செவ்வாய், 21 மார்ச், 2017

லியோ டால்ஸ்டாய் குறள் காந்தி கு கடிதம் திருக்குறள்

aathi tamil aathi1956@gmail.com

20/7/16
பெறுநர்: எனக்கு
Gowtham P
திருக்குறளிலிருந்து அகிம்சையை கற்றுகொண்ட காந்தி
காந்திக்கு டால்ஸ்டாய் அறிமுகப்படுத்திய திருக்குறள்:
லியோ டால்ஸ்டாய் (1828-1910) ருஷியாவின் பிரபல எழுத்தாளர். அவர் எழுதிய
சிறுகதைகளும், தத்துவங்கள் நிரம்பிய கட்டுரைகளும் காந்தியின் கவனத்தை
ஈர்த்தன. 1990 செப்டெம்பர் மாதத்தில் லண்டனில் வெளிவந்த இல்லஸ்ட்ரேட்டட்
நியூஸ் வீக்லி என்ற பத்திரிகையில் டால்ஸ்டாய் எழுதிய ’இந்துவுக்கு ஒரு
கடிதம்’ என்ற நீண்ட கட்டுரை காந்தியார் கவனத்துக்கு வந்தது.
டால்ஸ்டாய் அந்தக் கட்டுரையில் எழுதினார்: ஒரு வியாபாரக் குழு 20 கோடி
மக்கள் உள்ள ஒரு நாட்டை அடிமைப்படுத்தி விட்டது. என்ன நடந்தது என்றால்,
30,000 பேர் பலசாலிகளாக இல்லை, எலும்பும் தோலுமாக இருந்தவர்கள் 20 கோடி
மக்களை அடக்கிவிட்டார்கள் என்றால், அது இங்கிலீஷ்காரர்களின்
சாமர்த்தியமல்ல; இந்தியர்கள் தம்மையே அடிமையாக்கிக்கொண்ட நிலைமை தான்.
பிறகு டால்ஸ்டாய்க்கு காந்தியார் கடிதம் எழுதி அவரின் அனுமதியைப் பெற்று
கட்டுரையின் மொழிபெயர்ப்பை வெளியிட்டார். அதிலிருந்து டால்ஸ்டாயுடன்
காந்தி கடிதங்கள் மூலம் அவரின் கருத்துகளை அறிந்து கொண்டார். ஒரு
வன்முறையை எதிர்த்து நிற்க மற்றொரு வகை வன்முறையை மேற்கொள்ளாமல் அமைதியான
வகையில் செயல்படலாம் என்ற கோட்பாடு எப்படி டால்ஸ்டாய்க்கு வந்தது என்று
காந்தி வினவிய பொழுது, டால்ஸ்டாய் பதிலளித்தார், ’நான் திருக்குறளின்
மொழிபெயர்ப்பை படித்தபொழுது வள்ளுவர் எழுதிய இன்னா செய்யாமை என்ற
அதிகாரத்தில் உள்ள இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குறள் தந்த உணர்வுதான்’
என்று பதில் அனுப்பினாராம்.
அந்தக் குறளின் முழு வடிவம்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
இதன் பொருள் ’தனக்குத் துன்பம் கொடுத்தவரைத் தண்டிக்கும் முறையாவது, அவர்
வெட்கப்படும்படியான அளவுக்கு நல்ல நன்மைகளைச் செய்து அவர் செய்த
தீமையையும் தான் செய்த நன்மைகளையும் ஒருங்கே மறந்துவிடுதலாகும்’.
இதுபற்றி மகாத்மா காந்தி அவர்களே வெளிப்படையாகக் கூறினார்:
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை அதன் மொழியிலேயே படிக்கவேண்டும்
என்பதுதான் தமிழ்மொழியை நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததற்குக் காரணம். அந்த
நூலைப்போல் ஒழுக்க நெறிமுறைகளை மக்களுக்கு ஊட்டும் அறிவுக் களஞ்சியம்
வெறெதுவும் இருக்கமுடியாது.
தென்னாப்பிரிக்காவில் காந்தியார் வழிநின்று தமிழர்கள் அவருடைய
போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்ப் பெரும் புலவர் வள்ளுவர் வகுத்த
வழியிலேயே காந்தியார் தமது போராட்டங்களை நடத்தினார்..
முத்தமிழ் வேந்தன

Aathimoola Perumal Prakash
"a letter to hindu" ல் குறளை "hindu kural" என்று குறிப்பிட்டுள்ளார்.
hindu என்பதை இந்திய என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்.
விக்கிபீடியாவில் உள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/A_Letter_to_a_Hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக