செவ்வாய், 21 மார்ச், 2017

தோப்புக்கரணம் எப்படி யோகா ஓகம் அறிவியல் மருத்துவம்

aathi tamil aathi1956@gmail.com

20/7/16
பெறுநர்: எனக்கு
Anandan Rajagopalan
*தோப்புக்கரணம்*
தினமும் 3 நிமிடம்
தோப்புக்கரணம் உடலை
வலுவாக்கும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்
கிடைத்துவிடும்.
நமது முன்னோர்கள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.
தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்
பிடித்துக் கொள்கிறோம். காது
மடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள்
இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்
போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
செயல்படுவதற்கான தூண்டுதல்
கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,
ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை
அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட வேண்டும்.
வலது கை
விரல்களால் இடது காது மடல்களையும்,
இடது கை விரல்களால் வலது காது
மடல்களையும் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -
சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,
காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க
இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த
சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும்
ரத்த ஓட்டம் சீராகும்.
மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத்
தொடர்ந்து செய்தால் வேறு
எந்த உடற்பயிற்சியும் செய்ய
வேண்டியதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக