|
27/11/16
| |||
பொன்னேர் உழுதல் என்பது பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து
செய்யும் உழவு முறையாகும். [1] இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில்
இருந்துவருவதை அகநானூற்று பாடல்கள் வாயிலாக அறியலாம். [2] இதை
இளங்கோவடிகள் ஏர்மங்கலம் எனக் குறிப்பிடுகிறார். [3] முதன் முதலாக ஒரு
நிலப்பகுதியில் நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர்
பூட்டல் என்பர்.
இன்கா நாகரிகம்
இன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது
தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையே பயன்படுத்துவார்.
[4]
மகதம்
பண்டை மகதநாட்டு ஊர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன்
பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர்
பின்வர, ஒரு படைச்சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுகிறது. [5]
மேற்கோள்கள்
1. ↑ சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலியின் இணையப்பக்கம்
2. ↑ கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; - அகம் - 1
பொன்னேர் பசலை பாவின்று மன்னே! அகம் - 172
பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி
நல்மா மேனி தொலைதல் நோக்கி, அகம் - 229
3. ↑ http://www.tamilvu.org/ courses/degree/p103/p1033/ html/p103325.htm
4. ↑ நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா
அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History
5. ↑ தமிழர் வரலாறு-1, பாவாணர்
மேலும் பார்க்க
இன்கா வேளாண்மை

3. ↑ http://www.tamilvu.org/
4. ↑ நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா
அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History
5. ↑ தமிழர் வரலாறு-1, பாவாணர்
மேலும் பார்க்க
இன்கா வேளாண்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக