ஞாயிறு, 19 மார்ச், 2017

குறத்தி கொடிச்சி ஒரே பொருள் குறவர்

aathi tamil aathi1956@gmail.com

27/11/16
பெறுநர்: எனக்கு
நாஞ்சில் வேடுவன் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் —
ஆதிக்குடியோன் ஆதிக்குடியோன் மற்றும் 23 பேர் உடன்.
குறவர் மகளிரேம்; குன்றுகெழு கொடிச்சியேம் (நற். 276:4) கொடிச்சி யார்?
சங்கப் பாடல்களில் கொடிச்சி, கொடிச்சியர் என்றாயிரு சொல்லாட்சிகள்
காணப்பெறுகின்றன. அவற்றிற்கு உரையாசிரியர்கள் கொடிச்சி, குறப்பெண்,
குறமகளிர், குறிஞ்சிநிலப் பெண் என்பதாகப் பொருளமைவு கொண்டுள்ளனர். அகர
முதலிகளோ குறத்தி, கொடிச்சி, இடைச்சி முதலிய பல்வேறு பொருள்கள் தந்து
விளக்கம் அளித்துள்ளன. எனவே, ஈண்டுக் கொடிச்சி என்பதற்குக் குறிஞ்சிநிலப்
பெண் பெயரா? அல்லது முல்லைநிலப் பெண் பெயரா? என ஆராயப்பெறுகின்றது.
அகரமுதலிகளில் கொடிச்சி
பதிப்பாசிரியர் வீ.சொக்கலிங்கம் அவர்கள் சேந்தன் திவாகரம், பிங்கலம்,
சூடாமணி, கயாதரன் ஆகிய நிகண்டுகளின் பொருண்மைகளை ‘ஆசிரிய நிகண்டு’ எனும்
தலைப்பின்கீழ்ப் பதிப்பித்துள்ளார். அதனுள், கொடிச்சி என்பதற்கு, சே.
கொடிச்சியர், குறத்தியர், குறிஞ்சி நிலப்பெண்; பி: குறத்தியர்,
கொடிச்சியர், மறத்தியர்; சூ: குறத்தி, கொடிச்சி; க: கொடிச்சி, குறத்தி,
தலைமகள் (1975:205) எனப் பொருளமைவுகள் உள்ளன.
‘கொடிச்சி’ என்பதற்கு அகராதிகள் பல்வேறு பொருண்மைகளைச் சுட்டியுள்ளன. அவை
வருமாறு: தமிழ் அகராதியில் (Tamil Lexicon), குறிஞ்சி நிலப்பெண் (Woman
of the hilly tract); காமாட்சிப்புல் (citronella grass); கொடிறு (Jaws)
(ப.1134) என்பதாகவும்; நா.கதிரைவேற்பிள
்ளையின் தமிழ்மொழியகராதி, மதுரைத் தமிழ்ப் பேரகராதி, இலக்கியச்
சொல்லகராதி, யாழ்ப்பாண அகராதி, மெய்யப்பன் தமிழ் அகராதி,
தமிழ்ப்பேரகராதி, கழகத் தமிழ் அகராதி, இருபதாம் நூற்றாண்டுத்
தமிழ்மொழியகராதி முதலியன, இடைச்சி, காவாட்டம்புல், சித்திரமூலம்,
புற்றாஞ்சோறு, குறிஞ்சி நிலத்துப் பெண், கொடுவேலி, காமாட்சிப்புல்,
கொடிறு, கன்னம், கொடிவேலி, குறத்தி, குறிஞ்சிப்பெண் என்பதாகவும்;
பவானந்தர் தமிழ்ச்சொல்லகராதியில், குறத்தி, இடைச்சி (ப.163) என்பதாகவும்;
நர்மதாவின் தமிழ் அகராதியில், மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி
நிலத்துப்பெண் (Woman of the hilly tract) (ப. 311) என்பதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுகாறும், நிகண்டுகள் அளவில் கொடிச்சி என்பதற்கு குறிஞ்சிநிலப்
பெண்டிரைத்தான் குறித்து நின்றதென்பது வெளிப்படை. அதன்பின் தோற்றம் பெற்ற
அகராதிகளில் சிற்சில குழப்பங்கள் நிகழ்ந்தேறியுள்ளன. அவை, குறத்தி,
இடைச்சி என்பதாகும். கொடிச்சி என்பதற்கு, நிலப்பொருண்மை அடிப்படையில்
குறப்பெண்டிரைக் குறித்ததா? அல்லது இடைப்பெண்டிரைக் குறித்ததா? என்பது
ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது. இதனை விளக்கும் பொருட்டுச் சங்கப்
பாடல்களின் பொருளமைவுகள் உட்படுத்தப்பெற்றுள்ளன.
அக இலக்கணங்களில் கொடிச்சி
தொல்காப்பியத்தில், ‘கொடிச்சி, இடைச்சி’ பற்றிய குறிப்புகள் இல்லை.
பின்பு தோன்றிய நம்பியகப்பொருளில் அச்சொல்லாட்சியைக் காணமுடிகின்றது.
உரையாசிரியர் கார.கோவிந்தசாமி முதலியார் அவர்கள் நம்பியகப்பொருளில்,
குறிஞ்சிநிலக் கருப்பொருள் பற்றிக் குறிப்பிடுகையில்,
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர்
என்பதாகக் (ப.19) குறிப்பிட்டுள்ளார். இதனுள், ‘குறத்தி, கொடிச்சி,
குறத்தியர்’ ஆகிய சொல்லாட்சிகள் இடம்பெற்றுள்ளன. இச்சொல்லாட்சிகள்
வெவ்வேறு பொருண்மைகளைத் தந்துள்ளன. இருப்பினும் குறிஞ்சி நிலவாழ்
தலைவியைக் குறித்து வந்துள்ளது. மேலும், முல்லைக் கருப்பொருள் பற்றிக்
குறிப்பிடுகையில்,
இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர்
என்பதாகக் (ப.21) குறிப்பிட்டுள்ளார். இதனுள், ‘இடைச்சி’ முல்லை நிலவாழ்
தலைவியைக் குறித்தது. இவ்விரு சான்றுகளும் ஈண்டு நோக்கத்தக்கவை. சங்க
இலக்கியங்களுக்குப்பின் தோன்றிய அக இலக்கணத்தில் ‘இடைச்சி, கொடிச்சி’
ஆகியன வெவ்வேறு பொருண்மையுடைத்த
ு எனப்பட்டுள்ளது. அதன்பின் அகராதிகள், ‘குறத்தி, இடைச்சி’ ஆகியன ஒரு
பொருண்மையுடைத்த
ு என்றமையால் ஆய்விற்குரியதாக அமைகின்றது.
சங்கப்பாடல்களில் கொடிச்சி
கொடிச்சி என்பதற்கு அகராதிகள் தரும் பொருண்மைகளுள் ‘குறத்தி, இடைச்சி’
என்பவை ஒருநிலைத் தன்மை வாய்ந்தவை. பிற பொருண்மைகள் தன்மை நோக்கில்
பிறிதொரு வகைப்பாட்டிற்கு
ரியவை; பிற்கால வழக்கிற்குரியவை. எனவே, அவை ஈண்டு ஆய்விற்கு உட்படுத்தப்
பெறவில்லை. மாறாக, ‘குறத்தி, இடைச்சி’ என்னும் இரு சொல்லாட்சிகள் மட்டுமே
ஈண்டு ஆய்வுக்கு உட்படுத்தப் பெறுகின்றன. ‘கொடிச்சி’ என்பதற்குச் சரியான
பொருண்மையைச் சங்கப்பாடல்கள்வ
ழி ஈண்டுத் தெளிவுபடுத்தப் பெறுவதாக அமைகின்றது.
‘கொடிச்சி’ எனும் சொல்லாட்சி சங்கப்பாடல்களில் முப்பது இடங்களில்
அமைந்துள்ளது, அவற்றுள் குறுந்தொகையில் ஆறு இடங்களிலும், நற்றிணையில்
பத்து இடங்களிலும், ஐங்குறுநூற்றில் பன்னிரு இடங்களிலும், அகநானூற்றில்
இரண்டு இடங்களிலும் சுட்டப்பெற்றுள்ளன. அவற்றைப் பின்வருமாறு
விளக்கப்பெறுகிறது.
நற்றிணையில் கொடிச்சி
நற்றிணையில் பத்துப் பாடல்களில் (22:1, 82:2, 85:9, 95:8–9, 134:4,
204:11, 276:4, 306:3, 373:3, 379:5) ‘கொடிச்சி’ எனும் சொல்லாட்சி
காணப்பெறுகின்றது. அப்பத்துப் பாடல்களிலும் கொடிச்சி என்பதற்குக்
‘கொடிச்சி’ என்றே பொருண்மை கொள்கின்றார் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர்.
குறிஞ்சிநிலப்பெண் என்றோ அல்லது குறமகள், குறத்தி என்றோ
சுட்டப்பெறவில்லை. குறிஞ்சிநிலப் பாடல்களில் இவை அமைந்துள்ளமையாலும்
கொடிச்சி எனப்பட்டுள்ளது. ஆதலின், குறிஞ்சி நிலத்தலைமகளைச் சுட்டிற்று
எனலாம். சான்றாக,
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை (நற். 22:1)
எனும் நற்றிணை அடிக்கு உரையாசிரியர் பின்னத்தூரார் தரும் விளக்கமாவது,
மலைப்பக்கத்திற் கொடிச்சியாற் காக்கப்படும் பசிய தினைப்பயிரில் முதலிலே
பறித்து முற்றிய பெருங்கதிர்களைக் கொய்து கொண்ட மந்தி (ப. 27)
என்பதாகும். இதனுள் குறிஞ்சிநிலப் பொருண்மையே காணப்பெறுகின்றது. மேலும்,
குறவர் மகளிரேம்; குன்றுகெழு கொடிச்சியேம் (நற். 276:4)
எனும் பாடலடிக்கு இரா.சாரங்கபாணி சுட்டும் விளக்கமாவது, யாம் குறவர்
மகளிரேம்; குன்றுகெழு கொடிச்சியேம்; எம்மூர் இம்மலையினகத்து; நீ நின் ஊர்
செல்லாது எம்மூரை யடைந்து கள்மாந்தி வேங்கை மூன்றிலிற் குரவையும் கண்டு
செல்வாயாக எனத்தோழி தலைவனிடம் கூறினாள் (சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்
2, ப.52) என்பதாகும். இவ்விளக்கமும் நிலப்பொருண்மையைச் சுட்டுபவையாகும்.
குறுந்தொகையில் கொடிச்சி
‘கொடிச்சி’ என்பதற்குக் குறுந்தொகையில் ஈரிடங்களில் (286:4, 335:7)
‘குறிஞ்சிநிலமகள்’ என்பதாகவும், மூவிடங்களில் (214:3, 272:8, 291:2)
‘தலைவி’ என்பதாகவும், ஓரிடத்தில் (360:6) ‘குறமகள்’ என்பதாகவும்
பொருளுரைப்பதாக உ.வே.சா. குறிப்பிடுவார். ஈண்டு அனைத்துப் பொருண்மைகளும்
குறிஞ்சிநிலத் தலைமகளைக் குறித்தே நிற்கின்றன. சான்றாக,
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே (குறுந். 360:6)
எனும் பாடலடிக்கு உரையாசிரியர் உ.வே.சா. தரும் விளக்கமாவது, குறமகளின்
கையிலுள்ள குளிரென்னும் கருவி (ப.832) என்பதாகும். இப்பொருண்மை குறிஞ்சி
நிலமகளைக் குறித்தே நின்றது என்பது வெள்ளிடைமலையாம்.
ஐங்குறுநூற்றில் கொடிச்சி
ஐங்குறுநூற்றில் ‘கொடிச்சி’ எனும் சொல்லாட்சி பன்னிரண்டு (256:3, 258:2,
260:2, 281:3, 282:2, 288:3, 289:1, 290:3, 296:1, 298:2, 293:3, 300:1)
இடங்களில் காணப்பெறுகின்றது. இதனுள் கொடிச்சி என்பது பிற பொருண்மைகளில்
அமையாமல் குறிஞ்சிநிலத் தலைவியைக் குறித்து மட்டுமே அமைகின்றது.
பன்னிரண்டு பாடல்களில் ‘குறத்தி, குறிஞ்சி நிலத்தலைவி’ என்றாயிரு
பொருண்மைகளில் மூன்று பாடலடிகளும் (256:2, 258:2, 296:1), ‘தலைவி’ என்ற
பொருண்மையில் இரு பாடலடிகளும் (281:3, 288:3),’கொடிச்ச
ி’ என்ற பொருண்மையில் ஏழு பாடலடிகளும் (260:2, 282:2, 289:1, 290:3,
298:2, 299:3, 300:1) அமைந்துள்ளன. சான்றாக,
மெல்இயல் கொடிச்சி காப்ப (ஐங். 288:30)
எனும் பாடலடிக்கு உரையாசிரியர் உ.வே.சா. தரும் விளக்கமாவது, கிளிகள்
புனத்தின்கண் படியா நின்றனவென்று தலைவியைக் காக்க ஏவியவழி அதனையறிந்த
தலைமகள் உவந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது (ப.129) என்பதாகும். அவர்,
அவ்விளக்கத்தில் ‘கொடிச்சி, குறத்தி, குறிஞ்சி நிலத்தலைவி’ ஆகிய
பொருண்மைகளில் சுட்டவில்லை. மாறாகத் தலைவி என்றே சுட்டியுள்ளார்.
இப்பாடலடி குறிஞ்சித் திணைக்கு உரித்தாதலால் அந்நிலத் தலைவியைக்
குறித்தது எனலாம்.
அகநானூற்றில் கொடிச்சி
அகநானூற்றில் 102:5, 132:7 ஆகிய இரு பாடலடிகளில் கொடிச்சி
காணப்பெறுகின்றது. இவ்விடத்தும் ‘கொடிச்சி’ என்பதாகவே ந.மு.வேங்கடசாமி
நாட்டார் பொருள் கொள்கின்றார். சான்றாக,
ஒல்குஇயற் கொடிச்சியை நல்கினை ஆயினும் (அகநா. 132:7)
எனும் பாடலடிக்கு உரையாசிரியார் ந.மு.வேங்கடசாமி நாட்டார் தரும்
விளக்கமாவது, கொடிச்சியுமாகிய இவளை அருள் செய்தாய் ஆயின் (மணிமிடை பவளம்,
ப.278) என்பதாகும்.
மேற்கூறப்பெற்ற கருத்துப் புலப்பாடுகளின் வழி, ‘கொடிச்சி’ என்பது, சங்க
இலக்கியங்களில் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த குறமகளைக் குறித்தது. ஆனால்
அகராதிகள், ‘இடைச்சி’ என்பதனையும், பிற்கால வழக்கிற்குரிய
‘காவாட்டம்புல், கொடிறு, புற்றாஞ்சோறு, கொடுவேலி, காமாட்சிப்புல்,
கன்னம், கொடிவேலி’ என்பவைகளையும் சுட்டுகின்றன. இவை சங்க இலக்கிய
உரைகளில் காணப்படவில்லை. எனவே, சங்க இலக்கியம் சுட்டும் கொடிச்சி
என்பதற்குக் குறவர் குலப்பெண் என்பதே சரியான பொருண்மையாக அமையும் எனலாம்.
இதை உறுதிப்படுத்தும் முகமாக ஞ.தேவநேயப் பாவாணரின் கருத்தாக்கம்
அமைந்துள்ளது. அக்கருத்தாவது, ஆடவன் பெண்டு ஆகிய இருபாலருள், பெண்டு
மிகமெல்லிய ளாதலின், கொடி எனப்படுவாள், இதனாலேயே, குறிஞ்சி
நிலப்பெண்டிற்குக் கொடிச்சி என்று பெயர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்,
ப.4) என்பதாகும்.
மொழிபெயர்ப்பைக் காணவும்
23 நவம்பர், 10:14 PM · நண்பர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக