செவ்வாய், 21 மார்ச், 2017

எவிடென்ஸ் விமர்சனம் கலைச்செல்வி நவீனா தலித் படுகொலை உண்மைகள் தேவர் சாணிப்பால் ஒழிப்பு

aathi tamil aathi1956@gmail.com

5/8/16
பெறுநர்: எனக்கு
சாலியமங்களம் கலைச்செல்வி படுகொலையும் எவிடென்ஸ் கதிரின் பதிவுகளில்
ஊடாடும் வக்கிரமும் :
படுகொலைகளையோ, பாலியல் வல்லுறவுகளையோ ஒரு போதும் நாம் ஏற்பதில்லை. யார்
செய்தாலும் பாதிக்கப்பட்டவரின் சார்பில் நின்று போராடுவதே அறம். குற்றம்
செய்தவர் தலித் என்றால் ஒரு நீதி மற்றவர் என்றால் வேறொரு நீதி என்பதையும்
நாம் ஒப்புகொள்வதில்லை. சாலியமங்களம் கலைச்செல்வி என்ற 20 வயது தலித்
பெண் ஆதிக் கச் சாதியினரால் வன்புணர்ச்சிக்க
ு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிக்கிறாள். இது கண்டிக்கத்தக்கது.
ஆனால் இந்தச் செய்தியை எவிடென்ஸ் கதிர் எப்படி பதிவு செய்கிறார்
பாருங்கள்.
பெண் தோட்டி சமூகம் என்று குறிப்பிட்டு விடுகிறார். இச்செயலைச்
செய்தவர்கள் ஆதிக்கச் சாதியினர் என்று மட்டும் பதிவு செய்கிறார். கூடவே
அந்த ஊர் பூண்டி வாண்டையாரின் சொந்த ஊர் என்று கூடுதல் தகவலையும் பதிவு
செய்கிறார்.
இதைப் படித்தவுடன் என்ன தோன்றும்? வாண்டையாரின் சொந்த ஊர். அந்த ஊரில்
உள்ள ஆதிக்க சாதியினர் என்றவுடன் படிப்பவர்களுக்கு அவர்கள்
"முக்குலத்தோர் " பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்று
உடனடியாக எண்ணத் தோன்றும். அப்படித் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான்
அந்த ஊர் பூண்டி வாண்டையாரின் சொந்த ஊர் என்று திட்டமிட்டு பதிவு
செய்கிறார்.
ஆனால் அந்த இளைஞர்கள் இருவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்
இல்லை. ஒருவர் வெள்ளாளர். மற்றொருவர் ஆசாரி. அதனால் இவர்களின் சாதியைக்
குறிப்பிடாமல் பொதுவாக ஆதிக்க சாதி என்று மட்டும் பதிவு செய்வது
பொதுத்தளத்தில் முக்குலத்தோரை வன்முறையாளராக பதிவு செய்ய வேண்டும் என்ற
வக்கிரமன்றி வேறொன்றுமில்லை.
இதில் இவர் மறைத்து விட்ட செய்தியும் உண்டு. கலைச்செல்விக்கும் இதில்
சம்மந்தப்பட்ட வெள்ளாளர் பையனுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்திருக்கிறது.
அவனது அழைப்பின் பேரிலேயே கலைச்செல்வியும் சென்றிருக்கிறார். உடன் ஆசாரி
சமூகத்து நபரும் இருந்திருக்கிறா
ன். இருவரும் குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளனர். இந்தச் சூழலில்
நண்பருடைய தோழியான கலைச்செல்வியை உறவுக்கு ஆசாரி சமூக பையன்
அழைத்துள்ளான். இதைக் கலைச் செல்வி மறுத்துள்ளார். இதில் அவர் படுகொலை
செய்யப்படுகிறார்.
கலைச்செல்வியை படுகொலை செய்தவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்து சட்ட
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையெல்லாம் அறிக்கையில் திட்டமிட்டு எவிடென்ஸ் கதிர் மறைத்து விட்டு ஒரு
சாதிக்கு எதிரான படிமத்தை உருவாக்க முனைகிறார். கதிருக்கு ஒன்று சொல்ல
விரும்புகிறோம். எந்தச் சமூகத்தை வன்முறைச் சமூகமாக சித்தரிக்க
முயல்கிறாரோ அந்தச் சமூகத்தில் பிறந்தவர்கள் தான் தஞ்சையில் சவுக்கடி
சாணிப் பாலை ஒழித்துக்கட்டியவர்கள். சொந்தசாதிக்கு எதிராக பள்ளர்
பறையர்களை செங்கொடி இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைத்து
பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக அணிதிரட்டிப் போரடியவர்கள். எனவே எல்லா
சாதியிலும் கயவர்களும் காமுகர்களும் உண்டு. இவை ஒரு சாதிக்கு மட்டுமே
உரிய குணம் இல்லை. விழுப்புரம் நவீனாவைக் கொன்றது செந்தில் என்ற
ஆதிதிராவிட இளைஞன். இதற்காக அந்தச் சமூகம் முழுக்க குற்றச் சமூகமாக
கருதுவது மடமை. முட்டாள்தனம். இது எல்லாச் சாதியினருக்கும் பொருந்தும். .
எனவே நடந்த கொடுமைகளை குறிப்பிட்ட சமூகங்களின் மேல் ஏற்றிக் கூறுவது சமூக
நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சதியாகும். தெரிந்தோ தெரியாம லோ இந்தச்
சதி வேலையை எவிடென்ஸ் கதிர் கச்சிதமாகச் செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக