ஞாயிறு, 19 மார்ச், 2017

சட்டநாதன் கரையாளர் எல்.எஸ்.கரையாளர் குமரி

aathi tamil aathi1956@gmail.com

27/10/16
பெறுநர்: எனக்கு
M Boopathy Raja
இன்று 25-10-2016 திரு எல்.சட்டநாதக் கரையாளர் அவர்கள் பிறந்த நாள்.
அமெரிக்க அரசு 1955 இல் அமெரிக்காவிற்கு வரழைத்து மூன்று மாத காலம்
சிறப்பு விருந்தினராக தங்கவைத்து அமெரிக்காவின் 13 மாநில
சட்டமன்றங்களிலும் சிறப்பு பேருரை ஆற்ற வைத்துள்ளது.
13 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பேருரை ஆற்ற சிறப்பு அழைப்பாளராக
அழைத்து பேச வைத்தார்கள்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாத
சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறைக்கு தொடர் வண்டியில் முதல் வகுப்பில்
பயணம் செல்ல மறுத்து மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார்.
பின்னர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டு,மூதறிஞர் ராஜாஜி அவர்களுடன்
திருச்சி சிறையில் இருந்தார்.
அப்பொழுதுதான் திருச்சி ஜெயில் என்கின்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார்.
திருச்சி ஜெயிலில் இருந்தபோது மூதறிஞர் ராஜாஜி,அவினாசில
ிங்கம் செட்டியார்,எம்.பக்தவத்சலம் போன்ற 241 தலைவர்களுடன் சிறையில் இருந்தார்.
அப்பொழுது எல்.சட்டநாதக்கர
ையாளரின் அறிவாற்றலையும்,
ஆங்கிலப்புலமையையும் கண்டு அனைவரும் வியந்து பாராட்டியுள்ளனர்.
1937,1942ஆகிய இரண்டு முறை கோவில் பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளார்.
1940 இல் தனிநபர் சத்யாக்கிரகம் செய்து கைது ஆகி உள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாள்,அதற்கு
பரிச்சார்த்தமாக டொமினியன் அந்தஸ்த்து வழங்கியபோது பாராளுமன்றச்
செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
1946 ல் கோவை டி.எஸ்.அவினாசில
ிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோதும் எல்.எஸ் கரையாளர்
அவர்களின் ஆற்றலையும்,அறிவ
ுத்திறமையையும் நன்கறிந்த டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் தொடர்ந்து
பார்லிமெண்ட் செக்ரட்டிரியாக அவருடன் வைத்து கொண்டார்,அதாவது துணை
அமைச்சர் அந்தஸ்த்து.
அதற்குப்பின் அமரர் புரட்சித்தலைவர் M.G.R ஆட்சியின்போது இதேபோன்று
பார்லிமெண்ட் செகரட்டரி என்றபெயரில் துணை அமைச்சர்கள்
நியமிக்கப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
1951 ல் ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்
1953 ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்.
1954 ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
எல்.எஸ்.கரையாளர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த
போதுதான் தமிழகத்தில் ஆவடியில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடை
பெற்றது.
அந்த மாநாட்டில்தான் இந்திய தேசிய காங்கிரசுக்கு புதிய கொள்கையை,இந்திய
ஜனநாயக சோசலிச காங்கிஸ் என்று பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள்
பெயர் மாற்றம் செய்து சோசலிச கொள்கைக்கு இந்தியாவை திருப்ப முயன்றார்.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி அன்றைய அனைத்து இந்தியத் தலைவர்களின்
ஏகோபித்த பாராட்டைப் பெற்றதோடு பிரதமர் நேரு அவர்களின் தனிப்பட்ட
அன்பையும் எல்.சட்டநாதக்கரையாளர் பெற்றார்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் எல்.எஸ். கரையாளர் தான் என அனைவராலும் எதிர்பார்க்கப்ப
ட்டது,ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக