|
16/4/16
| |||
நிலா நிலா , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
அவர் அறியார்!
(சிலர் சீமான் என்ற சொல்லைப் பிறமொழிச் சொல் என்று கருதியும் கூறியும்
வருகிறார்கள்..!சைமன் நாடார்! உன் பேரே தமிழில்லை என்பர் சிலர்..!!)
’சீர்மகன்’ என்ற அழகிய தமிழ்ச் சொற்றொடரே, ‘சீமான்’ என்று இயல்புத்
திரிநிலையால் மாறியுள்ளது.இயல்புத் திரிபு என்றால்,இயல்பாக ஏற்றுக்
கொண்டு போகக் கூடியது. மகன் என்பது மான் என்று மாறுவது இயல்புதான்.
பெருமகனே என்று சொல்லுவதை பெருமானே என்று சொல்லுவது இயல்புதான்!
அச்சன், அத்தன் என்றால் அப்பன். அத்தனுக்கு அத்தன் > அத்தத்தா > தாத்தா
என்பது இயல்பான திரிபுதான். அப்பனுக்கு அப்பன் > அப்பப்பா. இன்றைக்கும்
யாழ்ப்பாணத்தில் அப்பாவுடைய அப்பாவை ’அப்பப்பா’ என்கிறார்கள்.
அப்பப்பா > பாபா என மாறுகிறது. அச்சனுக்கு அச்சன் > அச்சச்சா > சாச்சா.
அச்சன் - அத்தன் - அப்பன் இந்தச் சொற்கள்தான் சாச்சா என்றும்,தாத்தா
என்றும், பாபா என்றும் திரிகிறது. இவை, இயல்புத் திரிபிலேயே ‘மிகை
இயல்புத் திரிபு’.
இயல்புத் திரிபென்றால், பளிச்சென்று மூலத்தைக் கண்டு பிடிக்கலாம். எ.கா:
துகள் > தூள். கொஞ்சம் திணறியவுடன் ஓ... துகள் தான் தூள் ஆனதா? என்று
பிடிச்சுக்குவான். பகல் > பால் -அட ஆமா, வெள்ளையா இருக்குன்னு உடனே
புரிந்து ஏற்றுக் கொள்வான். இயல்புத் திரிபுக்கும், மிகை இயல்புத்
திரிபுக்கும் என்ன வேறுபாடு என்றால், சொன்னவுடன் பொது மாந்தனும் ஏற்றுக்
கொள்கிற அளவில் இருப்பது இயல்புத் திரிபு; ஆனால், விளக்கம் சொல்லி, அதைக்
கொஞ்சம் முயற்சி பண்ணினால்தான் புரியும் தன்மையது ‘மிகை இயல்புத்
திரிபு’.
மிகை இயல்புத் திரிபையும் தாண்டி, வெவ்வேறு கட்டத்திற்குப் போய், எளிதில்
கண்டு பிடிக்கவே முடியாத நிலையிலிருக்கும்! அதைப் பாவாணர், அரசேந்திரன்,
அருளி போன்ற ஆய்வாளர்களால் தான் கண்டு பிடிக்க முடியும். எ.கா: ‘சாதி’
என்பது தமிழ்ச் சொல். அதன் மூலம் வந்து ‘அம்’. அம் > சம் > சாம். சாம்
இலிருந்து சாதி என்றால், இதை யாரால் கண்டுபிடிக்க முடியும்? இது இயல்புத்
திரிபல்ல, பலபடித் திரிபு - பல படிநிலைகளில் திரிபடைவது, அப்படியும்
இருக்கிறது..! அப்புறம் ‘ஒலிப் பெயர்ச்சி திரிபு’ என்று இருக்கிறது.
‘அறம்’ > ‘றாம்’ என்று மாறிவிடும். முன் நின்ற உயிர், நடு எழுத்தாக
மாறியதால், அந்த இரண்டாவது எழுத்து ‘குறில்’ நெடிலாக மாறிவிடும். எ.கா:
அரணி > ராணி. (அரசன் - அரசி போல் வடநாட்டில் ராணா - ராணி). இப்படி
மொழிநிலையில் எப்படி எப்படி திரிபு இருக்கிறதோ அப்படி அப்படி விதி
முறைகளும் இருக்கிறது, இருக்கட்டும்!
சரி, இனி சீமானுக்கு வருவோம்.
‘சீமான்’ ஓர் அழகிய தமிழ்ச் சொல்.
Army ஐ நாம் ‘ஆர்மி’ என்றுதான் சொல்லுவோம், ஆனால் ஈழத்தமிழர் ‘ஆமி’
என்றுதான் சொல்லுவார்கள். ’ஆமி’ தான் தமிழின் இயல்பான திரிபு. ‘ம்’ என்ற
மெல்லொலிக்கு முன்னாடி ‘ர்’ என்ற இடையின ஒலி அமுங்கிவிடும். மெல்லொலி
மிகக் குறைந்த ஒலி. ‘ஆ’ என்ற தொடக்க ஒலி ‘மி’ என்ற மென்மையான ஒலியில்
போய் முடியப்போகிறது. மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் போறவன், (மாந்த
இயல்பு)-மளார் என்று நடுவில் உள்ளதை வேகமாகத் தாண்டி கடைசிக்குப்
போய்விடுவான் , அதுதான் இயற்கை! தமிழும் ‘இயற்கை மொழி’யாதலால், ‘ஆ’வில்
தொடங்கி நடுவிலுள்ள ‘ர்’ ஐ-த் தாண்டி ‘மி’ என்ற மெல்லொலியில்
முடிந்துவிடும்.
இப்ப,
சீர் மகன் > சீர் மான் > சீமான் , ‘ர்’ மறைந்து இயல்புத் திரிபே
‘சீர்மகன்’ என்கிற ‘சீமான்’.
’மகன்’ என்பது ’மான்’ என்றும், பின் ’மன்’ என்றும் சுருங்கும்.எ.கா:
’ஆர்மி’ > ’ஆமி’ -பளிச்சென்று இறங்கி நடுவிலுள்ள எழுத்தைச் சொல்லாமலே
பலுக்க நேரும் , அது அமைதியாகிவிடும்!
’சீமான்’ தான் ‘சைமன்’ ஆகியுள்ளதே தவிர, ’சைமன்’ > ‘சீமானல்ல’ ! அப்படிச்
சொல்லும் குளத்துத் தவளைகளும், கிணற்றுத் தவளைகளும்,வறட்டுத் தவளைகளும்
தமிழறிஞருமல்லர்!
பாவாணர் கருத்து:
உலகத்திலுள்ள அத்துணை சொற்களும் தமிழ்ச் சொற்களாக இருக்க வேண்டும் அல்லது
தமிழ்ச் சொற்களின் திரிபாக இருக்க வேண்டும்! எப்படித் திரிந்தது என்று
கண்டு பிடிப்பதில் தான் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் ! (மேலே சுட்டியபடி
பல படிநிலைத் திரிபு திரிந்தவைகளை!!)
-அருள் நிலா.
9 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக