ஞாயிறு, 19 மார்ச், 2017

முலைவரி வெட்டியெடுத்த பெண் நாஞ்சலி குமரி தோள்சீலை நாடார்

aathi tamil aathi1956@gmail.com

மார். 5
பெறுநர்: எனக்கு
Chellam Selva
நாடார் மக்களில் பெரும்பான்மையோர் கிருஸ்துவத்தை தழுவ காரணமே இந்து மதம்?
சகோதரர் Aran Kumar பதிவு.....
புலையர் சாதி, சாணார் சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பார்பன
நம்பூதிரிகள் கேரளாவில் செய்த கொடுமைகளை நாம் அறிவோம். கேரளாவிலும்
கேரளாவை ஒட்டிய கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களிலும் தாழத்தப்பட்ட
மற்றும் நாடார் சாதி மக்களுக்கு 'முலை வரி' என்ற ஒன்றை வசூலித்தனர். ஒரு
பெண்ணின் மார்பின் அளவுக்கேற்ப அந்த வரியானது போடப்படும். இதனை
வசூலிப்பதற்கென்றே மானங்கெட்ட நம்பூதிரிகள் ஆட்களை நியமித்திருந்தனர்.
வரி கட்டாத பெண்களின் மார்புகள் அறுத்தெறியப்பட்டன. இதற்கு பயந்து கொண்டு
தங்கள் உழைப்பில் பெரும் பகுதியை அக்கிரமக்கார நம்பூதிரிகளுக்கு கொடுத்து
வந்தனர் தாழ்த்தப்பட்ட பெண்கள். உலகிலேயே இப்படி ஒரு கொடுமை நமது
தமிழகத்திலும் கேரளாவிலும் தான் நடந்துள்ளது.
நாஞ்செலி என்ற அழகிய தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு முலை வரி பாக்கி இருந்தது.
இதனால் அந்த பணத்தை வசூலிக்க மானங்கெட்ட அதிகாரிகள் நாஞ்செலியின்
வீட்டின் கதவை தட்டினர். 'முலை வரி' கட்ட அந்த பெண்ணிடம் பணம் இல்லை.
உடனே உள்ளே சென்று ஒரு இலையை எடுத்து வந்து தரையில் பரப்பினார். தனது
இறைவனை நெஞ்சுறுக வணங்கி விட்டு உடன் தனது இரு மார்பகங்களையும் அறுத்து
அந்த இலையின் மீது வைத்து அந்த அதிகாரிகளுக்கு காணிக்கையாக்கினார். இந்த
தகவல்களை கண்ணூரைச் சேர்ந்த ஓவியர் முரளி பத்திரிக்கையாளர
்களிடம் விவரித்தார்.
கேரளாவில் உள்ள செர்தாலா என்ற இடத்தில் இந்த கொடுமை அரங்கேறியது. இது
நடந்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அந்த இடம் 'முலச்சிபுரம்'
என்ற பெயரில் பலராலும் அறியப்படுகிறது.
ஓவியர் முரளி மேலும் தொடர்கிறார் 'செர்தாலா என்ற இந்த கிராமத்தில் உள்ள
அனைவரும் நாஞ்செலியின் சோக வரலாறை அறிவர். இந்த காட்சிகளை ஓவியமாக
வடித்துள்ளேன்' என்கிறார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த அசிஸ்டன்ட் புரபஸர் தாமஸ் புலிக்கல் (53) கூறும்
போது 'சிறு வயதிலிருந்தே இந்த கொடுமைகளை எனது குடும்பம் பார்த்து
வந்துள்ளது. நெஞ்செலி போன்ற வீர மிக்க பெண்களை பெற்றது இந்த மண்' என்று
நினைவு கூறுகிறார்.
பார்பன நம்பூதிரிகளின் கொடுமை திருவிதாங்கூர் மன்னனின் கொடுமை இவற்றை
எல்லாம் தாங்காமல் பெரும்பாலான நாடார் சாதி மக்கள் கிருத்துவத்தை
தழுவினர். இதனால்தான் இன்றும் கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களில்
கிருத்தவ மக்கள் அதிகமிருப்பதை காணலாம்.
மார்புகள் திறந்த அந்த பெண்களின் புகைப்படத்தை நான் பதிய விரும்பவில்லை.
எனக்கே இந்த உணர்வு இருக்கும் போது அந்த பெண்களின் கூச்ச உணர்வை நினைத்து
பார்கிறேன்.
ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டம் இந்திய
நாட்டு மக்களை அடிமை படுத்தி அவர்களை என்னவெல்லாம் செய்தார்கள் என்பதற்கு
இந்த சம்பவங்களெல்லாம் இன்றும் நமக்கு சாட்சி பகர்ந்து கொண்டுள்ளன.
நன்றி... http://googleweblight.com/i?u=http%3A%2F%2Fwww.jaffnamuslim.com%2F2016%2F03%2Fblog-post_538.html%3Fm%3D1&grqid=kuIh_MaH&hl=en-IN
4 மணிநேரம் முன்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக