செவ்வாய், 21 மார்ச், 2017

சாதிஒழிப்பு மறைமலையடிகள் ஈவேரா கு முன்பே

aathi tamil aathi1956@gmail.com

18/7/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
சாதி வேற்றுமைக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர்
மறைமலையடிகள்
1926ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் பெரியார் தனது 'குடியரசு' ஏட்டில்
கடவுள், மதம், சாதி, மூட நம்பிக்கைகளை எதிர்க்கத் தொடங்குகிறார். ஆனால்
பெரியாருக்கு மூன்று வயது மூத்தவராக விளங்கிய மறைமலையடிகள் அவர்களோ
தனித்தமிழ் இயக்கத்தை 1916இல் தோற்றுவிப்பதற்கு முன்பே 'சாதி
வேற்றுமையும் போலிச் சைவரும்' என்ற நூலை வெளியிட்டார்.
1913இல் வெளி வந்த அந்நூலில் மறைமலையடிகள் பின் வருமாறு எழுதுகிறார்:
"ஒருவனுக்கு ஒரு பொல்லாத நோய் வந்தால் அதனை நீக்கலுறுவோன் அந்நோயை
உண்டாக்கின மூலத்தை அறிந்தாலன்றி அவன் அதனை முற்றும் நீக்க மாட்டுவன்
அல்லன். ஒரு நோயின் மூலத்தை அறிந்து அதனை அடியோடு களைந்த அளவானே அந்நோய்
முற்றும் ஒழிந்துபோம். அது போலச் சாதி வேற்றுமைகளை உண்டாக்கிய
மூலங்களையும் நன்கு ஆய்ந்து கண்டு பின்னர் அவ்வேற்றுமைகளை ஒழித்தலே
இன்றியமையாது செயற்பாலது ஆகும்." (பக்கம் 77.)
அப்போது (1913இல்) பெரியார் 'நாயக்கர்' என்ற பட்டத்தோடு ஈரோடு நகரசபைத்
தலைவராக பதவியில் உலா வந்து கொண்டிருந்தார். சாதி வேற்றுமைக்கு எதிராக
முதலில் கலகக் குரல் எழுப்பியவர் மறைமலையடிகள் என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக