செவ்வாய், 21 மார்ச், 2017

வேளிர் வன்னியர் நெருப்பு திரிபு வடபால் முனிவர் தடவு கற்பனை கபிலர் ஓமகுண்டம் நெருப்பிலிருந்து தோன்றிய சத்திரியர்

aathi tamil aathi1956@gmail.com

26/7/16
பெறுநர்: எனக்கு
கபிலர் 'வேளிர் நெருப்பில் தோன்றியவர்' என்று தெளிவாகக் கூறிவிட்டாராம்!

என்ன இது நகைச்சுவை, ஒரு மனிதன் நெருப்பிலிருந்து தோன்றமுடியுமா?

அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் “வடபால் முனிவன் தடவினுட் தோன்றி”
(அதாவது 'வடபுலத்து முனிவரின் ஓமகுண்டத்தில் தோன்றி' என்று நீங்கள்
குறிப்பிடுவது) என்பதற்கும்
“புலிகடிமால்” என்பதற்கும் அளிக்கும் விளக்கம் பகுத்தறிவுக்கு
ஏற்றதாகவும் வரலாற்றுச் சான்றுகளோடு பொருந்துவதாகவும் உள்ளது.
அவர் அளிக்கும் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாப் பக்ககங்களிலும் மலைகளால் சூழப்பட்ட இடத்திற்குத் “தடவு” என்று பெயர்.
 தமிழகத்தின் வடமேற்குப்பகுதியில் (தற்போது கர்நாடக மாநிலத்தில்) இருந்த
அத்தகைய தடவு ஒன்றில் முனிவன் ஒருவன் வாழ்ந்துவந்ததால் அந்தத் தடவுக்கு
”முனிவன் தடவு” என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.
அந்த ”முனிவன் தடவு”ப் பகுதியை ஆண்ட குறுநிலமன்னன், புலிநாடென்று
வழங்கப்பட்ட கன்னட நாட்டு வேந்தனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம்
பெற்றிருக்கலாம்.
 அல்லது, அந்தத் தடவுப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆந்திர சாதவாகன
வேந்தருள் ஒருவனான புலிமாய் என்பவனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம்
பெற்றிருக்கலாம்.
 சாதவாகனர்களுடைய ஆட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தொடங்கியது.
அந்நாளில் துவராவதி நகரம் சாதவாகனர்களின் நாட்டில் இருந்தது.
சாதவாகன மன்னனை வென்ற இருன்கோவேளின் முன்னோர்கள் துவராவதி என்னும் துவரை
நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்ததை இப்பாடலில் “துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேள்” என்று குறிப்பிடுகிறார்
என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

அதுசரி வேற்றினத்தார் தமிழ்வரலாறை ஆராய்ந்தால் வேறெப்படி இருக்கும்?!

puram400.blogspot.in/2010/12/201.html?m=1

’தட’ என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும்.
தொல் பொருள் ஆய்வுகளில் ‘தட’ என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர்
ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.
keetru.com/index.php?option=com_content&view=article&id=10933:2010-09-08-01-07-42&catid=1187:10&Itemid=449

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக