செவ்வாய், 21 மார்ச், 2017

சென்டினல் தீவு அந்தமான் பழங்குடி

aathi tamil aathi1956@gmail.com

14/6/16
பெறுநர்: எனக்கு
சான்றோர் மெய்ம்மறை
இந்தியாவுக்கு அருகில் யாரும் அறியாத # இரகசியத் # தீவு
உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா
என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில்.
உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை.
இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத
அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு.
அதுதான் வடக்கு சென்டினல் தீவு.
இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி
ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும்.
வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த
உலகத்தில் இருந்து வருகிறது.
இந்தியாவுக்குச் சொந்தமான தீவு இது.
அந்தமான் – நிக்கோபார் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதி.
மியான்மருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வங்கக் கடலில் உள்ளது இந்த
சின்னத் தீவு.
இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர், இவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்,
இவர்களது வாழ்க்கை முறை என்ன என்பது குறித்து யாருக்குமே தெரியாது.
இவர்களைப் பற்றிய எந்த ஆவணமும் யாரிடமும் இல்லை.
பெரும் மர்மமான முறையில் இந்தத் தீவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தத் தீவில் வசிப்பவர்கள், கடைசிக் கற்காலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர்.
இவர்களை சென்டினலிஸ் என்று அழைக்கிறார்கள்.
இவர்கள் பேசும் பாஷை, இவர்களது வாழ்க்கை முறை என எதுவுமே யாருக்கும் தெரியாது.
இந்திய ஹெலிகாப்டர் தீவை வட்டமடித்து ஆய்வு மேற்கொண்டபோது கீழே இருந்து
பழங்குடி மக்கள் கற்களை வீசியும், அம்புகளை எய்தும் இந்திய
ஹெலிகாப்டருக்கு எதிர்ப்புகளைக் காட்டினர். நன்றி புற fm
5 மணிநேரம் · பொது

Sivaraman Somasundaram
"The first peaceful contact with the Sentinelese was made by
Trilokinath Pandit, a director of the Anthropological Survey of India,
and his colleagues on 4 January 1991. Indian visits to the island
ceased in 1997." https://
www.youtube.com/watch?v=ExdEHU02Zk0
Isolated Sentinelese Tribe; Contact with Indians
youtube.com

Gabriel Raja
2004ல் மிகப்பெரிய ஆழிப்பேரலை குமரி பெருங்கடலை புரட்டிப்போட,
அந்தமான் தீவுகளில் வசிக்கும் இந்த பழந்தமிழ் பழங்குடியினர் ஆழிப்பேரலையை
முன்பே அறிந்து தங்களை தற்காத்துக் கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக