செவ்வாய், 21 மார்ச், 2017

நவீனா வன்னியர் நாடகக்காதல் 15 வயது

aathi tamil aathi1956@gmail.com

5/8/16
பெறுநர்: எனக்கு
வினோத் சுந்தரம் , 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — மணிகண்டன் மா.பா
மற்றும் 47 பேர் உடன்.
நவீனா பேசுகிறேன் !!!
வணக்கம் தமிழ் சொந்தங்களே!!! பெரியாரிய முற்போக்குவாதிக
ளே!!! சமூக பிரச்சனைக்கு முதல் குரலான ஊடக அறிவுஜிவிகளே!!!
நான் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பானலும் அழகான
வாழக்கையை 13 வயது வரை வாழ்ந்து வந்தேன்.அனைத்து குழந்தைகளுக்கு
கிடைக்கும் ஆரம்ப கல்வி வாழ்க்கையை மட்டுமே சந்தோசமாக வாழ்ந்தேன்.அதன்
பின் குழந்தை வாழ்க்கையை கூட என்னை வாழவிடாமல் பறித்து கொண்டு மற்றவர்கள்
புரட்சிக்கு விளையாட்டுகளமாய் என்னை மாற்றி கொண்டார்கள்.
மிருகத்தின் படியில் நான் :-
------------------------------------------------------
எனது 14 வயதில் எனது சகதோழிகளோட சந்தோசமாக பள்ளிகூடம் சென்று கொண்டிருந்த
என்னை ஏற்கனவே ஒரு பெண்ணை சிதைக்க முயன்று இரண்டாண்டு சிறையில் இருந்த
மிருகம் சீண்ட தொடங்கியது.அந்த மிருகத்தால் என் படிப்பு தடைபட்டது.
தீடிரென ஒரு நாள் அந்த மிருகம் போதையில் தனது கை காலை இழந்தற்காக என்
மீதும் என் குடும்பத்தின் மீதும் வழக்கு தொடுத்து ஏழை குடும்பமான எங்களை
போலீஸ் ஸ்டேசனை அழைய வைத்தது. வெறும் 15 வயதான எனக்கு சக தோழிகள் எல்லாம்
விளையாடி கொண்டிருக்கும் போது நான் மட்டும் என்னை பாவம் செய்தேன்.
குடும்பமே போலீஸ் ஸ்டேசன் வரை அழைக்கிழிக்கபட்டு முதல் கொடூரத்தை
சந்தித்தேன்.
தொலைக்காட்சியில் முதல் கொலை:-
------------------------------------------------------------
----
பின் தீடிரென ஒருநாள் டிவியில் என்னை பற்றிய விவாத்ததை என் கருத்தை
கேட்காமலே ஒன்றரை மணி நேரம் ஒரு தொலைக்காட்சியில் பேசி என்னையும் என்
குடும்பத்தையும் கண்டபடி மோசமாக நெறியாளர்(??? உண்மையில் நெறி இருந்ததா)
"குணசேகரன" மற்றும் பெண் விடுதலை பேசிய பெரியாரின் வழி வந்த "சுப.வீ"
பேசி எங்கள் குடும்பத்தையே அனைத்து மக்கள் கண் முண்ணும் "ஊடக கொலை"
செய்தனர்...
அந்த நாளை போல் ஒரு கொடூரமான நாளை (தீயில் இறந்த இந்த நாளைவிட) என் மனம்
உணர்ந்ததில்லை.எப்படி ஒரு தப்புமே பண்ணாத வெறும் 15 வயதான என்னையும் என்
குடும்பத்தையும் மிக மோசனமாவர்களாகவும், சிறுமிக்கு வன்கொடுமை கொடுத்த
அந்த மிருகத்தை தியாகியாகியும் புரட்சியாக பேசி முடியும்?
அந்த நாளின் ரணத்தை என் நிலையில் சில நொடிகள் யோசித்தால் புரியும்.
உண்மையில் என்னை அன்றே குணசேகரன், சுப.வீ போன்றவர்கள் என்னை "முதல் கொலை"
செய்துவிட்டார்னர்.
இரண்டாம் முறை:
-----------------------------------------------------
இவர்கள் புரட்சி பேசி விளையாட என் 15 வயது வாழ்க்கை தான் கிடைத்ததா???
இவர்கள் கொடுத்த ஊக்கத்தில் அந்த மிருகம் இன்று என் உடலை மட்டும் எரித்து
கொன்றுள்ளது. என் கனவுகளையும் வாழக்கையையும் "குணசேகரன் " ," சுப.வீ"
போன்றவர்கள் ஏற்கனவே கொன்றதால் இந்த வலி பெரிதாக இல்லை.
எனினும் என்னிடம் மூன்று கேள்விகள் மட்டுமே குணாவிற்கு இருக்கிறது...
1) அன்று அந்த மிருகம் தாழ்த்தப்பட்டவன் என்று சொன்னதை வைத்து சமூக
பிரச்சனையாக கருதி 4 பேரை கூட்டி விவாதமாக்கினீர்களே....
தாழ்த்தப்பட்டவன் என்ற இமேஜை கொண்ட மிருகங்களினாலும் , சில சாதிகள்
என்றாலே தவறு என முன்முடிவு கொண்ட முற்போக்குவாதிகளும் , எந்தவித
நெறியுமே இல்லாத ஊடக நெறியாளர்களால் "நவீனாக்கல் இறக்க வேண்டுமா" என சமூக
பிரச்சனை விவாதம் நடத்துவது தானே நேர்மையானதாக இருக்கும். அப்படி
நடத்துவதை எது தடுத்தது???? உண்மையில் இதுவே இந்த சமூகத்தின் மிகபெரிய
பிரச்சனை. இதை பேசாமல் எளிதில் கடந்து சென்றால் உங்கள் குழந்தை
நவீனாக்களுக்கும் என் கதி தான்.
2) குணாவின் வருத்த அறிக்கையை இன்று படிக்க நேர்ந்தது. அதில் அவர் அந்த
விவாதத்தில் கலந்து கொண்டதே தெரியாமல் நடந்த விபத்து என கூறியுள்ளார்.
அன்று தான் தெரியாமல் தவறு செய்துவிட்டார் என்றாலும் விகடன், காவல் துறை
விசாரனை, மார்க்ஸின் உண்மை அறியும் அறிக்கைகள் எல்லாம் வந்து , அந்த
மிருகம் தான் பொய் குற்றச்சாட்டை கூறியுள்ளது என தெரிந்தும், அதன்பிறகு
ஒரு வாரம் கழித்தும் திரு.குணா அவர்கள் முக பக்கத்தில் அந்த மிருகத்திறகு
ஆதரவாக தானே பதிவு செய்தார். அது எப்படி என் வாழ்க்கையில் மட்டும்
தெரியாமல் விபத்தை தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்வார்.. இதை யார்
கேட்பது??
3) என்னை தீக்கிறையாக்கி நாலு நாள் உயிருக்கு போராடி வந்தேன். இந்த
நிகழ்வு குணாவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். என் கதிக்கு நீங்களும்
காரணமென உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
இருந்தும் நான் செத்தால் தான் வாய் திறப்பேன் என ஏன் வாய் மூடி
இருந்தீர்கள்???? ஏன் உங்கள் தொலைகாட்சியில் ஒரு செய்தியாக கூட
போடவில்லை...
என் மீது தவறே இல்லாத போது செய்தியாக போட்டு என்னையும் குடும்பத்தையும்
ஊடக கொலை செய்தீர்கள் . இப்போது உங்கள் தவறினால் நான் இறந்ததை ஒரு
செய்தியாக கூட போடமாட்டேன் என்பது தான் உங்கள் நடுநிலையா????
தமிழ் சமூகங்களே, முற்போக்குவாதிகளே, ஊடகவியலாளர்களே இன்னொரு நவீனா
உருவாகமல் பார்த்து கொள்ளுங்கள்!!!!!!
நன்றி!!!!!!!!
# justice4naveena
நன்றி : @மேட்டூர் ராஜேஷ்
நேற்று 02:28 PM மணிக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக