத்தச் சொல்வது என்பது தமிழ்மொழியை ஒழிக்கின்ற முயற்சி தானே தவிர
வேறொன்றுமில்லை.
அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் அனைவரும் ஆங்கில மொழிக்காரர்கள் என்று
பெரியார் கருதுவது அவரின் பேதமையை வெளிப்படுத்துகிறது.
புவியின் சுற்றளவை கணக்கிட்டுச் சொன்ன அரிஸ்டாட்டில் ஒரு கிரேக்கர்.
சூரிய மையக் கொள்கையை வகுத்த கோப்பர் நிக்கஸ் ஒரு போலந்து நாட்டுக்காரர்.
சூரியனை கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றுவதாக கூறிய கெப்ளரும்,
சார்பியல் கோட்பாடு கண்ட ஐன்ஸ்டைனும், டீசல் என்ஜினை கண்டு பிடித்த
டீசல், உளவியல் தந்தை எனப்படும் சிக்மண்ட் பிராய்டு, ரேடார் கண்டு
பிடித்த ஹல்ஸ்மெயர் போன்றவர்கள் அனைவரும் ஜெர்மானியர்களாவ
ர்கள்.
தமிழிலேயே நவீன அறிவியல் கல்வியை வழங்குவதன் மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகள
ை நிகழ்த்துவதற்கு தமிழர்களுக்கு துணை நில்லுங்கள் என்று
சொல்லியிருந்தால் நீ தமிழனுக்கு பிறந்தாயா? என்ற கேள்வியை பெரியாரை
நோக்கி யாரும் எழுப்பியிருக்க மாட்டார்கள். இதில் பெரியார்
ஆத்திரப்படுவதில் ஏதாவது நியாயமுண்டா?

kathir nilavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக