ஞாயிறு, 19 மார்ச், 2017

தலாக் முறை பெண்ணுரிமை கிடையாது ஆணாதிக்கம் இசுலா விவாகரத்து திருமணம் மதம்

aathi tamil aathi1956@gmail.com

1/12/16
பெறுநர்: எனக்கு
குரானில் எப்படி சொல்லி இருக்கிறது என்று பார்ப்போம். ஒரு கண்வன்
மனைவியுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை எனில் அவளை தலாக் செய்து விடலாம்
தலாக் உடனடியாக அமலுக்கு வந்துவிடுகிறது இங்கு மூன்று தலாக் சொல்லித்தான்
மனைவியை தாம்பத்திய வாழ்வில் இருந்து விலக்க வேண்டும் என்பதில்லை.
ஆனால் அந்த பெண் உடனடியாக வேறு ஒரு ஆணை மறுமணம் செய்யக் கூடாது (அவள்
அல்லாவையும், இறுதி நாளை நம்புகிறவளாக இருந்தால்). மூன்று மாதவிடாய்
காலம் காத்திருந்து அது முடிவதற்க்குள் கனவனுடன் இணக்கம் ஏற்ப்பட்டு
கணவன் மனைவியை ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்த
வாய்ப்பு இரு முறை மட்டுமே ஆணுக்கு வழங்கப் பட்டுள்ளது (இதே வாய்ப்பு
குலா என்னும் மனவிலக்கு செய்யும் பெண்ணுக்கு வழங்கபடவில்லை என்பது
குறிப்பிட தக்கது. இதே போல் இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும்
முரண்பாடு ஏற்ப்பட்டால் முன்பு போல் தலாக் சொல்லி மனைவியை தள்ளிவைத்து
பின் கணவனுடன் இணக்கம் ஏற்ப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகும்
முரண்பாடு ஏற்ப்பட்டால் ஆண் தலாக் சொல்லிவிட்டால் பின் எக்காரணம்
கொண்டும் அவளை சேர்த்துக்கொள்ள முடியாது, கூடாது.
அதன் பிறகுதான் ஜீரணிக்க முடியாத அசிங்கத்தை சட்டமாக பெண்ணுக்கு குரான்
வழங்குகிறது. மூன்று தலாக் வரை நமக்கு விவரம் சொல்லி வரும் இஸ்லாமியர்கள்
மூன்றாவது தலாக்கிற்கு பிறகு குரான் கூறும் அசிங்கமான சட்டத்தை யாரும்
நமக்கு அழுத்தி சொல்லுவதில்லை அது என்னவென்றால் அப்படி
சேர்த்துக்கொள்வதானால் அப்பெண் மூன்று மாதவிடாய் காலம் காத்திருந்து, தன்
தூய்மையை நிருபித்து மாற்றான் ஒருவனுக்கு மனைவியாக வேண்டும் பின் அவன்
இவளை விவாகரத்து செய்து விடுவானானால், அதன் பிறகு முதல் கணவன் பழைய
முன்னால் மனைவியை நிக்காஹ் செய்து கொள்ளலாம். ஆனால் மாற்றான் ஒருவனை
மணந்து கொண்ட பெண் அவனை குலா செய்துவிட்டு வந்து முதல் கணவனுடன் சேரலாமா
என்றால் அதற்கு குரானில் குறிப்புகள் இல்லை. மூன்று தலாக் பெற்ற பெண்
மாற்று ஆணை மணந்து அவனுடன் உடல் உறவில் ஈடுபட்டு அதன் பிறகு அவனால் தலாக்
செய்யப் பட்ட பிறகே பழைய கணவனுக்கு மனைவியாக முடியும்.
மேற்க்கண்ட சாராம்சமே குரானில் தலாக் பற்றி உள்ளது இதில் எங்காவது
பெண்ணுக்கு உரிமைக் கொடுக்கப்பட்டுள்ளதா ! பெண் ஆணை குலா செய்துவிட
விரும்பினால் பஞ்சாயத்தார் முன்னிலையில் மணவிலக்கு பெற்று தான் அந்த
ஆணிடம் பெற்ற மகர் கொடையை திருப்பித்தந்து விட்டு விலகிக்கொள்ளலாம் இது
கேட்பதற்கு பெண்ணுக்கான சுதந்திரமாக இருப்பினும் சர்க்கரை என்று
பேப்பரில் எழுதி நக்குவதற்கு சமமாகும். பெரும்பாலும் மகர் கொடையானது
(பணமோ, சொத்தோ, நகையோ அல்லது மூன்றுமாக இருக்கலாம்) மணப் பெண் மகரை தன்
தேவைக்கு வைத்துக்கொள்ளலாம் அல்லது தான் விரும்பிய உறவுகளுக்கு
கொடுத்துவிடலாம். இதைப் பற்றி மணமகனோ, மணமகன் சார்பானவர்களோ கேட்க
முடியாது (இது சட்டம்). இந்த மகர் தொகையை அரபு நாடுகளில் பெண்ணை
பெற்றவர்களே அந்த மகர் கொடையை பெற்றுக்கொண்டு பெண்ணை மணம் செய்து
கொடுத்துவிடுகின்றனர். பின் நாளில் அந்த பெண் கணவனை குலாச் செய்யும்
பொழுது அந்த மகரை திருப்பித்தரும் வாய்ப்பு மனமகளுக்கு இல்லாது போய்
விடுவதால் அவளால் குலாச் செய்யமுடியாது போய்விடும். கணவன் மகரை விட்டுக்
கொடுத்தால் ஒழிய மனைவி குலாச்செய்ய இயலாது. மணப்பெண் கேட்கின்ற மகர்
கொடுக்க வசதி உள்ள ஆண் எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் மகர் கொடுத்து
மணந்துக் கொள்ள முடியும். இந்த மகர் தொகையை கொடுக்க அரபு நாடுகளில்
ஆணுக்கு வட்டி இல்லாக் கடன் வழங்கபடுகிறது.
இங்கும் வசதியுள்ள ஆண் எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம். அவன்
உடல் தேவையை தீர்த்துக் கொள்ள அடுத்த, அடுத்த மனைவிமார்கள்
இருக்கிறபடியால், அவனுக்கு இருக்கின்ற மனைவியரில் யாரை பிடிக்கவில்லையோ,
அவளை தலாக் செய்துவிட்டாலும் அவன் தேவைகள் எதுவும் குறைவு
ஏற்ப்பட்டுவிடப் போவதில்லை. ஆனால் பெண்ணுக்கு தான் விசப் பரிட்சை.
அவள் மூன்று மாதவிடாய் காத்திருப்பது என்பது, அடுத்து அவளை மணந்து
கொள்ளவிரும்பும் ஆணுக்கு, நான் முதல் கணவனுக்கு கர்ப்பம் தரிக்கவில்லை என
நிறுவிப்பதற்காகவும், அப்படி கரு உண்டாகி இருந்தால் அதற்கான செலவினங்களை
முதல் கணவனிடமிருந்து பெற்றுக்கொண்டு பிள்ளை பெற்றுத்தருவதற்காகவும்,
மேலும் இரண்டு, மூன்று மாதவிடாய் வரை காத்திருப்பதென்பது நீ என்னை தலாக்
செய்துவிட்டாலும் நான் உன்னையேநினைத்துக்கொண்டு வாழ்கிறேன். வேறு ஆணுடன்
எனக்கு எந்த உடல் உறவும் இல்லை அதனால் நான் கர்ப்பம் தரிக்கவில்லை என்னை
தலாக்கில் இருந்து விடுவித்து ஏற்றுக்கொள் என்று கணவனிடம் மன்றாடுவதற்கு
! என்பது நடைமுறை உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக