புதன், 22 மார்ச், 2017

கன்டெய்னர் ஜெயலலிதா ஜெ பணம் தேர்தல்

aathi tamil aathi1956@gmail.com

4/6/16
பெறுநர்: எனக்கு
From WhatsApp...
570 கோடி கண்டெய்னர்களுக்கு பின்னால்..... ஜெயா, மோடி & லக்கானியின்
கூட்டும், நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளும்... விடை தெரியாத
கேள்விகள்..
14.5.2016 சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு செங்கப்பள்ளி அருகே மூன்று
கண்டெய்னர்கள் பணத்துடன் பிடிபடுகின்றன!
சரியாக 18 மணி நேரம் கழித்து ஸ்டேட் பேங்க் அது தங்கள் பணம் என்று
சொந்தம் கொண்டாடுகிறது! அதற்கான சில ஆவணங்களையும் அது சமர்ப்பிக்கிறது!
அந்த ஆவணத்திலிருக்கும் தேதி கன்டெய்னர் லாரியின் எண் உட்பட பல விஷயங்கள்
ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன!
ரிசர்வ் வங்கி, தனக்கு இந்தப் பணப் பரிமாற்றம் பற்றி எந்தத் தகவலும்
இல்லை என்று கையை விரிக்கிறது!
நாட்டின் நிதி அமைச்சர் இரண்டு நாள் கழித்து அது ஸ்டேட் வங்கியின்
பணம்தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்! அவ்வளவுதான்!
அறிவு ஜீவிகள் எல்லோரும் இதைப்பற்றிக் கேள்வி கேட்பவர்களை எள்ளி நகையாடுகிறார்கள்!
வழக்கம்போல் கேள்வி கேட்பவன் முட்டாள் என்றும், வேறு வேலை இல்லாதவன்
என்றும் ஒருமனதாகத் தீர்மானிக்கப் படுகிறது! சுபம்!
அப்படி முத்திரை குத்தப்பட்ட ஒரு முட்டாளின் சந்தேகங்களில் மிகச் சில!
1. செங்கப்பள்ளி, கண்டெய்னர் புறப்பட்டதாகச் சொல்லப்படும் கோவையிலிருந்து
முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது! லாரிகள் ஒரு மணிக்கு செங்கப்பள்ளி
வருகின்றது என்றால், கோவையிலிருந்து அதிகபட்சம் நள்ளிரவு 12 மணிக்குப்
புறப்பட்டிருக்கவேண்டும்! கோவையில் வங்கிப் பெட்டகம் நள்ளிரவு வரை
திறந்திருக்குமா? அப்படித் திறந்திருக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறதா?
2. விடிந்தால் சனிக்கிழமை, அடுத்தநாள் ஞாயிறு, இரண்டு நாட்களும்
வங்கிகளுக்கு விடுமுறை! அந்தக் கண்டெய்னர்கள் எந்த நாளில் அந்தப் பணத்தை
எந்த வங்கியில் கொண்டுபோய் ஒப்படைக்கும்?
அதற்கும் ஆர் பி ஐ அனுமதி அளித்திருக்கிறதா?
3. வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்லவேண்டிய வாகனங்களுக்கு சில
கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன! அதன்படி அந்த வண்டிகளில்
GPS பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டனவா?
4. அந்த பரிமாற்றத்துக்கான இன்ஸ்யூரன்ஸ் ஆவணங்கள் எங்கே?
5. இவ்வளவு பெரிய தொகை பரிமாற்றம் பற்றி நெறிமுறைகளின்படி உள்ளூர்
காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டத
ா?
6. வழியிலிருக்கும் டோல்கேட்டை த் தவிர்ப்பதற்காக அந்த வண்டிகள் மாற்றுப்
பாதையில் சென்றதாக அறிவித்திருக்கிறார்கள்! அந்த மாற்றுப்பாதை, ஆள்
நடமாட்டமற்ற வயல்வெளிகளிடையே சுமார் பத்து கிலோமீட்டர் வரை சுற்றிச்
செல்ல வேண்டும்.
ஒரு பொதுத்துறை வங்கியின் 570 கோடி ரூபாயை எடுத்துச் செல்லும் வண்டிகள்
ஒரு 350 ரூபாய் சுங்கவரி செலுத்தப் பயந்துகொண்டு ஆள் நடமாட்டமில்லாத
பாதையில் செல்ல முடிவெடுத்தது எந்தவகையான சிக்கன நடவடிக்கை அல்லது
முட்டாள்தனமான ரிஸ்க்? இதை யார் அனுமதித்தது?
7. தேர்தல் அதிகாரிகளை அடையாளம் தெரியாமல் கொள்ளையர்கள் என்று நினைத்து
நிற்காமல் விரைந்துபோனதாகச் சொல்லியிருக்கும் வண்டியின்
பாதுகாவலர்களுக்கு சக போலீஸ்காரர்களை அடையாளம் தெரியவில்லை என்றே ஒரு
பேச்சுக்கு வைத்துக்கொண்டால
ும், அவர்களின் ஆயுதங்களும் பயந்து பதுங்கிக்கொண்டனவா?
8. கொள்ளையர்களுக்கு பயந்து செல்பவர்கள் ஆள் நடமாட்டமில்லாத பாதையைத்
தேர்ந்தெடுப்பார்களா, நடமாட்டம் மிக்க ஹைவேயைத் தேர்ந்தெடுப்பார்களா?
9. விதிமுறைப்படி GPS கண்காணிப்பில் இருக்கும் வாகனங்கள் மாற்றுப்பாதையை
எந்த தைரியத்தில் தேர்ந்தெடுத்தன? அது எப்படி கண்காணிப்பில்
கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது?
10. தகவல் பரிமாற்றத்துக்க
ு இவ்வளவு வழிமுறைகள் இருக்கும் காலகட்டத்தில் 18 மணிநேரம் எதற்காகத்
தேவைப்பட்டது? தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவா?
11. ரிசர்வ் வங்கி மண்டல அதிகாரி இந்தப் பரிமாற்றம் தங்களுக்குத்
தெரியாமல் நடந்ததாகச் சொன்ன காரணம் என்ன?
12. இவ்வளவு பெரிய தொகை ஆர் பி ஐக்குத் தெரியாமலே பரிமாற்றம்
செய்யப்பட்டதா? அப்படியெனில் அதற்கு அனுமதி அளித்தவர் யார்?
13. எல்லா விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு இவ்வளவு அலட்சியமாக
இந்தத் தொகைப் பரிமாற்றம் செய்யப்பட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்பது
அதிகாரிகளுக்குத் தெரியாதா? தாங்கள் பணிநீக்கம், கைது, செய்யப்படுமளவு
ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க அவர்களைத் தூண்டியது யார், அல்லது எது?
14. சாதாரண நேரத்திலேயே கடும் விதிமுறைகளுக்கு உட்பட்ட பணப் பரிவர்த்தனை
தேர்தல்கால விதிமுறைகள் கடுமையாக அமலில் இருக்கும்போது
தீவிரமாக்கப்படுமா, அலட்சியப்படுத்தப்படுமா?
15. ஒரு சாதாரண தனி மனிதன் 50000 ரூபாய் கொண்டுசெல்லவே முறையான ஆவணங்கள்
தேவைப்படும் காலத்தில், மாநிலம் விட்டு மாநிலம் நள்ளிரவில் செல்லும்
வங்கிப்பணம் ஆவணங்களே இல்லாமல் நள்ளிரவில் அனுப்பப்படுமா?
16. இத்தனை விதி மீறல்களோடு விடுமுறை நாளில் பணத்தை எடுத்துச் செல்ல
அனுமதி அளித்ததற்கு எந்தப் புண்ணியவான் பொறுப்பேற்றுக்கொண்டார்?
17. இந்திய நிதி அமைச்சர் இதில் எல்லோருக்கும் முந்திக்கொண்டு துள்ளிக்
குதிக்கும்போது, சம்பந்தப்பட்ட வங்கி, ஆர் பி ஐ உயர் அதிகாரிகள் துறை
ரீதியான நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறா
ர்கள்?
18. இந்த அப்பட்டமான விதிமீறல்களை மத்திய நிதி அமைச்சர் அங்கீகரிக்கிறாரா?
19. 570 கோடி ரூபாய்க்கு மூன்று கண்டெய்னர் தேவையா?
அப்படியானால் அதன் டினாமிநேஷன் அனுப்பிய பெட்டகத்தின் லெட்ஜர்களில்
இருந்து கொடுக்கப்பட்டதா?
20. உள்ளூர் வங்கிகளுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனையின்போதே சீல்
செய்து அனுப்பப்படுகையில் இத்தனை கோடி வங்கிப்பணம் அனுப்பப்பட்ட
வாகனங்கள் ஒரு சாதாரணப் பூட்டால்தான் பூட்டப்படுமா?
இவை வெறும் அடிப்படைக்கேள்வ
ிகள்!
இவற்றுக்கான பதில்கிடைக்குமா
னால் இன்னும் சிலசந்தேகங்களைக் கேட்போம்!
நாம் வெறும் கேள்வி கேட்கும் முட்டாள்கள்தானே!
கடைசியாக ஒரு சின்ன வேண்டுகோள்!
அறிவுசார் பொதுத்துறை வங்கி அதிகாரிகளே, அந்தப் பணம் யாருடையதென்று
அரசியல்வியாதிகள் அவர்களுக்குள் அடித்துக்கொள்ளட்டும்! அவர்கள் வீசும்
எலும்புகள் உங்கள் மாண்பைக் குலைக்காது காத்துக்கொள்ளுங
்கள்!
N.B:
வங்கிகளிடையேயான பண பரிமாற்றத்துக்கான சில RBI விதிமுறைகள்:
1. In case of any movements of large amounts of cash report to the
superiors and the nearest police station/Police Control Room.
2. While organizing movement of cash between branches, (currency chest
or other branches) planning should be done by bank officials in
consultation with security/police officers.
3. Avoid taxies or other hired vehicles and use own transport as far
as possible, with facilities like proper cavity and it should be
properly camouflaged.
4. The armed guards/police guards accompanying the treasure should
always be in ready position and should not be taken by surprise.
5. It may be ensure that cash cages are fitted with grilles/wire-mesh
nets with automatic locks.
6. Security Van Layout: Typical van layout should conform to the
following standards:
• Make : LMV (Light Motor Vehicle) or any other vehicle of similar
type. • Van should have 3 independent compartments. The compartment
for storing cash to be physically separated and locked from the other
compartments.
Security: Vehicles should adhere to the following minimum security
guidelines to ensure safe passage of cash and other valuables:
• Monitoring: Each van should be monitored at all time through a
communications protocol. The van should have a GPS installed and also
the controlling technology for immobilizing the van whenever required.
• Cash Security: The cash compartment must be specially reinforced
with steel, with only one door and should be inaccessible from outside
the van unless operated internally by the custodians through
levers/controls.
Each of the cash boxes must be secured to the floor with separate
chains and should have 2 padlocks that can be opened or locked only by
using separate keys available with different custodians.
Cash for each bank should be carried in a separate box with the name
of the bank written on it.
• Incident security: Vans should be equipped with hooters, fire
extinguishers etc for quick reaction in case of an attack.
• Armed security guards/Gunmen: One or more armed guard depending on
the amount of cash carried and as per individual company’s insurance
guidelines/ client contract.
• Minimum cash carrying guideline: Security vans should compulsorily
be deployed for carrying cash of value more than Rs. 20 lakhs per
trip.
• Maximum cash carrying guideline: Security vans should not carry more
than Rs. 5 crores per trip.
. Size of the crew for the security van • Driver – 1
• Armed Security guards – 1 or 2 depending on cash carrying limit.
• ATM Officer / Custodians – 2
Weapons • Single/double barrel guns to be used under valid licenses.
உப்பு போட்டு சாப்ட்ர எவனோ இல்லாமலா போய்டுவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக