|
5/8/16
| |||
தமிழர் அரசு
# ஆபிரகாம்_பண்டிதர்
பிறந்த நாள் இன்று ஆகஸ்ட் 2, 1859
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில்,
முத்துசாமி நாடார் அவர்களுக்கும், அன்னம்மை அம்மாளுக்கும் மகனாகப்
பிறந்தார்
கண் ஓயாமல் , மெய் வருத்தம் பாராமல்,
கற்பனையில் மூழ்கி , வண்ணங்களைக்கலந்தெடுத்து , தன் திறமையால், அழகிய
வண்ண ஓவியம் ஒன்றை வரைந்தான் தமிழன்
திருடன் ஒருவன் வந்து அதன் கீழே அவனது பெயரை எழுதினானாம். யாருடைய பெயர்
ஓவியத்தில் உள்ளதோ, அவனே சித்திரத்தை எழுதியதாக இன்றளவும் நம்பப்
படுகிறது .
இப்படித்தான் தமிழிசை கருநாடக இசை ஆயிற்று !
வரலாறு எழுதாமையும் அதைப் பேணாமையும் தமிழரின் மிகப் பெரும் குறைகள்.
தமிழரின் சாதனைகளுக்கு உரிமை கொண்டாட நினைப்போரின் வேலை சுளுவானது. நமது
வரலாற்றைத் திரிப்பது எளிது. புதைக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டி எடுக்கவும்
திரிக்கப்பட்ட சரித்திரத்தைத் திருத்தி அமைக்கவும் கடும் முயற்சிகள்
தேவை. தமிழிசையின் வேர்களைக் கண்டு பிடித்து, அது கர்நாடக இசையாகத்
திரிந்து வந்துள்ளதை நிறுவிய ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி
#ஆபிரகாம்_பண்டிதர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின்
முதல் பகுதியிலும் கர்நாடக இசையையும் பழைய தமிழ் நூல் களையும் ஆழமாக
ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல்
# கருணாமிர்த_சாகரம்
சங்க இலக்கியங்கள், சிலப் பதிகாரம், பக்தி இலக்கியங்களைக் கற்றுணர்ந்து,
அவற்றில் இசை, இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளையும் ஆராய்ந்து
விளக்கினார். நாதசுவரம், கின்னாரி போன்ற வாத்தியங்கள் கடல்கோளுக்கும்
முந்திய தொன்மையுடையவை என நிறுவினார். நமது செங்கோட்டி யாழே நவீன கால
வீணை என்றும் நிரூபித்தார்.
தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை மாபெரும் அளவில் பண்டிதர்
நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை
மாநாடுகள் பண்டிதரது சொந்த செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு
விவாதங்கள் நடந்தன. புது கருத்துகள் வெளியாயின.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக