செவ்வாய், 21 மார்ச், 2017

சினிமா நீதிமன்றம் உடனடி தீர்ப்பு காவிரி திரைப்படம்

சினிமாவும் காவிரியும் - இன்றையக் கண்ணோட்டம்.
வெளியாவதில் தடை என்றால் உடனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது
விஸ்வரூபத்திற்கு தடையா? எதிர்கட்சி தலைவர் குரல்கொடுக்கிறார்.
முதல்வர் கருத்து சொல்கிறார்.
கொம்பனுக்கு தடையா? இல்லையென உடனே நீதிமன்றம் அறிவிக்கிறது.
உத்தமவில்லனுக்கு தடையா? உடனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கிறது. அதற்கு வழக்கறிஞர்கள், நீதிமன்றம் சொல்லும் காரணம், "10 கோடி அல்லது 100 கோடி முதல் போட்டு படம் எடுத்திருங்காங்க. படம் வெளியாகலைன்னா பயங்கர நட்டம் வரும்" என்கிறார்கள்.
யாராருக்கு நட்டம்?
தயாரிப்பாளர் -1 to 4 பேர், இயக்குனர் - 1 ஆள். திரைப்பட கலைஞர்கள், தொழிலாளிகள் 500 பேர். படத்தை வாங்கிய பிறகு விநியோகஸ்தர்கள் 100 பேர் மொத்தத்தில் ஒரு படம் வெளியாக வில்லையென்றால் 1000லிருந்து 5000 பேர்வரை பாதிக்கப்படலாம்.
ஆனால், காவிரி, முல்லைப் பெரியாறில் தண்ணீர் வரவில்லையென்றால் காவிரியில் 14 லட்சம் ஏக்கர் பெரியாறில் 3 லட்சம் ஏக்கர். குடும்பத்துக்கு 4 பேர் என்றாலும் 17×4=68 லட்சம் பேர், மறைமுக வேலைவாய்ப்பில் 1 கோடிபேர்.
ஏறத்தாழ 2 கோடி பேருக்கு பாதிப்பு
அதுவும் வாழ்வாதாரம்.
சினிமா வழக்கென்றால் உடனடியாக விசாரிக்கிறது. சல்மான்கானுக்கு 1 மணிக்கு தண்டனை, 5 மணிக்கு ஜாமின்,
மின்சார வேகத்தில் தீர்ப்பு வருகிறது.
ஜெயலலிதாவைக் கண்டு நீதி பீதியாகிறது. நீதிபதியே ஓடும் நிலையாகிறது.
சுப்ரமணியசாமிக்காக நீதிபதியே காத்திருக்கிறார்.
அம்பானிக்கும், டாட்டாவுக்கும் விடுமுறையில்கூட நீதிமன்றம் இயங்குகிறது. அவசர அவசரமாக அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் படுகிறது. அதுவே காவிரி பிரச்சனை என்றால், 50 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கிறது
. முல்லைப்பெரியாறுக்கு 40 ஆண்டுகள் வழக்கு நடக்கிறது.
சினிமாவே இல்லையென்றாலும் யாரும் சாகப்போவதில்லை.
விவசாயம் இல்லையென்றால் உலகே அழிந்துவிடும். விவசாயம் செய்ய முடியவில்லை என்பதால் 3 லட்சம் விவசாயிகள் செத்து ரத்த சாட்சியாக மாறிவிட்டார்கள். இதை அவசர வழக்காக விசாரிக்காதது ஏன்?
1 ந்தேதி வெளியாகும் படம் 10ந் தேதி வெளியானால் குடிமுழுகிப் போகாது.
பயிருக்கு தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையென்றால் குடிமுழுகித்தான் போகும். விதைப்பு தள்ளிப்போனால் பருவம் மாறி மழைக்காலத்தில் பயிரும் முழுகித்தான் போகும். மழைக்காலத்தில் சினிமாவுக்கு குடையோடு போகலாம்.
மழைக்காலத்தில் அறுவடைக்கு குடையோடு போக முடியுமா?
சல்மான்கான் சிறைக்குப் போனால் ஐயகோ! 500 கோடி முதல் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவது? என ஆதங்கப் படுகின்றன விபச்சார ஊடகங்கள். அவரை விடுதலை செய்ய வேண்டுமென பாம்பேயில் ரசிகப் பொறுக்கிகள் போராட்டம் நடத்துகின்றனர்.
அதே மகாராஷ்டிராவில்தான் விவசாயிகளின் தற்கொலை மண்டலமான விதர்பாவும் இருக்கிறது. விவசாயம் இது உயிர்வாழும் பிரச்சனை. வாழ்வாதாரப் பிரச்சனை. இது தேசத்தின் பிரச்சனை. நதிநீர் பிரச்சனையை மட்டும் இழுத்தடிப்பது ஏன்? அதற்கான சட்டமில்லையா? அதை நடைமுறைப்படுத்த திட்டமில்லையா? ஒரே காரணம்தான்,
இந்தியச் சந்தை (ALL BIG CORPORATES) தகர்ந்துவிடும். அதற்கு இளிச்சவாய் தமிழகம் பலியாக வேண்டும்.
PLEASE SHARE TO ALL YOUR FRIENDS GROUP.
FOR OUR FARMERS SAKE!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக