|
27/10/16
![]() | ![]() ![]() | ||
இந்திரா பார்த்தசாரதி
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Post Comment
Notify me of new comments via email.
புதிய கட்டுரைகள்
யார் எதிரி, யார் சிநேகிதன்?
பொன்னியின் செல்வன்
Was Shakespeare anti-people?
குறுகிய வட்டம்
கும்பகோணம் சம்பா அரிசி
பாப் டிலன் இசை இலக்கியமாகுமா?
Who is Bharata?
வேடிக்கை மனிதர்கள்
எதிர்பாராத பரிசு
தடி எடுத்தவன் தண்டல்காரன்
கடைசிப் பொடி மட்டை’
’என்னிடம் எத்தனை ‘டை’ இருக்கிறது?’
வயிறும் சாதியும்
மதராஸி யாராக இருந்தால் என்ன?
The first Tamil play
வகை
அனுபவம்
அரசியல்
அறிமுகம்
இலக்கியம்
நாடகம்
நாவல்
மொழி
விமர்சனம்
Uncategorized
மின்னஞ்சலில் தொடர்புகொள்ள
ட்விட்டரில் பின்தொடரலாம்
யார் எதிரி, யார் சிநேகிதன்?
indiraparthasarathy.wordpress. com/2016/10/25/%e0… 1 day ago
யார் எதிரி, யார் சிநேகிதன்?
indiraparthasarathy.wordpress. com/2016/10/25/%e0… via @wordpressdotcom
1 day ago
பொன்னியின் செல்வன்
indiraparthasarathy.wordpress. com/2016/10/24/%e0… 2 days ago
Was Shakespeare anti-people?
indiraparthasarathy.wordpress. com/2016/10/21/was… via @Eeepaa 5 days ago
Was Shakespeare anti-people?
indiraparthasarathy.wordpress. com/2016/10/21/was… 5 days ago
செய்தி ஓடை
RSS - Posts
RSS - Comments
அஞ்சல்வழி வாசிப்பு
Enter your email address to subscribe to this blog and receive
notifications of new posts by email.
Join 982 other followers
Sign me up!
View Full Site
Create a free website or blog at WordPress.com.
3 Votes
July 6, 2014 3 Replies
’சிலப்பதிகார’ ச்சிக்கல்கள்
Posted by Admin
Tamil Heritage Group எனும் அமைப்பினர் ஒருங்கிணைத்த நிகழ்வில் ஆற்றிய உரை.
தொடக்கத்திலேயே சொல்ல விரும்புகிறேன். இது ஆராய்ச்சிக் கட்டுரையன்று.
உரத்த சிந்தனை. சிலப்பதிகாரக் காவியம் பற்றி என் மனத்தில் தோன்றிய
எண்ணங்கள் ஐயங்கள் ஆகியவற்றை முதலில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,
இவ்வாறு பகிர்தலிலும், உரக்கச் சிந்திப்பதிலும் எனக்குத் தெளிவு
ஏற்பட்டால்,, சிலப்பதிகாரம் பற்றி ஒரு புதிய நூல் நான் எழுதக் கூடும்
என்பது என் எச்சரிக்கை..
பள்ளிப் பருவத்திலிருந்தே என்னை மிகவும் ஈர்த்த நூல் ‘சிலப்பதிகாரம்’.
பத்தாம் வகுப்பில் எனக்கு ‘ஊர்சூழ்வரி’ பாடமாக இருந்தது. அந்தப் பகுதி
என்னை மிகவும் பாதித்தது. என்ன காரணம் என்று அப்பொழுது எனக்குத்
தெரியவில்லை. ‘என்றனன் வெய்யோனி’ லிருந்து இறுதி வரியாகியச் ‘சென்றாள்
அரசன் செழுங்கோயில் வாயின் முன்’ என்பது வரை எனக்கு மனப்பாடம். பொருள்
முழுவதும் விளங்காவிட்டாலும், தவறிழைக்கைப்பட்ட ஒரு பெண்ணின் சீற்றம் என்
மனத்தில் பல சலனங்களை ஏற்படுத்தியது.
எனக்கு முதுகலைவகுப்பில் ‘சிலப்பதிகாரம்’ முழுவதும் பாடமாக இருந்தது,
அப்பொழுது என்னைக் கவர்ந்தவை,’கானல் வரி’, ‘வேனிற்காதை’, ‘ கொலைக்களக்
காதை’, ஊர்சூழ்வரி’, ‘வழக்குரைக் காதை’ ஆகியவை. ’வஞ்சிக் காண்டம்’
பிற்சேர்க்கையாக இருக்கலாமோ என்று எனக்கு அப்பொழுது தோன்றிற்று. நம்
இலக்கியப் பண்பாட்டு மரபில், கதை துன்பவியல் நிகழ்வாக முடியக்கூடாது
என்பதற்காக வேறு யாரோ அக்காண்டத்தை இடைச் செருகலாக நுழைத்திருக்கலாம்
என்று எனக்குப் பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் ‘சிலப்பதிகாரம்’ முழுவதையும்
படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது ‘சீதையின் காட்டுச்
செலவும் கண்ணகியின் மதுரைச் செலவும்’ என்ற தலைப்பில் ஒரு
கருத்தரங்குக்காகக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன்.
அந்நிலையில் எனக்கு வணிகத் தொழிலுக்கு அந்நியப் பட்டுப் போன கோவலன் என்ற
கலைஞன் மீது அநுதாபமும், கோவலனைக் கணவன் என்ற ஸ்தாபனமாகக் கருதிய கண்ணகி
மீது கோபமும் உண்டாயின.. அப்பொழுதுதான் பல விவாதங்களுக்குக் காரணமாகிய
என் கட்டுரை,’ கண்ணகி எனும் கற்பு இயந்திரம்’ என்பது ‘கணையாழி’ யில் வெளி
வந்தது.
ஆகவே ‘சிலப்பதிகாரம்’ என்னுடைய ஒவ்வொரு பருவத்திலும் என்னை என் சிந்தனைப்
பரிணாமத்துக்கேற்ப வெவ்வேறு வகையில் பாதித்துக் கொண்டே வந்திருக்கிறது.
என்பதை என்னால் இப்பொழுது புரிந்து கொள்ள முடிகின்றது.
இதற்கு அடிப்படையான காரணம், ‘சிலப்பதிகாரம்’ மற்றைய தமிழ்ச் செவ்வியல்
நூல்களாகிய ‘கம்பராமாயணம்’. ‘திருக்குறள்’ போலல்லாமல், முற்றிலும்
மாறுபட்ட வித்தியாசமான படைப்பிலக்கியம் என்பதுதான்.
முதல் வேறுபாடு, இது சமஸ்கிருதத்திலிருந்து இறக்குமதியான காவியக்
கதையன்று. சேர,சோழ, பாண்டிய நாடுகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டு நிகழ்வுகளைக்
கருவாகக். கொண்ட முதல் படைப்பிலக்கிய நூல்.
படைப்பிலக்கியத்தில் வெவ்வேறு வகைகள் உண்டு. குறிப்பாக, மடை
திறந்தாற்போல, தன்னிச்சையாகப் பொங்கும் (eloquent and spontaneous)
படைப்பு ஒரு வகை. இலக்கியக் கொள்கைத் தீர்மானங்களுடன் சொல்லவந்த கதையை
எந்தெந்தக் களத்தில் அது நிகழ்கிறதோ, அக்களத்தின் பூகோளப் பின்னணியிலும்,
அக்களத்துகுரியப் பாரம்பரியக் கலை வடிவங்களைப் புலப்படுத்தும் கையேட்டு
ஆவணமாகமாக ஆக்கிக் கூறும் படைப்பு இன்னொருவகை. கம்ப ராமாயணம் முதல் வகை.
சிலப்பதிகாரம் இரண்டாவது வகை.
சிலப்பதிகாரம், கம்ப ராமாயணத்தைப் போலவோ, திருக்குறளைப் போலவோ சாதாரண
மக்களிடையே பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பிரபலமாக
இருந்திருக்கவில்லை.. ‘ஐம்பெரும் காப்பியங்கள்’’ என்பதே மிகப் பிற்கால
வழக்கு. ஆனால்,அறிஞர்களிடையே இந்நூல் வழக்காற்றில் இருந்திருக்கக்
கூடுமென்பது பத்தாம் நூற்றாண்டுக் ‘களவியல்’ உரையாலும், 11ம் நூற்றாண்டு
’யாப்பருங்கல விருத்தி உரை’ யாலும் தெரிகிறது. சமஸ்கிருதக் காவிய
மரபுக்கு முற்றிலும் வேறுபட்ட பாத்திரப் படைப்புக்களை உடைய நாடக க்
காப்பியம் என்பதாலும், ஓரளவுச் சமணச் சார்புடையது என்பதாலும் இந்நூல்
மக்களிடையே அவ்வளவாக பரவவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
தொல்காப்பியம், செய்யுளியல் 237ம் சூத்திரத்துக்கான( ‘ தொன்மைதானே
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே’ ) உரையில், நச்சினார்க்கினியர்,, ‘தொன்மை’
என்பதற்குச் சான்றாக பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை,
சிலப்பதிகாரம் ஆகிய மூன்று நூல்களையும் குறிப்பிடுகிறார். ‘தொன்மை’
என்பது பழைய கதைச்செய்திகளின் அடிப்படையில் ஆக்கப்படும் உரையொடு விரவிய
புதுப்படைப்பு. அப்படியானால், அச்செய்திகள், எப்பொழுது வழங்கின,
அச்செய்திகள் யாவை என்ற கேள்வி எழுவது இயற்கை..சங்க நூலாகக் கருதப்பட்டு,
பல புலவர்கள் இயற்றியதாகக் கூறப்படும்,’ தகடூர் யாத்திரை’ யின் ஆசிரியர்
பெயரை நச்சினார்க்கினியர் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்ள
முடிகின்றது. ‘பாரத வெண்பா’ ஆசிரியர் பெயரைப் ‘பெருந்தேவனார்’ என்று
கூறும் உரையாசிரியர், ‘சிலப்பதிகார’ ஆசிரியர் பெயரை ஏன் குறிப்பிடவில்லை?
‘கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய சங்க காலப்
புலவர்கள் , கடையெழுவள்ளலாகிய பேகன் என்ற குறுநிலமன்னன், தன் மனைவியை
விட்டுப் பிரிந்து வாழ்வதைக் குறிப்பிட்டு, அவன் மனைவியின் துயரத்தைப்
புலப்படுத்துகிறார்கள். அவள் பெயர் கண்ணகி.
மருதன் இளநாகனார் என்ற புலவர் ஒரு பெண் பரணருகே வேங்கை மரத்தடியில்
சோகத்துடன் நிற்பதை ‘நற்றிணை’ செய்யுள் ஒன்றில் கூறுகிறார். ‘ஒரு முலை
அறுத்த திருமாவுண்ணி’ என்று அவளைச் சித்திரிக்கின்றார். ’ஏதிலாளன்’ செய்த
செய்கைக்காக வருந்தி ஒரு முலை குறைத்தவள் என்று குறிப்பிடப்படும் அவள்
யாராக இருக்கலாம்? ‘ஏதிலாளன்’ என்றால் ‘அந்நியன்’. தனக்கு ‘அந்நியன்’
போல் ஆகிவிட்ட கணவன் என்ற பொருளில் இது வருகின்றதா, அல்லது ‘ஏதிலாளன்’
என்பது கோவலனைத் தவறாகக் கொலை செய்வித்த ‘பாண்டியனை’’க்
குறிப்பிடுகின்றதா என்ற பல கேள்விகள் எழுகின்றன.
சிலப்பதிகாரம்’ இச்செய்திகளியின் அடிப்படையில் உருவாகியிருக்கக் கூடிய
காவியம் என்பதால்தான் நச்சினார்க்கினியர் இதைத் ‘தொன்மை’க் குச் சான்றாக
க்காட்டுகிறாரா?
இன்னொரு செய்தி. ‘யாப்பருங்கலக் காரிகை விருத்தி உரையில்’ ஒருத்தி, கணவன்
கொலையுண்டதைக் கண்டுப் பாடியதாக ஒரு வெண்பா வருகிறது. இது ‘பத்தினிச்
செய்யுள்’ என்கிறார் உரையாசிரியர். இதற்கும் ‘சிலப்பதிகார’த்துக்கும்
தொடர்பு உண்டா என்பதும் சிந்திக்கப் பட வேண்டியதொன்றாகும்.
‘முலை’ என்பது ஒரு குறியீட்டு உணர்வாகத் தமிழ் இலக்கியங்களில் பயின்று
வருகிறது. முலையைப் பறித்து எறிவது என்பது தன் பெண்மையை அழித்துக்
கொள்வதற்கான குறியீடாகும். ‘நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கூறுகிறார்:
‘கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
கொங்கை தன்னை கிழங்கோடு
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்து என் அழலைத் தீர்வேனே.’
சிலப்பதிகாரத்தில் கண்ணகி ‘இடமுலை கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை
வாரா அலமந்து மட்டடார் மறுகின் மணி மணிமுலையை வட்டித்து விட்டாள்
எறிந்தாள்’’ என்று வருகிறது. ஆண்டாள் ‘அழல்’ என்று குறிப்பிடுவதை
வைத்துக் கொண்டு, கண்ணகி இட முலையை எறிந்து மதுரையை எரித்தாள் என்பதை ஒரு
குறியீடாகக் கொள்ள முடியுமா?
ஏன் இடமுலையைத் திருகி எறிகிறாள்? அர்தநாரீஸ்வரர் கோட்பாட்டில் இடப்
பக்கம் பெண். இடப்பக்கம் போகம்.வலப்பக்கம் யோகம் என்பது ஐதீகம் அந்தப்
பெண்மையை அழித்துக் கொள்வதின் குறியீடாகத்தான் இது வருகிறதா? ‘கடவுள்
பத்தினி யாக ’ ஆகி விடுகின்ற கண்ணகி, பின்னால் கொற்றவையின்/ மங்கலா
தேவியின் அம்சமாக வழிபாட்டுக்குரியவளாக மாறுகிறாள் என்பதில் வியப்பதற்கு
ஏதுமில்லை. இதற்கான முன் அறிவிப்பாக ’வேட்டுவ வரியில்’, தெய்வமேறிய பெண்
கண்ணகியைப் பார்த்ததும் கூறுவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
‘இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியா யுலகில் ஓங்கிய
திருமா மணி’
சீற்றமடைந்த பெண்ணைத் தெய்வமாக்கி விடுவது, அவளை அடக்கி
வைத்திருப்பதற்கான வழியா என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
சங்காலத்தில் பத்தினி வழிபாடு என்றும் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.
’கற்பு’ என்பது திருமண நிலையோடு இணைத்துப் பேசப்படுகிறது. ‘களவியல்’-
திருமணத்துக்கு முந்திய நிலை, ‘கற்பியல்’ திருமணத்துக்குப் பிந்திய நிலை
என்றுதான் பொருள் கொள்ள முடிகின்றது. ’பத்தினி வழிபாடு’ சிலப்பதிகாரக்
கதையுடந்தான் தொடங்கியதா?
சிலப்பதிகாரம் எப்பொழுது எழுதப்பட்டிருக்க வேண்டும்? சிலப்பதிகார
ஆசிரியராகக் கூறப்படும் இளங்கோவடிகள், சேரன்செங்குட்டுவன் தம்பியா? அவர்
‘ மணிமேகலை’ ஆசிரியராக்க் கூறப்படும் தண்டமிழ்ச் சாத்தனாருக்கு நெருங்கிய
நண்பரா? இரண்டு காவியங்களும் ஒரே காலத்தனவா? இக்கேள்விகளுக்கு இது வரை
யாரும் சரியான விடைகள் அளித்திருப்பதாகத் தெரியவில்லை. சாத்தியமும்
இல்லை. ஒரு விடை புதுக் கேள்வியை எழுப்புகிறது. இலக்கியத்தின் சுவாரஸ்யமே
கேள்விகளும், விடைகளும், புதுக் கேள்விகளுந்தாம்.
சிலப்பதிகாரத்தின் காலம் பொ.ச ((பொது சகாப்தம்)இரண்டாம் நூற்றாண்டு என்று
பரவலாக நம்ப ப் பட்டு வருகிறது. காரணம், சேரன் செங்குட்டுவன்
கண்ணகிக்குக் கோயில் எழுப்பியபோது அவ்விழாவில் இலங்கை அரசன் கயவாகு
கலந்து கொண்டான் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் படுகிறது
என்பதுதான். இவன் இரண்டாம் கயவாகு என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள். இரண்டாம் கயவாகு காலம் இலங்கை வரலாற்று ஆவணம்,
மஹாவம்ஸத்தின்படி பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு. ஆகவே சேரன் செங்குட்டுவன்
காலம் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அவனுடைய
தம்பி என்பதால் சிலப்பதிகாரம் பொ.ச.இரண்டாம் நூற்றாண்டில்தான்
எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று இதுவரைப் பெரும்பான்மையான தமிழ்ப்
பேராசிரியர்கள் கூறி வருகிறார்கள்.
சங்க நூலாகிய ‘பதிற்றுப்பத்தில், ஐந்தாம் பத்து பரணர் நெடுஞ்சேரலாதான்
மகன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடிய பாடல்கள். இவன் தான்
சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கோயிலெடுத்த சேரன் செங்குட்டுவன்.
‘கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி கான் நவில் கானம் கரையில் போகி ஆரிய
அண்ணலை வீட்டி’ என்று பரணர் பதிகத்தில் கூறுகிறார். கடவுள் பத்தினி
என்பவள் கண்ணகி. அவளுக்குக் கோயில் கட்ட கல்லெடுக்க வேண்டிப் படையெடுத்த
போது எதிர்த்த ஆரிய மன்னர்களின் தலைவனை முறியடிக்கிறான் செங்குட்டுவன்
என்று கூறுகிறார் பரணர். செங்குட்டுவனைப் பாடிய கவிஞர், கடவுள்
பத்தினியைப் பற்றி ஒரு மாபெரும் காவியமே படைத்திருக்கும், அவன் தம்பியைப்
பற்றிக் குறிப்பிடவேயில்லை. ஏன்? செங்குட்டுவனுக்கு சிலப்பதிகாரம்
இயற்றிய இளங்கோவடிகள் தம்பி அல்லர் என்ற ஒரே காரணந்தான். சேரன்
செங்குட்டுவன் காலம் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு என்று
வைத்துக்கொண்டாலும், சிலப்பதிகாரம் எழுதிய ஆசிரியர் அவனுக்குப் பல
நூற்றாண்டுகள் பிற்பட்டவர்தாம் என்று தெரிகிறது.
அவ்வாறென்றால்,, சிலப்பதிகாரப் ‘பதிகத்தில்’ ‘ குணவாயிற் கோட்டத்து அரசு
துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோ அடிகள்’ என்றுதானே அவர்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Post Comment
Notify me of new comments via email.
புதிய கட்டுரைகள்
யார் எதிரி, யார் சிநேகிதன்?
பொன்னியின் செல்வன்
Was Shakespeare anti-people?
குறுகிய வட்டம்
கும்பகோணம் சம்பா அரிசி
பாப் டிலன் இசை இலக்கியமாகுமா?
Who is Bharata?
வேடிக்கை மனிதர்கள்
எதிர்பாராத பரிசு
தடி எடுத்தவன் தண்டல்காரன்
கடைசிப் பொடி மட்டை’
’என்னிடம் எத்தனை ‘டை’ இருக்கிறது?’
வயிறும் சாதியும்
மதராஸி யாராக இருந்தால் என்ன?
The first Tamil play
வகை
அனுபவம்
அரசியல்
அறிமுகம்
இலக்கியம்
நாடகம்
நாவல்
மொழி
விமர்சனம்
Uncategorized
மின்னஞ்சலில் தொடர்புகொள்ள
ட்விட்டரில் பின்தொடரலாம்
யார் எதிரி, யார் சிநேகிதன்?
indiraparthasarathy.wordpress.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக