|
5/8/16
| |||
தமிழர் அரசு
# சேவியர்தனி_நாயகம்_அடிகள்
பிறந்த நாள் இன்று ஆகஸ்ட் 2- 1913
முதல் மேற்கத்திய அகரமுதலி (போர்த்துகீசியம்-தமிழ்) தனிநாயக அடிகளாரால்
தொகுக்கப்பட்டது.
அதில் எந்தப் பழைய தமிழனையும், தமிழ்க்குடியையும் 'low caste' என்று
குறிப்பிடவில்லை. ஆனால், பிற்காலத்தில் வந்த மேற்கத்தியரின் அகரமுதலிகள்
(காட்டு: Winslow; Fabricious) இந்த 'low caste' கோட்பாட்டை
எங்கேயிருந்து எப்படிக் கொண்டுவந்தார்கள் என்று புரிந்துகொள்வது நல்லது.
----------------------தனி நாயகம் அடிகள்
# உலகத்தமிழ்_மாநாடு
1963 ஆம் ஆண்டளவில் தமிழக அரசில்
எம். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசின் தமிழ்
வளர்ச்சிக் கழகத்தில் தனிநாயகம் அடிகளார் உலக நாடுகளில் உள்ள
தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து தமிழ்நாட்டில்
ஆண்டு தோறும் தமிழாராய்ச்சி மகாநாட்டினை நடத்தும் யோசனையை முன்வைத்தார்.
இதற்கான ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையினையும் தமிழக அரசு
மேற்கொள்ளவில்லை. இதனை அடுத்து இம்மாநாட்டினைத் தாமே முன்னின்று உலகளவிலே
நடத்த வேண்டும் என்ற உத்வேகம் கொண்டதனால் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
உருவானது
# தமிழின்_முதல்_அச்சுநூல் !
1556 ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism
(போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து)
"காட்டில்கா" (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது.
இதனை அடிகளார் 1950 ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578
இல் அச்சிடப்பெற்ற தம்பிரான் வணக்கம்
1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" . முதன் முதலாக அன்ரம் டீ
பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி
போன்றவற்றையும் கண்டெடுத்தார்.
அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி
மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக