|
14/10/16
| |||
Paari Saalan , 7 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
செவ்விந்திய மக்களின் வரலாற்றில் அவர்கள் வீழ்ந்த வரலாறே பெரும்பாலும்
பதியப்பட்டு வருகிறது , ஒரு இனம் வீழ்ந்ததை ஆராய்வதற்கு முன்பு அவர்கள்
வாழ்ந்ததை ஆராய வேண்டும் .
அந்த அடிப்படையில் 9ஆம் நூற்றாண்டில் தொடங்கி 12ஆம் நூற்றாண்டு வரை வட
அமேரிக்க கண்டத்தில் தென்மேற்குப் பகுதியில் வாழ்ந்த அனசாசி(Anasazi)
அல்லது Hisatsinom (ஹிஸ்சாட்சினோம்) நாகரிகத்தை பற்றி பார்ப்போம் .
பெரும்பாலும் செவிந்தியர்கள் என்றாலே அவர்கள் ஏதோ பழங்குடி போலும் ,
காட்டுவாசிகளைப்
போலுமே சித்தரிக்கப்படுவது வழக்கம் . உண்மையில் செவ்விந்தியர்களுள் நிறைய
இனங்களும் , மொழிகளும் , பண்பட்ட நாகரீகங்களும் மதங்களும் உண்டு .
அவற்றுள் ஒரு இனம் தான் இந்த கிராமிய வாழ்கை முறை கொண்ட அனசாசி மக்கள்.
இவர்கள் தங்களை எப்படி அழைத்துக்கொண்டார்கள் என்பது வரலாற்றில் இன்னும்
கண்டறியப்படாத ஒன்று. அனசாசி என்றும் ஹிஸ்சாட்சினோம் என்றும் இவர்களை
மற்ற செவிந்திய மக்கள் அழைக்கிறார்கள். அனசாசி என்றால் “நம்
முன்னோர்களின் எதிரி” என்றும் ஹிஸ்சாட்சினோம் என்றால் “பழைய மக்கள்”
என்றும் பொருள் படும்.
அனசாசி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை மையப்படுத்தி இருந்தார்கள்,
நீரோடைகளை திசை திருப்பி , நீரை தேக்கி விவசாயம் செய்ய அறிந்துள்ளார்கள
் .வணிகத்தில் சிறந்தவர்களாகவும் , கூலாங்கற்களால் அழகிய ஆபரணங்கள்
செய்வதிலும் வல்லவர்களாக இருந்துள்ளார்கள்.
நகர , கிராமிய வாழ்க்கை இரண்டும் இவர்களிடம் உண்டு,சிறு சிறு குழிகள்
அமைத்து அதனையே உயர்த்தி வீடு கட்டியுள்ளார்கள் , சமத்துவ சமூகமாகவும் ,
தொழில்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகமாக வாழ்ந்துள்ளார்க
ள் , விவசாயம் செய்பவர் மத குருவாக ஆகலாம், மதகுருமார்கள் விவசாயமும்
செய்தார்கள். நகர் சுத்தம் செய்யும் தொழில்கள் சுழற்ச்சி முறையில்
குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது . அனைவரும் அணைத்து வேலைகளையும் செய்து
வந்துள்ளார்கள்.
இவர்களின் ஊர்களில் கிவா (kiva) என்பதே பெரிய கட்டிடங்களாக இருக்கும் ,
இவை மக்கள் கூடும் இடமாகவும் , வழிபடும் இடமாகவும் செயல்பட்டு உள்ளது ,
இவைகளும் மண்ணை தோண்டிக் கட்டப்பட்ட கட்டிடங்களே.
வணிகத்தை மையப்படுத்திய நகரமாக அனசாசி மக்களால் கட்டப் பெற்ற புப்லோ
போநிடோ(pueblo bonito) இந்த மக்களின் ஒரு பிரம்மாண்ட படைப்பாகும், சக்கோ
கேனியன் (chaco cannien) எனும் பாலைவனத்தின் மத்தியில் இந்த நகரம்
அமைந்துள்ளது , பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கே வாழ்ந்துள்ளார்கள்,
பிரம்மாண்டமான வணிக சாலைகள் அந்த நகருக்கு பாதையாக அமைந்தது ,12ஆம்
நூற்றாண்டில் இந்த நகரம் தனது உச்ச நிலையை அடைந்துள்ளது ,விவசாய , வணிக,
ஆன்மீக, மக்கள்கள் அனைவரும் கூடும் இடமாக பாலைவனத்தின் மத்தியில் இந்த
இடம் அமைந்துள்ளது. ஆய்வாளர்கள் இந்த நகரத்தில் இருந்து மக்கள் சென்று
அருகமையில் உள்ள கிராமங்களில் குடியமர்ந்து விட்டதாக சொல்கிறார்கள்,
ஆனால் அதற்கான காரணம் இன்னும் நமக்கு சரியாக தெரியவில்லை .
அவ்வாறு குடியமர்ந்த அனசாசி மக்களின் அடுத்த பிரமாண்டம் தான் மேசா வேர்டே
(Mesa Verde) இது மலை இடுக்கில் அமைந்த ஒரு அதிசய நகரம் , இது தமிழ்
நாட்டில் காணப்படும் சமணப் பள்ளிகளுக்கு ஒத்த உருவம் கொண்டது, ஆனால் இது
ஒரு நகரமாக இருந்துள்ளது. இங்கும் அனசாசி மக்கள் அதே வாழ்கை முறையை
வாழ்ந்துள்ளார்கள். ஆனால் இந்த நகரமும் ஏதோ ஒரு காரணத்தால் அழிந்து
விட்டது. இந்த மேசா வேர்டே நகருக்கு அருகாமையில் அனசாசி மக்களால்
கட்டப்பெற்ற சூரிய கோவில் எனும் இடம் உள்ளது. அது இவர்கள் இயற்கை வழிபாடை
பழக்கமாக கொண்டவர்கள் மற்றும் விண்ணியல் துறையில் தேர்ச்சிப்பெற்றவர்கள்
என்பதற்கு சான்றாக உள்ளது. இவர்களும் ஸ்பெயின் வந்தேறிகள் அமெரிக்க
கண்டம் வரும் வரை கிராமிய வாழ்க்கை முறையில் சிறப்பாக வழ்ந்ததாக
தெரிகிறது..வாழ்ந்துக் கெட்ட இனங்களின் கண்ணீர் கதைகள் தொடரும்..
- பாரி சாலன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக