செவ்வாய், 21 மார்ச், 2017

ரஜினிகாந்த் கெய்க்வாட் விமர்சனம் மராத்தியர் மராட்டி வந்தேறி

aathi tamil aathi1956@gmail.com

23/7/16
பெறுநர்: எனக்கு
இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல!!!

ரஜினி அவர்கள் பொதுவாக வெளியே வரும் போது ஒரு வெள்ளை சட்டை, வேட்டி
முகத்தில் தாடியுடன் சன்யாசி போல எளிமையாக வருவது அனைவருக்கும்
பிடிக்கும். ஆனால் கபாலி படத்தின் பட்ஜெட்? சுமார் 100 கோடிக்கு மேல்!!!
சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் மட்டும் 20 கோடிக்கு மேல் மற்றும் லாபத்தில்
பங்கு வேறு!!
இவ்வளவு எளிமையான மனிதருக்கு எதற்கு இவ்வளவு பணம்?  அப்போ அந்த எளிமை
மக்களை ஏமாற்றும் நாடகமோ??

ரஜினி சொத்து மதிப்பு எவ்ளவு தெரியுமா சுமார் சுமார் 10,000 கோடி!!
நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி நடத்தி வருகிறார்

ரஜினி என்னும் மகா அரசியல்வாதி செய்தது என்ன?

2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில்
வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்.

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி
பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை
நான் நிச்சியமாக எழுதவில்லை.

உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால்,
ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில்
தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து.

“ஆறிலிருந்து அறுபது வரை”, “ஜானி” போன்ற படங்களில் உங்களது நடிப்பை
பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும்
உங்கள் ரசிகன் நான். “எந்திரன்” னிலும் உங்கள் நடிப்பு அருமை. லிங்கா
படம் ஏன் ஓடவில்லை கதை சரியில்லாதது மட்டுமல்ல உங்கள் சுயரூபம்
அறிந்ததால் பல ரசிகர்கள் படம் பாா்பதை தவிர்த்துவிட்டனர் என்பது தான்
உண்மை!

உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை
நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை
கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக
கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு.
நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு
விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.

ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும்
உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்..

ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும்
நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து
கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு
மிகபொருத்தமானவர்தான் நீங்கள். “சூப்பர் ஸ்டார்” என்று உங்கள் இடத்தில்
இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை.

என்னுடைய கேள்வி இதுதான்….நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும்
கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு,
தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன?

நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு
கூட்டம்போட்டு, ‘பகுத்தறிவாளர்கள்’ என்ற பெயரில் கடவுளை கூட
கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான
உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா?

ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி
கேள்வி கேட்க காரணமே …சாட்சாத் நீங்கள்தான்.
“அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா” என்று எங்களை நோக்கி
கை நீட்டியவர் நீங்கள்தான்.

நீங்களே கதை,வசனம் எழுதிய “பாபா” படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட
பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை
சொன்னது நீங்கள்தான்.

கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு
செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு
செய்கிறார்.
நேற்று வந்த நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி, ஏராளமான ஏழை
மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். நடிகர் விஜய், நிறைய
கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா
கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம்
வருகிறார்.

ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த
சமுக பங்களிப்புகள் என்ன?

“நான் ஆன்மிகவாதி”, “தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்”, “இமயமலையை
விரும்பும் பற்றில்லாதவன்” என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண
மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி
கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே
அந்த ‘இமயமலை’ அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா.

“இமயமலை”யை விரும்புகிறவர்,  ஹலோ ரஜினி sir. உங்கள் கபாலி படடிக்கட்
200,300,400,500,1000 ஓவாயாம்ல ஏரியாவ பொறுத்து  ஆமா நான் தெரியாமத்தேன்
கேக்கன் நாங்கள் உங்கள் படத்த பார்க்க ஆரம்பிக்கும்போது 1.50 ₹ ஓவாதேன்
கொடுத்தோம் ஆனா இப்ப கபாலிக்கு எதுக்கு 500,1000 ₹ ஓவா கொடுக்கோனும்
போனவரியம்தேன் ஒங்க ஊர்ல வெள்ளம் வந்திச்சி அதுக்கு நிவாரணம் எத்தனை ஓ வா
கொடுத்தீக நீங்கள்  நான் 12 சம்பாதிக்கேன் 700₹ஓவா கொடுத்தேன் நீங்கள்
செய்தது என்னவோ? ! ஆனால் கபாலி படசம்பளம் 25 கோடி ஓவானு பேசிக்கிடுதாக
நாங்க எதுக்காக 500₹ ஓவா கொடுத்து உங்கள் படத்தே பாக்கோ னும் முகநூலில்
உதவிக்கரம் நீட்டும் எத்தனையோ குரூப் கள் உள்ளன அதற்கு உதவிட்டு போறோம்
போய்யா நீயும் உன் கபாலியும்  ஒரு காலத்துல நீங்கள் என்ன கஷ்டத்துல
இருந்தீகளோ ஸ்ரீதேவி உங்கள் முகத்துல காரிதுப்புறமாதிரி சீனுல நடிச்சீக
அந்த கருமத்தயும் பாத்திருக்கோம் உங்கள் ரசிகன் என்று  ஜொள்ளவே கேவலமா
இருக்கு  அதனால அரசு நிர்னயித்த ரேட்டுல டிக்கட் வித்தாக்கா பாக்கோம்
இல்லே டவுன்லோடுதேன் மோனே கேட்டோ ஹாஹாஹாஹா ஞங்களும் நாலு பாஷை அறியானல்லே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக